Thursday, 12 July 2012

The Good, The Bad & The Ugly - திரை விமர்சனம்



The Good, The Bad & The Ugly - Movie Review


இந்த திரைபடத்தில் Eli Wallach (Tuco) Ugly ஆகவும் Clint Eastwood( blondie) Good ஆகவும் Lee Van Cleef(Angel Eyes) Bad ஆகவும் நடித்துள்ளனர். Serigo Leone இத்திரைபடத்தை இயக்கயுள்ளார்.
இந்த திரைப்படம் IMDB -இல் டாப் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த திரைபடத்தின் இயக்குனர் Serigo Leone இயக்கிய A fistful of dollars, For  a few dollars More, Once upon a time in West, Once upon a time in America அனைத்தும் IMDB டாப் 250 -இல் உள்ளவை . இவரை King of Western Genre என்று சொல்லலாம்.

இந்த படத்தின் மியூசிக் டைரக்டர் Ennio Morricone பற்றி சொல்லி ஆகா வேண்டும். இவர் மியூசிக் -ஐ கோப்பி அடித்தவங்க நிறைய பேர். அதில் முக்கியமானவர் நம்ம G.V Prakash ( இரும்பு கோட்டை முரடு சிங்கம் - மொத்த BGM -யும் சுட்டு இருப்பர்).


Tuco வாக நடித்திருக்கும் eli Wallach , Jack Nicholson, Marlon Brando போன்ற மிக சிறந்த நடிகர். இவருடைய நடிப்பு இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ். இவர் 1915 ஆம் ஆண்டு பிறந்தவர் . (97 நாட் அவுட் )

Clint Eastwood 4 ஆஸ்கார் அவார்ட்ஸ் வாங்கி உள்ளார் . இவர் நடிப்பை தவிர டைரக்டர் அண்ட் producer-ம் கூட. இவர் இயக்கிய  படங்கள் Millon dollar Baby, Unforgiven ஆஸ்கார் அவார்ட்ஸ் பெற்றவை.
Flags of our Fathers, Letters from Iwo Jima & Mystic River கூட இவர் இயக்கிய படங்கள் தான்.
இனி படத்தின் கதை -ஐ பார்ப்போம்.

Tuco அந்த ஊரில் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவன் தலைக்கு $2௦௦௦ என்று அந்த ஊர் போலீஸ் அறிவித்துள்ளது. Blondie-யும் , tuco -வும் ஒபந்தம் போட்டு கொள்கிறார்கள். blondie, tuco வை போலீஸ் இடம் ஒப்படைத்து காசு வாங்கி கொள்வான். பின்னர் Tuco வை தூக்கில் போடும் போது, அவனை காப்பாற்றி விடுவான் . எது வாடிக்கை.

ஆனால் Blondie இந்த partnership பை உடைக்கிறான். அதனால் இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. Tuco - வும் Blondie -யும் பாலைவனத்தை கடக்கும் போது , ஆள் இல்லாத ஒரு குதிரை வண்டி வருகிறது. அந்த வண்டியில் bill Carson என்பவன் மட்டும் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறான்.

அவன் $2௦௦,௦௦௦- ஐ மறைத்து வைத்து உள்ளதாகவும் , அந்த எடைதை பற்றி Tuco விடம் பத்தி ரகசியத்தை சொல்கிறான். தண்ணீர் கேட்கும் அவன், தண்ணீர் கொண்டு வருவதற்குள் மீதி ரகசியத்தை Blondie இடன் சொல்லிவிட்டு மடிந்து விடுகிறான். இருவரும் சேர்ந்து புதையலை நோக்கி பயணம் செய்கின்றனர்.

இரண்டு பேருக்கும் ஒருவரை ஒருவர் மனதுக்குள் பிடிக்காது என்றாலும், இருவருக்கும் ஆளுக்கு பாதி ரகசியம் தெரியும் என்பதால் சேர்ந்து பயணிக்க வேண்டிய கட்டாயம். பயணித்தின் போது கூட புதையல் ரகசியத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளவில்லை.

இந்த சமயத்தில் அமெரிக்க -வில் சிவில் போர் நடக்கிறது. இருவரும் கைதிகளாக மாட்டிகொள்கின்றனர். Prisoner’s Camp - க்கு அனுப்படுகின்றனர். அந்த Camp - இல் Angel eyes கேப்டன் - ஆகா உள்ளான்.

