Friday 21 September 2012

The Usual Suspects - திரை விமர்சனம்


மிஸ்டரி(Mystery)வகை திரைப்படங்களில் மிகச் சிறந்த படமான " The Usual Suspects " திரைப்படத்தை  Bryan Singer இயக்கியுள்ளார். முக்கிய அம்சமான திரைக்கதையை Christopher McQuarrie எழுதியுள்ளார்,  Gabriel Byrne(Keaton), Kevin Spacey (Verbal Kint) , Chazz Palminteri ( Agent Kujan) மற்றும்  பலர் நடித்துள்ளனர். சிறந்த நடிகர்(Kevin Spacey) மற்றும் சிறந்த திரைக்கதைக்காக( Christopher McQuarrie) இரண்டு ஆஸ்கார் அவார்ட்ஸ் வென்றுள்ளது. IMDB டாப் 250-யில் 27 -வது இடத்தை பிடித்துள்ளது.


Kevin Spacey-க்கு இத்திரைப்படத்திற்காக முதல் ஆஸ்கர் கிடைத்தது. இரண்டாவது அவார்ட் American Beauty என்ற படத்திற்காக கிடைத்தது. அவருடைய மற்ற சில புகழ் பெற்ற படங்கள் L.A Confidential ,The Life of David Gale (நம்ம ஊரு விரும்மாண்டி படம்  இந்த படத்தோட தழுவல் ) , Se7en(அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்).
இந்தப்படத்தை நாம் மிக நுணுக்கமாக காட்சிகளை கவனித்தால் கூட நம்மால் முடிவு என்ன என்பதை கணிக்கவே முடியாது. அதிர்ச்சியான அந்த முடிவை தெரிந்த பிறகு, நமக்கு படத்தை rewind பண்ணி பார்க்கலாம் என்று தோன்றும். படம் முழுவதும் மிஸ்டரி முடிச்சுகள் தான்.படத்துடன் சேர்ந்து நாமும் மிக வேகமாக பயணிப்போம்.


படத்தொகுப்பாளர் மிக அருமையாக படத்தினை தொகுத்து இருப்பார். சில காட்சிகள் நமக்கு குழப்பமாகவே இருக்கும் முடிவு தெரியும் வரையில். பல தடவை இந்த படத்தை நான் பார்த்து இருந்தாலும், எப்போது பார்த்தாலும் என்னை இந்த படம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். மிக அருமையாக  திரைக்கதை அமைக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.


இந்த படத்தில் கதை என்று ஒன்றுமே கிடையாது. படத்தின் முழு பலம் மிக அருமையான புதுமையான திரைக்கதை மட்டுமே. நடந்த  ஒரு சம்பவத்தை பற்றி வெர்பல்(Kevin Spacey) என்பவன் பார்வையில் சொல்லப்படுகிறது, நம்ம ரஷோமான் படம் போல அவன்  கூறும் தொகுப்பே  இத்திரைப்படத்தின் கதை என்று கூட கூறலாம். கெவின் ஸ்பசெயின் நடிப்பு பிரமாதம். அவரது நடிப்புக்காகவே இந்தப்படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட ஐந்து பேரில் யார் குற்றவாளி என்பதை போலீஸ் கண்டுபிடித்தாதா? என்பது தான் கதை.


சரி அந்த ஸ்மார்டான கதை என்ன என்ற பார்ப்போம். படத்தின் முதல் காட்சியில் முகம் தெரியாத கெய்செர்(Keyser) என்பவன் கீட்டனை(Keaton) சுடுகிறான். அத்தோடு அங்கு இருக்கும் வெடிமருந்துகளுக்கு தீ வைத்து செல்கிறான். இதனால் அந்த இடம் முற்றிலும் வெடித்து சிதறுகிறது. மறு நாள் போலீஸ் அந்த இடத்திற்கு செல்லும் பொது தான் நமக்கு தெரிகிறது வெடித்தது கப்பல் என்று. இந்த கேசை விசாரிக்க ஏஜென்ட் Kujan என்பவன் நியமிக்க படுகிறான். இந்த சம்பவத்தில் அனைவரும் உயிர் இழக்கிறார்கள் இரண்டு பேரை தவிர. ஒன்று வெர்பல் கின்ட் ( Verbal Kint) என்பவன் மற்றொருவன் ஒரு ஹங்கேரிய கிரிமினல். பலத்த தீ காயம் அடைந்த அவனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை  அளிக்கிறார்கள். வெர்பலை போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்கும் போது தனக்கு ஒன்றும் நேராமல் பார்த்துக்கொண்டால் நடந்ததை கூறுவதாக சொல்கிறான் , நடந்ததை எழுதியும் கொடுக்கிறான்..ஆனாலும் Kujan அவன் வாயால் நடந்ததை முழுவதுமாக கூறுமாறு வலியுறுத்துகிறான்.சம்பவம் நடந்த நாளில் இருந்து ஐந்து வாரம் முன்னர் என்னென்ன நடந்தது என்று கூற ஆரம்பிக்கிறான். படத்தில் வெர்பல் கூறும் flashback மற்றும் நிகழ்காலத்தில் நடப்பவை மாறி மாறி வரும்.


