To Kill A Mocking Bird - திரை விமர்சனம்
Robert Mulligan இயக்கிய இந்த திரைப்படத்தில் Gregory
Peck ( Atticus Finch ), Robert Duvall (Boo Radley) ,Mary Badham (Scout), Phillip Alford ( Jem) மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 3 ஆஸ்கார் அவார்ட்ஸ் (சிறந்த நடிகர் , சிறந்த ஆர்ட் டைரக்சன் மற்றும் சிறந்த
திரைக்கதை) –ம், IMDB
top 250 -ல் 63 -வது இடத்தையும் பெற்றுள்ளது.
இந்த படம் வெளிவந்த ஆண்டில்(1962) அமெரிக்காவில் இனவெறி மிக அதிகமாக இருந்தது.அந்த
சமயத்தில் இப்படி ஒரு படத்தை தந்த பட குழுவிற்கு ஒரு வணக்கம் போடலாம்.
இந்த
படத்தில் " To Kill a
Mocking bird" என்ற தலைப்பிற்கு ஏற்றபடி திரைப்படத்தின் முடிவில் வரும் விளக்கம்
மிக அருமை. இனவெறி மற்றும் ஒருவரை நாம் எப்படி தவறுதலாக புரிந்து கொள்கிறோம்,
விளைவுகள் என்ன
என்பதையும் தெளிவாக புரிவது போல் சொல்கிறது. இந்த படத்தின் முக்கிய கரு அட்டிகஸ் என்ற
கதாபாத்திரம் தன் குழந்தைகளுக்கும் அவன் சமூதாயத்திற்கும்
நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கையின்மை பற்றி கூறுவது.
நம் இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கி அஞ்சலி படத்தில் வரும் இரு குழந்தைகளின்( தருண் & ஸ்ருதி ) கேரக்டர் ஸ்கெட்ச் இந்த படத்தின் ( ஜெம்& ஸ்கௌட்) உடைய காப்பி ஆகும்(ஒரு வேலை inspiration ஆக கூட இருக்கலாம்).
இந்த படத்தை பார்ப்பதற்கு முக்கியமான காரணங்கள் இந்த படத்தின் இயக்குனர்,
Gregory Peck மற்றும் ஒளிப்பதிவு. படத்தில் வரும் அனைத்து காட்சிகளுமே
செட் போட்டு எடுக்கப்பட்டவை.
இந்த படம் சமூகத்தில் புரையோடி இருக்கும் இனவெறி, ஏற்ற தாழ்வுகள் போன்றவற்றை கண்ணாடி போல
பிரதிபலிக்கிறது.
அந்த காலத்தில் கருப்பு வெள்ளை இன வெறி கொடுமை மிகவும் அதிகம்.
கருப்பு இன மக்கள் வீட்டு வேலை மற்றும் அடிமட்ட வேலை
செய்வதற்கு மட்டும் தான் பயன்படுத்தினார்கள். உயரிய வேலைகளில் (
நீதிபதி, மருத்துவர்,
அரசு வேலைகள்
etc ) வெள்ளை
இன மக்கள்
மட்டும் தான் இருப்பார்கள்.
அந்த காலத்தில் இனவெறிக்கு எதிராக பாடுபட்டவரில் முக்கியமாவர் Malcolm X.அவரை கொலைசெய்துவிட்டார்கள். கருப்பு இன மக்களுக்காக
பாடுபட்ட கருப்பரையே கொன்றுவிட்டார்கள் என்றால் அவர்களுக்காக
பாடுபட்ட வெள்ளை இனத்தவரை விட்டுவைப்பார்களா? இந்த படத்தின் இன்னும் ஒரு முக்கிய
அம்சம் வீரம், துணிச்சல் மற்றும் Prejudice - என்று சொல்லபடுகிற தப்பான அபிப்பிராயம் கொள்ளுதல் பிறரை பார்க்கமலே..
வேட்டையாட துப்பாக்கி வாங்கி தரும்படி கேட்கும் தன் மகனிடம் ,
To kill a mocking bird என்பதற்கு ஒரு விளக்கத்தை தருகின்றான் . “Mocking bird” என்பது ஒரு அழகான பறவை. அது யாருக்கும் எந்த
தீமையும் செய்யாது, அது யார் வீட்டு தோட்டத்தையும் அழிக்காது. அது
தன் மனதில் தோன்றும் மிக அழகான ராகத்தை மனிதர்களுக்காக பாடுகின்றது.
