[The Magnificent Seven - திரைவிமர்சனம் ]
John Sturges இயக்கிய இத்திரைப்படத்தில் Eli Wallach (Calvera) , Yul Brynner (Chris Larabee Adams) , Charles
Bronson (Bernardo O'Reilly) மற்றும் பலர் நடித்துள்ளனர். Akira
Kurosawa இயக்கிய Seven Samurai என்ற ஜப்பானிய மொழி படத்தின்
ரீமேக் என்றாலும் ஒரிஜினல் படத்தை அடித்துக்கொள்ள
முடியவில்லை என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் ஒரிஜினல் செவென் சமுராய் படத்தில்
விவசாயிகளுக்கும் சமுரைகளுக்கும் இடையே உள்ள ரிலேஷன்ஷிப் மிக அற்புதமாக இருக்கும். இத்திரைப்படம் சிறந்த இசைக்காக (Elmer Bernstein) ஆஸ்கார் அவார்ட்ஸ்க்கு பரிந்துரைக்கப்பட்டது.
John Sturges, The Great Escape, Bad Day at Black Rock,The
Eagle Has Landed போன்ற
படங்களை இயக்கியுள்ளார். Eli
Wallach பற்றி என்ன சொல்வது? நடிப்புலகில் மிக பெரிய ஜாம்பவான்.
இவருடைய மாஸ்டர் பீஸ் என்றால் அது அவர் நடித்த " The Ugly" கேரக்டர் தான். Yul Bryner, The
King and I என்ற படத்திற்கு ஒரு ஆஸ்கார் வாங்கியுள்ளார். இத்திரைப்படத்தை பார்க்க முக்கிய
காரணங்கள் படத்தின் இசை, Eli Wallach மற்றும் Yul Brynner-ன் நடிப்பு.
சரி படத்தின் கதை என்ன என்பதைப் பார்போம். கல்வேரா ஒரு கொள்ளைகூட்டதின் தலைவன். அவனும் அவன் கூட்டமும் சேர்ந்து ஒரு Mexican கிராமத்தை அடிக்கடி கொள்ளை அடிகின்றனர். அறுவடை காலம் வரும் போது சரியான நேரத்திற்கு வந்து கொள்ளை அடிக்கும் அவர்கள், மறுபடியும் வருவதாக கூறிவிட்டு செல்கின்றனர். ஏழை கிராமம் என்பதால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
சரி படத்தின் கதை என்ன என்பதைப் பார்போம். கல்வேரா ஒரு கொள்ளைகூட்டதின் தலைவன். அவனும் அவன் கூட்டமும் சேர்ந்து ஒரு Mexican கிராமத்தை அடிக்கடி கொள்ளை அடிகின்றனர். அறுவடை காலம் வரும் போது சரியான நேரத்திற்கு வந்து கொள்ளை அடிக்கும் அவர்கள், மறுபடியும் வருவதாக கூறிவிட்டு செல்கின்றனர். ஏழை கிராமம் என்பதால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
அந்த ஊரின் இரண்டு விவசாயிகள் , கிராமத்தை காப்பாற்ற கௌபாய் வீரர்களை தேடி டவுனிற்கு செல்கின்றனர். அங்கு கிரிஸ்- ஐ பார்க்கும் அவர்கள், தங்கள் கிராமத்தின் கதையை சொல்லி தங்களை காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடி கேட்டு கொள்கின்றனர். சரி என்று சொல்லும் அவன், பெரிய கூட்டம் என்பதால், தனியாக செல்ல முடியாது என்று தன்னுடன் சேர்ந்து கொள்ளையர்களை விரட்ட சில கௌபாய்களை தேடுகின்றான்.
மற்ற வீரர்களை தேடி பிடிக்கும் காட்சிகளில், ஒவ்வொரு கௌபாய்-க்கும் ஒரு சின்ன இன்றோ இருக்கும். அனைத்தும் அற்புதமான காட்சிகள்.அதில் சிக்கோ என்பவன், கிரிஸ் -இன் ரசிகன். ஆதலால் தன்னையும் சேர்த்து கொள்ளுமாறு கேட்கிறான். ஆனால் அவனுக்கு அனுபவம் இல்லை என்பதால் முடியாது என்று கூறிவிடுகிறான். ஆறு கௌபாய்களோடு கிராமத்திற்கு செல்கின்றனர். வழியில் அவர்களை பின்தொடர்கிறான் சிக்கோ. கிராமத்தை அடைந்த பின்னர், கிராமத்தார் யாருமே அவர்களை வரவேற்க வரவில்லை. காரணம் யாரை பார்த்தாலும் அவர்களுக்கு பயம். அப்பொழுது, அங்கு உள்ள ஆலயத்தின் மணியை அடித்து, அவர்கள் வந்திருக்கும் நோக்கத்தை சொல்கிறான் சிக்கோ. இவனையும் சேர்த்து இப்பொழுது ஏழு கௌபாய்கள்.