Kaeton, McManus, Fenster , Hovkney மற்றும் Verbal (கால் சற்று ஊனம் )ஆகிய ஐந்து கிரிமினல்களை ஒரு ஆயுதம்  கடத்தல் கேசுக்காக ஒரே செல்லில் விசாரணைக்காக  வைக்கிறார்கள். ஜெயில்  செல்லில் இருக்கும் போது McManus மற்றவர்களை சம்மதிக்க வைத்து கடத்தல்காரர்களிடம்  இருந்து போதை பொருட்களை  கொள்ளை  அடிக்க திட்டம் தீட்டுகிறான். வெற்றிகரமாக ஐவரும் சேர்ந்து கொள்ளையும் அடிகிறார்கள். கொள்ளை அடித்த பொருட்களை ரெட்ப்பூட்(RedFoot) என்பவனிடம்  விற்க Los angeles நகருக்கு ஐந்து பேரும் செல்கிறார்கள். அங்கு ரெட்ப்பூட் வேறொரு வேலை இருப்பதாகவும் வைர வியாபாரியிடம் இருந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்று சொல்கிறான். சரி என்று கொள்ளை அடிக்க போகும் அவர்கள் வியாபாரியை கொன்று விட்டு பெட்டியை பார்க்கும் பொது போதை பொருள் இருக்குமே தவிர நகையோ பணமோ இருக்காது. கோபத்தோடு ரெட்ப்பூட்டை பார்க்க செல்லும் அவர்களிடம்  தனக்கு இந்த வேலை ஒரு lawyer கோபயாஷி என்பவன் மூலமாக வந்ததாகவும் அவனை சந்தித்ததில்லை என்றும், கோபயாஷி இவர்களை சந்திக்க விரும்புவதாகவும் கூறுகிறான். அவனை சந்திக்க இவர்களும் ஒப்புகொள்கின்றனர்.



கோபயாஷி அவர்களை சந்தித்து , அவனுடைய பாஸ் கெய்செர் அனுப்பியதாக கூறுகின்றான். ஐவரும் அவர்களுக்கே தெரியாமல் கெய்செர்ருடைய பொருட்களை கொள்ளை அடித்துள்ளதாகவும் அதற்க்கு கைமாறாக , ஒரு வேலை செய்ய வேண்டும் என்று கூறுகின்றான். அது என்ன என்றால்  ஒரு கப்பலில் கெய்செரின் விரோதிகள் 91 மில்லியன் டாலர்ஸ் மத்திபுள்ள போதை பொருட்களை  வைத்துள்ளதாகவும் . அந்த போதை பொருட்களை  அழிக்க வேண்டும் என்பதே . விரும்பினால் அந்த போதை பொருட்களை வாங்கவருபவர்களிடம் இருந்து 91 மில்லியன் டாலர்ஸ் பணத்தை கொள்ளை அடித்து  கொள்ளலாம் என்று கூறி விட்டு செல்கிறான்.