அப்படிப்பட்ட மனிதனை சந்தோஷபடுத்தும் பறவையை கொல்வது பாவம் என்று கூறுகிறான்.
கதைக்கு வருவோம்.. அட்டிகஸ் அந்த ஊரில் ஒரு வக்கீல் மட்டும் அல்ல இரு குழந்தைகளுக்கு
( ஜெம் & ஸ்கவுட் )தந்தை. அவன் வீட்டின் பக்கத்துக்கு வீட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட பூ(boo) எனும் பெயர்கொண்ட ஒருவன்
இருக்கிறான்.
அவனை பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் அவனை பற்றி மற்றவர்கள் சொல்வைதை மட்டும் கே ட்டவர்கள்
கூட அவனை பற்றி மிகைபடுத்தி பேசுகிறார்கள். இரு குழந்தைகளுடன் விடுமுறைக்கு வரும் டில் என்ற சிறுவனும்
சேர்ந்து கொள்கிறான். பூ வை பார்க்க வேண்டும் என்ற ஆசை
அவர்களுக்கு வருகின்றது. இதற்கு இடையில் அந்த ஊரில் கருப்பு இனத்தை
சேர்ந்த ஆள்(டாம்)
வெள்ளை இன பெண்ணை கற்பழித்ததாக குற்றம் சாட்டபடுகிறான். அவனுக்காக வாதட யாரும் முன் வரவில்லை.
அந்த ஊரின் ஷெரீப் அட்டிகஸ் இடம் வந்து இதை பற்றி
கூறியதும், அவனுக்காக வாதாடுவதாக ஒப்புகொள்கிறான்.
அந்த பெண்ணின் தந்தை இதை கேள்விப்பட்ட உடன் அட்டிகஸ் -ஐ மிரட்டுகிறான். அவன் மட்டுமல்ல அந்த ஊரில் உள்ள வெள்ளை இன மக்கள் அனைவருமே அட்டிகஸ் ஐ மிரட்டினாலும் அதை துணிச்சலாக சமாளிக்கிறான் அட்டிகஸ். இந்த சமயத்தில் கோர்ட்டில் அந்த கேஸ் trial-க்கு வருகின்றது . அந்த ஊரில் உள்ள அனைவரும் கோர்டுக்கு வாதத்தை பார்க்க ஆவலுடன் வருகின்றார்கள். கோர்ட்டில் வாதாடும் அட்டிகஸ் தன் வாதத்திறமையால் டாம் குற்றம் அற்றவன் என்று நிரூபிக்கிறான்.
ஆனாலும் 12 பேர் கொண்ட ஜுரி -யில் அனைவரும் வெள்ளை இன
மக்கள் என்ற காரணத்தினாலும், அவர்கள் முடிவு தான் நீதிபதியின் தீர்ப்பு என்பதாலும் டாம் குற்றம் புரிந்தவன் என்று
சொல்கின்றனர். அப்பீல்
செய்யலாம் என்று முடிவிற்கு வரும் அட்டிகஸ் வீட்டிற்கு சென்றவுடனேயே , ஷெரிப் வந்து, ஜெயிலுக்கு செல்லும் வழியில் டாம் தப்பி ஒடமுயன்றதால்
அவனை சுற்று விட்டார்கள், அவன் இறந்துவிட்டான் என்று கூறுகிறார்.
இதற்கு காரணம் டாம் நிரபராதி என்று எளிதில் நிரூபிக்கப்பட்டு வெளியே வந்து
விடுவான் என்பதால்.
சில மாதங்களுக்கு பிறகு பள்ளியில் நடக்கும் ஹலோவீன்
விழாவிற்கு அவன் இரு பிள்ளைகளும் சென்று இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்புகிறார்கள். வரும்
வழியில் ஜெம் மற்றும் ஸ்கௌட் -ஐ ஒருவன் தாக்குகிறான் . அவன் யார்? குழந்தைகள் உயிர் பிழைத்தார்களா?
அவர்களை யார்
காப்பற்றியது? அந்த வெள்ளை இன பெண்ணிடம் உண்மையிலே யார் தப்பாக நடந்து கொண்டது?
இந்த படத்தின் தலைபிற்கும்
கிளைமாக்ஸ் -கும் என்ன சம்பந்தம்? திரைப்படத்தை பார்த்து தெரிந்து
கொள்ளுங்கள்.