கிராம மக்கள் அவர்களை நம்பாமல் தங்கள் வீட்டு பெண்களை வெளியே ஒரு
இரகசிய இடத்தில ஒளித்து வைக்கின்றனர். அவர்களுக்கு
அந்த ஏழு பேரின் மீது நம்பிக்கை இல்லை. சிறிது சிறிதாக, அவர்களை நம்ப தொடங்கும் விவசாயிகளுக்கு துப்பாக்கி
சுடுவதற்கும், அந்த கொள்ளை கூட்டம் வந்தால் எப்படி சமாளிக்கலாம் என்று
திட்டம் தீட்டுவதற்கும் சொல்லிக்கொடுகிறார்கள்.
அப்பொழுது, கல்வேரா தன் மூன்று உளவாளிகளை, கிராமத்தை நோட்டம் பார்க்க அனுப்புகிறான். ஆனால் அவர்களை கௌபாய்க்கள் கொன்று விடுகின்றனர். தன் கூடத்திற்கு உணவு இல்லை என்பதால், கிராமத்தை கொள்ளை அடிக்க வருகிறான் கல்வேரா. முன் ஏற்பாட்டுடன் இருக்கும் அவர்களை தாக்குகின்றனர் கிராம மக்களும், வீரர்களும். சில கொள்ளையர்கள் இறந்தாலும், கல்வேரா தப்பித்து சென்று விடுகிறான். அவனை தாக்கி விட்டதால், அவன் பயந்து பொய் திரும்ப வரமாட்டான் என்று நினைக்கும் கிராம மக்கள், சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால், சிக்கோ அவர்கள் கூட்டத்தில் ஒரு ஆளாக வேவு பார்த்து வந்து, அவர்கள் போகவில்லை என்றும் ஒரு பெரிய கூடமாக இருகிறார்கள் என்றும், அவர்களுக்கு உணவு இல்லை என்பதால் கிராமத்தை கொள்ளை அடிக்க எந்த நேரமும் வரலாம் என்று சொல்கிறான்.
பயந்து போகும் கிராம மக்கள், கல்வேராக்கு பணிந்து போகலாம் என்று ஒரு சிலரும், அவனை எதிர்த்து போராடலாம் என்று வேறு சிலரும் கூறுகின்றனர். ஆனால் அவர்களை தாக்கலாம் என்று கௌபாய்கள் அவர்களை தேடி கிராமத்திற்கு வெளியே செல்கின்றனர். ஆனால் அவர்களை காணவில்லை. கிராமத்திற்கு வரும் அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. கல்வேரா கிராமத்தில் உள்ள அனைவரையும் சிறை பிடித்து வைத்திருக்கிறான். இந்த மக்களுக்காக சண்டை போட இவர்கள் அருகதை அற்றவர்கள் என்றும் இந்த கிராமத்திற்குள் வர இவர்களில் சிலர் தான் உதவி புரிந்தார்கள் என்று சொல்கிறான் கல்வேரா.
அதிர்ந்து போகும் அந்த ஏழு பேரும் என்ன செய்தார்கள்? கல்வேரா அவர்களை கொன்று விட்டானா? அந்த கிராமத்திற்காக சண்டை போட வந்த அவர்களையே காட்டிகொடுத்த அந்த கிராமத்தினரை என்ன செய்தனர்? இது கிளைமாக்ஸ்.
அடிக்கடி ஒரே மாதரியான படம் பார்த்து போர் அடித்துவிட்டால் இதுபோன்ற வித்தியாசமான ஒரு western படம் பார்க்கலாம்.
தாயகம் சென்றுவிட்டதால் இந்த நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்.
