அன்று இரவு தப்பித்து செல்ல முயலும் 5-ல் ஒருவனான் பின்ச்டேரை(Fenster) சுட்டு கொன்று விடுகிறார்கள் கெய்செர் ஆட்கள்.. கோபயாஷியை பழி வாங்க அவனிடத்திற்கு சென்று லிப்டில் அவனுடன் வரும் இரண்டு பேரையும் கொன்று அவனை பிடித்து வருகிறார்கள்.  பின்ச்டேரை கொலை செய்ததிற்காக  அவனை சுட போகும் பொது, கீட்டனின் மனைவி  ஒரு மீட்டிங்காக இங்கு வந்திருப்பதாகவும், அவனை கொன்றால் அவளையும் கொன்று விடுவதாக கூறுகிறான் கோபயாஷி. மேலும் அந்த நான்கு பேரின் நெருக்கமானவர்கள் பேரை கூறி இந்த வேலையை செய்யாவிட்டால் அனைவரையும் கொன்று விடுவதாக கூறுகிறான். வேறு வழியன்றி கப்பலில் உள்ள போதை பொருட்களை தேடி நான்கு பேரும் செல்கின்றனர்.


அப்பொழுது கீட்டன், வெர்பலிடம் இடம் அவனை அவர்களுடன் வரவேண்டாம் என்றும் ஒரு வேலை அவனுக்கு ஏதாவது நடந்தால் அவன் மனைவிக்கு நடந்ததை கூறவும் அந்த பணத்தை அவளிடம் ஒப்படைக்கவும் சொல்கிறான்.
போதை பொருட்களை தேடி செல்லும்  அவர்கள் கெய்செரிடம் மாட்டி கொண்டதாகவும் கெய்செர், கீட்டனை சுட்டதை பார்த்ததாகவும் கூறகின்றான். கெய்செர் இங்கு வந்து தன்னை கொலை செய்வான் என்றும் கூறுகிறான் வெர்பல். இதற்கிடையில் மருத்துவமனையில் உள்ளவன் அந்த கப்பலில் போதை பொருட்கள் இல்லை என்றும் கெய்செரை பார்த்ததாகவும் அவன் முக அடையாளங்களை கூற, ஒரு போலீஸ் அதிகாரி அவன் உருவத்தை வரைய ஆரம்பிக்கிறான். அந்த புகைப்படத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைகிறார்கள்.


உண்மையில் கெய்செர் யார்? வெர்பல் கூறியது போல அனைவரும் அந்த  கப்பலில் இறந்து விட்டார்களா? உண்மையில் கீட்டன் இறந்து விட்டானா? கப்பலில் போதை பொருட்கள் இல்லை என்றால் எதற்காக அவர்களை கப்பலுக்கு கொள்ளை அடிக்க சொல்கிறான் கெய்செர்? நீங்கள் சற்றும் எதிர்பார்காத திருப்பங்களுடன் மிக மிக சுவாரசியமான கிளைமாக்ஸ் பாருங்கள். அசந்துவிடுவீர்கள்.

வெர்பல் , கெய்செர் பற்றி கூறும் ஒரு சின்ன பிளாஷ்பாக்கில் The greatest trick the Devil ever pulled was convincing the world he didn't exist” என்று கூறுவான். இந்த வரிகள் கிளைமாக்ஸ் காட்சியில் sync ஆகும் போது நம்மிடம் கைத்தட்டல் வாங்கிவிடும்.


படத்தில் ஒரு காட்சியில் ஐவரையும் ஒரு வரிசையில் நிற்க வைத்து ஒரு டயலாக்கை சொல்ல சொல்வார்கள். ஐந்து பேரும் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள். சொல்லும் விதமே சிரிப்பை வரவைத்து விடும். ஆனால் ஒரிஜினலாக  இந்த காட்சியை சீரியஸ் காட்சியாக எடுக்க முடிவுசெய்தார்களாம். பல டேக் எடுத்தும் சரியாக வராததால் காமெடி காட்சியாக மாற்றி விட்டார் இயக்குனர்.


படத்தில் வெர்பலை விசாரிக்கும் போது அவன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் எப்படி உண்மையை வாங்க வேண்டும்  என்று தெரியும் என்று Kujan கூறிவிட்டு 3 குற்றவாளிகளை ஒரே  செல்லில் இரவு அடைத்து வைத்தால் விடிந்ததும் கொலை செய்தவனை கண்டுபிடிக்க முடியும் என்று அவன் கூறும் விளக்கம் அருமை.