இந்த படத்தில் வரும் கோர்ட் காட்சி (9
நிமிடங்கள்)ஒரே டேக் -இல் எடுக்கப்பட்டவை. இந்த காட்சி நிறைய
கோர்ட் காட்சிகளுக்கு ஒரு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. அட்டிகஸ் வாதாடிய பின்பு கருப்பு இன மக்கள்
மட்டும் முதல் தளத்தில் இருப்பார்கள். அனைவரும் ஏழுந்து நின்று
அட்டிகஸ்-க்கு
மரியாதை தருவார்கள். இந்த காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.
இந்த படத்தின் மூலம் ஒருவரை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றால்
அவரின் நிலைக்கு போனால் மட்டுமே புரிந்துகொள்ள
முடியும் என்பது விளங்குகிறது. நீங்கள் கட்டாயம் இந்த படத்தை ஒரு முறையாவது
பார்க்கலாம்.
அந்த தகுதி இந்த படத்திற்கு நிறையவே இருக்கிறது.
இந்தப்படத்தில் அட்டிகஸ் ஆக நடித்த Gregory Peck 5 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு
இந்த படத்திற்கு ஆஸ்கார் வென்றவர்.
இந்தப்படத்தில் பூ - வாக நடித்த Robert Duvall-க்கு இது தான் முதல் படம். 5
முறை ஆஸ்கருக்கு
பரிந்துரைக்கப்பட்டு ஒரு முறை வென்றவர். மிகச்சிறந்த நடிகர்.
இந்தப்படத்தில் ஸ்கௌட் ஆக நடித்த Mary Bhadham மிகச்சிறிய வயதில்(10 ) ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.
$2,000,000 செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் $13,129,846 வசூல்செய்தது.
விமர்சனம் நல்லாயிருக்கு பாஸ்..
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி நண்பரே.
Deleteதொடர்ந்து படியுங்கள்!!!
ஏன் திரட்டிகளில் இனைக்கவில்லை,,
ReplyDeleteதிரட்டியில் எப்படி இணைப்பது என்று தெயரியவில்லை நண்பரே! உதவுங்கள்!
Deletehttp://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html
Deletenalla padangal.....atharku ungal vimrsanamum arumai
ReplyDeletethodara valthukkal.....
வருகைக்கு மிக்க நன்றி நண்பா!
Deleteதொடர்ந்து படியுங்கள்
மெட்ராஸ் டாக்கிஸ் மாதிரி தோஹா டாக்கிஸ்ஸா? நடக்கட்டும் நடக்கட்டும்! :))
ReplyDeleteஇப்படிக்கு,
தக்குடு
C ring road
Doha
வருகைக்கு மிக்க நன்றி நண்பா!
Deleteமணிரத்தினம் மாதிரி ஆகா ஆசையெல்லாம் கிடையவே கிடையாது!!!
தொடர்ந்து படியுங்கள் தோஹா நண்பரே!
வலைப்பூ அழகா இருக்கு பாஸ்.கொஞ்சம் இருங்க பதிவு படிச்சுட்டு வந்துருறேன்..ரொம்ப நாள் பார்க்க வேண்டுமென்று நினைக்கிற படம் வேற.. .
ReplyDeleteமிக்க நன்றி குமரா....
Deleteமிகவும் சந்தோஷம்
நல்ல விமர்சனம்..நல்ல பார்வை..ரொம்பவும் சிறப்பாக எழுதி இருக்கீங்க..படம் சீக்கிரம் பார்த்து விடுகிறேன்..தொடர்ந்து பல படங்களை எழுதுங்கள்..நானும் தங்களது வாசகன்.நன்றி.
ReplyDeleteஊக்கத்திற்கு நன்றி நண்பா.
Deleteபடம் பார்த்துவிட்டு கண்டிப்பாக கருத்தை கூறுங்கள்.
//நம் இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கி அஞ்சலி படத்தில் வரும் இரு குழந்தைகளின்( தருண் & ஸ்ருதி ) கேரக்டர் ஸ்கெட்ச் இந்த படத்தின் ( ஜெம்& ஸ்கௌட்) உடைய காப்பி ஆகும்(ஒரு வேலை inspiration ஆக கூட இருக்கலாம்).//
ReplyDeleteநக்கல்ஸ்..
:)
ReplyDeleteபடம் இன்னும் பார்க்கவில்லை......ரொம்ப நாளா பார்க்கவேண்டும் என்று நினைக்கும் திரைப்படம். விமர்சனம் நன்று.
ReplyDeleteமிக்க நன்றி நண்பா..
ReplyDeleteகண்டிப்பாக பாருங்கள்.. உங்களுக்கு பிடிக்கும்