Tuco விடம் உள்ள பாதி ரகசியத்தை தெரிந்து கொள்கிறான் Angel eyes. ஆனால் மீதி பாதி ரகசியம் Blondie- க்கு தெரியும் என்பதால் Blondie - ஐ உயிரோடு விட்டுவைகிறான். இருவரும் அவனிடம் இருந்து தப்பித்து புதையலை நோக்கி பயம் செய்கிறார்கள். இந்த மூன்று பேரில் யாருக்கு புதையல் கிடைத்தது என்பது தான் மீதி படம்.

இந்த திரைப்படம் இத்தாலிய மொழி படமான Ll Buono Il brutto, Il Cattivo என்ற படத்தின் ரீமேக். இந்த படத்தில் bridge ஒன்றை தகர்க்கும் காட்சியில் உண்மையாகவே wooden bridge- ஐ கட்டி பின்பு explosives வைத்து தகர்த்து இருகிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் வரும் 5௦௦௦ -துக்கும் மேல் இருக்கும் கல்லறைகள் செட் போட்டு எடுக்க பட்டது.

படம் ஆரம்பித்து 10.5 நிமிடங்கள் வரை டயலாக் எதுவும் எல்லை . இந்த படம் முழுவதும் ஸ்பெயின் -இல் உள்ள பாலைவனத்தில் படமாக்க பட்டது.

இந்த படத்தை நிறைய தமிழ் பட இயக்குனர்கள் காப்பி அடித்துள்ளனர். காதலன் படத்தில் வரும் முக்காபுல பாடல், இரும்பு  கோட்டை முரட்டு சிங்கம் படம் etc..
மிகவும் ஸ்டைலிஷ்- ஆன இந்த திரைப்படம் $1,2௦௦,௦௦௦ செலவில் எடுக்கப்பட்டு அமெரிக்கா- வில் மட்டும் $19,௦௦௦,௦௦௦ வசூல் சாதனை படைத்துள்ளது.























11 comments:

  1. ஏன் மறுபடி மீள்பதிவு?

    ReplyDelete
  2. நண்பா font பிரச்சனை என்று எனது 2 பதிவுகளை பற்றி நண்பர்கள் கூறினார்கள் அதனால் font மாற்றி மறுபடியும் போஸ்ட் செய்தேன்,

    ஓரிரு நாட்களில் முன்னால் பதிவிட்டதை erase செய்து விடுகிறேன்.

    ReplyDelete
  3. இதன் BGM எனக்கு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  4. நீங்கள் நிறைய படத்தில் இந்த BGM - ஐ கேட்கலாம்

    ReplyDelete
  5. one of the best movie in my collection and my request people should know there are 2 part before for this movie they should watch that also

    ReplyDelete
  6. வெஸ்டர்ன் படங்களில் மாஸ்டர்பீஸ்...குட்,பேட்&அக்ளி.
    எனக்கு மிகவும் பிடித்தமானது.
    மீண்டும் பார்க்க வேண்டும்...என்ற ஆவலை ஏற்ப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  7. எத்தனை முறை வேடுமானாலும் பார்க்கலாம் இந்த படத்தை!
    நம்ம ரஜினி சார் clint Eastwood-ன் ரசிகராம்!!!

    ReplyDelete
  8. இப்படமென்ன கிளின்ற்றும் என்றும் என் அபிமானத்துக்குரியவர். இப்படப்பிடிப்பு நடந்த ஸ்பெயின் பாலைவனத்துக்கு என் சக ஊழியர் சென்று வந்து படங்கள் காட்டினார்.
    அந்த அறிமுக இசை விசில் சத்தம் மறக்கமுடியாது.

    ReplyDelete
  9. அவர் ஸ்டைல் என்றுமே சூப்பர் தான் நண்பா...

    ReplyDelete
  10. விமர்சனம் நன்று, கண்டிப்பா இது ஒரு மாஸ்டர் பீஸ் தான். பதிவுல Amount எல்லாம் துண்டு துண்டா இருக்கு?
    BGM மற்றும் கிளின்ட் ஈஸ்த்வூடிற்காக எதை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

    ReplyDelete
  11. நானும் Clint Eastwood Fan நண்பா..

    ReplyDelete