படத்தில் முதல் 20 நிமிடங்கள் சற்று பொறுமையாக போகும். கதைக்குள் நுழைந்துவிட்டால் விறுவிறுப்பு தொற்றிக்கொள்ளும். நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ், தெளிவான அதே சமயம் சுவாரசியமான திரைக்கதை , கதையில் வரும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு எல்லாமே புதுமை. மிஸ் பண்ணாம பாருங்க. ஒரு நல்ல அனுபவமா இருக்கும் இந்த திரைப்படம்.

Wednesday 5 September 2012

There Will Be Blood - திரை விமர்சனம்


Paul Thomas Anderson இயக்கிய இத்திரைப்படத்தில் Daniel Day-Lewis (Daniel Plainview), Paul Dano( Eli Sunday) மற்றும் பலர் நடித்துள்ளனர்.  Upton Sinclair's எழுதிய ஆயில்(Oil 1927) என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. 8 ஆஸ்கார் அவார்ட்ஸ்-க்கு பரிந்துரைக்கப்பட்டு சிறந்த நடிகர் (Daniel Day-Lewis) மற்றும் சிறந்த ஒளிப்பதிவிற்காக (Robert Elswit) 2 ஆஸ்கார் அவார்ட்ஸ் வாங்கியது. IMDB டாப் 250- யில் 177-வது இடத்தை பிடித்துள்ளது.


நம்ம படத்தோட ஹீரோ 4 முறை சிறந்த நடிகருக்காக ஆஸ்கார் அவார்ட்ஸ்க்கு பரிந்துரைக்கப்பட்டு 2 முறை( There will be Blood & My Left Foot) வென்றுள்ளார். மிகவும் திறமை வாய்ந்த நடிகர். இவரோட புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரா இந்த திரைப்படத்தில்  டேனியல் என்ற  ரோலில் நடித்துள்ளார் என்று  நம்பவே முடியவில்லை. இவர் நடிச்ச சில  பிரபலமான படங்கள் Gangs of New York , In the Name of the Father , The Last of the Mohicans etc.. (கடைசியாக சொன்ன இரண்டு படங்களில் இவரது நடிப்புக்கு நான் ரசிகன்). டேனியல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்த படமே எடுத்திருக்க மாட்டேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் இயக்குனர். டேனியல் நடிப்பு நம்மை அப்படியே கதைக்களத்திற்குள் புகுத்தி விடும்.அட்டகாசமான நடிப்பினால் நம்மை கட்டிப்போட்டுவிடுவார் டேனியல்.


படத்தில் கதை என்று பெரிதாக ஒன்று கிடையாது. புயல் எப்படி அடிக்கும்? நமக்கெல்லாம் தெரியும் தானே நண்பர்களேபுயலுக்கு முன்னும் அமைதி பின்னும் அமைதி...அது போல தான் இந்த படமும்...அமைதியாக, சுகமான காற்றை போல ஆரம்பித்து சூரவளியாக முடியும். இந்தப்படத்தை பார்ப்பவர்கள் இது தான் முடிவு என்று சொல்லவே முடியாது. கதாப்பாத்திரங்களின் செயல்கள் நம்மை அதிசயப்படுத்தும். படத்தின் முடிவை கணிக்கவே முடியாது.


ஆயில் வளங்களை தேடி அலையும் ஒரு மனிதன், தன் கனவு என்று நினைக்கும்  வேலையில் மற்றும் குறிக்கோளில்  எப்படி முன்னேறுகிறான் என்பது தான் படம். ஆனால் ஒன்றும் இல்லாத கதையை சுவாரசியமாக திரைக்கதையில் சொன்ன விதம் மிக மிக அருமை. 1900-களில் நடக்கும் கதையை, 2007-யில் செட் போட்டு எடுத்திருக்கும் விதம் நம்மை பிரமிப்பு அடையச்செய்யும். மிக நேர்த்தியான கலை, செட் என்றே சொல்லமுடியாத அளவிற்கும் மிக அற்புதமாக  இருக்கும். படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு  நம்மை 1900 - க்கே கூட்டிசென்றுவிடும்.

வறண்ட நிலப்பகுதில் வெள்ளி சுரங்கம் அமைக்க ஆசைபடும் டேனியல், தற்செயலாக தோண்டும் போது ஆயில் (crude) கிடைகிறது. வெள்ளி  தேடும் வேலையை விட்டுவிட்டு , ஆயில் எடுக்கும் வேலையை செய்கிறான் டேனியல். அதற்காக சில பணியாட்களை வேலைக்கு அமர்த்தி ஒரு சிறிய ஆயில் கம்பெனி ஆரம்பிக்கிறான். ஒரு நாள் ஆயில் பிரஷர் தாங்காமல் மேலே ஆயில் பீச்சி அடிக்க அதில் ஒருவன் இறந்துபோகிறான்.அவனின் கைக்குழந்தையை தன் குழந்தையாக வளர்கிறான் டேனியல். அந்த சிறிய கம்பெனி தந்த லாபத்தால், இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி அடைகிறான். அவன் கம்பெனிக்கு பார்ட்னராக   தன் வளர்ப்பு மகனை சேர்த்துகொள்கிறான்.


சில வருடங்களுக்கு பின்னர், எலை சண்டே என்பவன், கலிபோர்னியாவில் உள்ள  தன் நிலத்தில் ஆயில் உள்ளதாகவும், அந்த இடத்தை விற்க தயாராக உள்ளதாகவும், இடத்தை பார்க்க அழைக்கிறான். எலை சண்டேவிற்கு அவனை போலவே ஒரு சகோதரன் உண்டு, இரட்டை பிள்ளைகள் , (அவன் பெயரும் எலை சண்டே தான்), இந்த வறண்ட இடத்திலல் உள்ள ஒரு சிறிய சர்ச்-ல் பாஸ்டர் ஆக பணிபுரிகிறான். சர்ச்காக $ 5000 தந்தால் மட்டுமே இடத்தை தருவதாக  கூறுகிறான், இருப்பினும் அவனின் தந்தையை பழைய விலைக்கே  சமாதிக்க வைத்து இடத்தை வாங்கிவிடுகிறான் டேனியல். ஆயில் எக்ஸ்ப்ளோர் செய்யும்  போது , பிரஷர் தாங்காமல் ஆயில் பீச்சி அடிக்க அவன் மகனுக்கு காது கேட்காமல் போகிறது.

அந்த இடத்தை சுற்றி உள்ள மற்ற  இடங்களையும் வாங்க நினைக்கும்  டேனியல். அந்த இடத்தில் ரோடு, பள்ளி போன்ற வசதிகளை மக்களுக்கு செய்து தருவதாக கூறி மற்றவர்களிடம் இருந்து அனைத்து இடங்களையும் வாங்கி விடுகிறான் Bandy என்பவனின் இடத்தை தவிர, காரணம் இடத்தை விற்க விருப்பமில்லை.  இதற்கிடையில் டேனியலின் சகோதரன் என்று சொல்லிக்கொண்டு ஹென்றி என்பவன் அவனை பார்க்க வருகிறான். அவன் சொல்வது முன்னுக்கு பின் முரணாக இருந்தாலும் அவனிடம் ஒன்றும் கேட்காமல் அவனை சேர்த்துகொள்கிறான்.  அவனின் வளர்ச்சியை பார்க்கும் standard ஆயில் கம்பெனி அவனின் கம்பெனியை  வாங்க நினைக்கிறது. ஆனால் அவனோ, Union Oil உடன் இணைந்து பூமியின் கீழ் Pipelineஅமைத்து, கலிபோர்னியா கோஸ்ட்க்கு ஆயில் ஏற்றுமதி செய்ய திட்டமிடுகிறான்.


ஒரு நாள் ஹென்றியை அழைத்து கொண்டு குதிரையில் மலைபக்கம் செல்லும் டேனியல் Bandyக்கு சொந்தாமான இடத்தில் வந்து இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருகிறார்கள். அங்கே ஹென்றியை தன் சகோதரன் இல்லை என்று ஹென்றி வாயால் சொல்லவைக்கும் டேனியல் அவனை கொன்று அங்கே புதைத்துவிடுகிறான். அசதியில் அங்கே உறங்கியும் விடுகிறான். அங்கு வரும் Bandy நடந்தவற்றை அறிந்துகொண்டு, இந்த விஷயத்தை வெளியே சொல்லகூடாது என்றால் சர்ச்க்கு வந்து பாவமன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொல்கிறான். வேறுவழி இல்லாமல் Bandy உடன் சர்ச்க்கு செல்லும் டேனியலை  கன்னத்தில் அறைந்து அசிங்கபடுத்துகிறான் சர்ச் பாஸ்டர் எலை.இதற்கு டேனியல் எப்படி எலையை பழிவாங்கினான்? அவன் விரும்பியபடி Pipeline அமைத்தானா? தன் வளர்ப்பு மகனுக்கு , அவன் உண்மையான தந்தை இல்லை என்பது தெரிந்ததா? அவன் விரும்பியபடி ஆயில் பிசினஸ்சில் தனித்து நின்று வெற்றி அடைந்தானா? இவை அனைத்திற்கு படத்தை பாருங்கள்.


தன் ஆயில் பிசினஸ்சில் வேறு யாரையும் பார்ட்னராக வைத்து கொள்ளாமால் தன் வளர்ப்பு மகனையே சேர்த்துக்கொள்ளும் டேனியல், தான் சம்பாதிக்கும் சொத்துகளை தானே ஆள வேண்டும் என்ற எண்ணம் தெரிகிறது. ஆனால் பின்னர் மற்றொரு  காட்சியில், பிசினஸ் பேசுவதற்காக தன் மகனை அழைத்து  செல்லும் போது , வாயை நாப்கின் வைத்து மறைத்துக்கொண்டு பேசுவான் டேனியல். காரணம் காது கேட்கவில்லை என்றாலும் உதட்டின் அசைவுகளை வைத்து தன் மகன் பிசினஸ் பேச்சுவார்த்தைகளை  புரிந்து கொள்வான் என்ற எண்ணத்தில். மொத்தத்தில் டேனியல் கேரக்டர் ஸ்கெட்ச் மிஸ்டரி ஆக இருக்கும்.

தன்னை தவிர யாரும் ஆயில் பிசினஸ்-ல் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக , யாருக்கும் தன் கம்பெனி பங்குகளை விற்காமல், pipeline அமைத்து ஆயில் எக்ஸ்போர்ட்  செய்ய நினைக்கும் டேனியலின் யோசனை, வறண்ட பூமியை யாருமே வாங்க மாட்டார்கள் என்று கூறி, மிக சொற்பமான விலைக்கு வாங்கி ஆயில் எக்ஸ்ப்ளோர் செய்து பல மடங்கு லாபம் சம்பாதிக்கும் மூளை மற்றும் தான் வளர்க்கும் மகன் சொந்த மகன்  இல்லை என்ற விஷயத்தை யாருக்குமே  சொல்லாமல் ரகசியமாகவே வைத்து  இறுதியில் தன் மகனிடம் அந்த உண்மையை கூறும் விதம், அனைத்து  காட்சிகளிலும் டேனியல் பெர்பெக்ட் பிசினஸ்மென் என்று நிரூபிக்கிறார்.


ஆயில் எக்ஸ்ப்ளோர் செய்யும் போது, சில சமயம் ஆயில், அடியில் உள்ள காஸ் பிரஷர் காரணமாக மிக வேகமாக பீச்சி அடிக்கும். அப்படி ஒரு காட்சியில், ஆயில் கிணறு தோண்டி கீழே உள்ள ஆயிலை மேல எடுக்கும்  போது ஆயில் 100 அடி உயரத்திற்கு அடிக்கும். இந்த காட்சியை பார்க்கும் போது மிக பிரமிப்பாக உள்ளது. ஒளிப்பதிவு  அபாரம்.

இந்த படத்தின் இறுதி காட்சியில் டேனியல் எலைஇடம் பேசும் பொது “I Drink your milkshake” என்ற டயலாக்-கை கூறுவான். அந்த காலகட்டத்தின்  ஆல்பர்ட் என்ற Mexican Senator, ஆயில் ட்ரிப்டிங் ஊழலில் லஞ்சம் வாங்கி மாட்டிகொண்ட நபர். Teapot dome என்று அழைக்கபடும் இந்த ஊழல் தான்
இந்த ஆயில் என்ற நாவலை எழுத inspiration ஆகா அமைந்ததாம்.

ஒரு சாதாரண கதையை எப்படி மிக சுவரசியமாக சொல்ல முடியும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம்.