Wednesday, 11 July 2012

Hachi : A Dog's Tale : திரை விமர்சனம்


Hachi - A Dog's Tale
 
இந்த திரைபடத்தில் Richard Gere , Parker Wilson ஆகவும் Joan Allenஅவரது மனைவி Cate Wilson ஆகவும் Sarah Roemer அவர்களது மகள் Andy  ஆகவும் நடித்துளனர். Hachi- ஆக Akita வகை Breed  நாய் நடித்துள்ளது. இந்த படத்தை Lasse Hallstrom இயக்கிவுள்ளார்.


 இந்த திரைப்படம் ஜப்பானிய மொழி ரீமேக் படமாகும்.இந்த திரைப்படம் ஜப்பான் -ல் நடந்த ஒரு உண்மை கதையாகும். Hachi என்ற பெயர் கொண்ட Akita  வகை நாய் உண்மையாகவே தன் எஜமானரின் மேல் பாசமும் நன்றியும் விசுவாசமும் வைத்து கடைசியில் இறந்துப்போனது. செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் இந்த திரைப்படத்தை கைக்குட்டை இல்லாமல் பார்க்கவே முடியாது .



ஜப்பானில் மிகவும் பழமை வாய்ந்த நாய் இனத்தில் ஒன்று Akita  வகை நாய் இனம். இந்த நாயை ஒருவருக்கு பரிசாக கொடுத்தால் அது அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் என்று பொருள் ஆகும். பார்பதற்கு மிக அழகாக இருக்கும் இந்த Akita நாய்கள் உலகத்திலேயே விசுவாசத்திற்கு பெயர் போனவை. இந்தியாவில் இந்த வகை நாயின் விலை 5,௦௦௦ முதல் 8,௦௦௦ வரை இருக்கும்.


இந்த படத்தில் நடித்திருக்கும் Richard Gere (ஷில்பா ஷெட்டி-க்கு மேடையில் முத்தம் கொடுத்து சர்ச்சையில் மட்டிகொண்டவர்!!!).மிக இயல்பாக நடித்துள்ளார்.இந்த படத்தில் வரும் அனைவரும் தங்கள் பங்கை அழகாக செய்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் கதையை  ஒரு வரியில் சொல்லிவிடலாம். ஒரு நன்றியுள்ள நாயின் வாழ்க்கை அந்த எஜமானரை சுற்றி எப்படி நகர்கிறது...

Parker கல்லூரியில் வேலை செய்கிறான். தினமும் வீட்டில் இருந்து train- ல் வேலைக்கு செல்கிறான். ஒரு நாள் railway station-ல்  இருந்து நாய் குட்டி ஒன்றை வீட்டிற்க்கு எடுத்து வருகிறான், தன் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதால் வீட்டிற்க்கு வெளியே உள்ள ஸ்டோர் ரூமில் வளர்க்கிறான்.


Ball Practice எனப்படும் (பந்தை தூக்கி வீசினால் வீசிய பந்தை கவ்விக்கொண்டு வந்து தருவது ) விளையாட்டை கற்றுக்கொடுத்தால் hachi அதை செய்யவே இல்லை. இதை பற்றி தன் நண்பனிடம் சொல்கிறான் Parker.அவர் akita வகை நாய்கள் மிகவும் ராயல் அண்ட் லோயல் நாய்கள் என்றும் அவை பந்தை கவ்வி எடுத்து கொண்டு வராது என்று சொல்கிறார்.


தினமும் train-ல் செல்லும் Parker பின் தொடர்ந்து செல்கிறது hachi. அவன் எவ்வளவு தடுத்தும் அது அவன் பின் தினமும் railway station - க்கு வருகிறது. தினமும் காலை parker உடன்  railway station க்கு வரும் ஹாசி அவன் வேலைக்கு சென்ற பின்பு வீட்டிற்க்கு சென்று விடும். அதே போல் மாலை அவன் வரும் முன்னர் railway station க்கு வந்து அவனுக்காக காத்திருக்கும். தினசரி வாடிக்கையாக இது நடக்கிறது.

ஒரு நாள் அவன் கேட்காமலேயே பந்தை அவனுக்காக கவ்விக் கொண்டுவந்து தருகிறது ஹாசி. ஆச்சர்யப்படும் Parker - க்கு மிகவும் சந்தோசம். ஆனால் அவனை வேலைக்கு செல்ல விடாமல் தடுக்கிறது hachi. ஒன்றும் புரிடாமல் அவன் hachi -ன் தடுப்பை மீறி வேலைக்கு செல்கிறான். Hachi- ம் அவன் பின்னால் railway station - க்கு செல்கிறது.அவன் கல்லூரியில் மாரடைப்பால் இறந்து விடுகிறான். மாலை தன எஜமானரின் வருகைக்காக காத்து கொண்டு இருக்கிறது.

Parker- ன் மனைவி வேறு ஊருக்கு செல்வதால்  hachi யை தன் மகளிடம் தருகிறாள். ஆனால் hachi வீட்டில் தங்காமல் , ரயில்வே ஸ்டேஷன் -க்கு தன் எஜமானர் வருவார் என்று எண்ணி செல்கிறது. தினமும் காலை குறிப்பிட்ட அந்த இடத்தில் காத்திருக்கும் hachi , காலை முதல் கடைசி train வரை அந்த இடத்திலேயே காத்திருக்கிறது. பனி,மழை என்று எதையும் பொருட்படுத்தவில்லை.

இப்படி 10 வருடங்கள் மேல் என்றாவது தன எஜமானர் வந்து விடுவர் என்று எண்ணி அவருக்காக  காத்திருந்து அந்த இடத்திலேயே மடிகின்றது.


நான் முழு கதையும் சொல்லிவிட்டேன் என்று எண்ணவேண்டாம். எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக பார்ப்பது போல் தோன்றும் இந்த காவியம். Hachi -க்காக கண்ணீர் விடாமல் இருக்கவே முடியாது. குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது.

நிஜமான hachi -க்கு ஜப்பானில் அந்த ரயில்வே station - ல் ஒரு சிலை வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஜப்பான் சென்றால் பார்க்கலாம் அந்த சிலையை!!!


இது எங்கள் வீட்டு Hachi - Krypto 




  









7 comments:

  1. இன்னும் நிறைய படங்கள் ,அவ்வபோது த்ரில்லர் படங்களையும் எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கு நன்றி. கண்டிப்பாக நண்பா! இந்த திரை விமர்சனத்தை நேரம் இருந்தால் படித்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லவும்
    http://dohatalkies.blogspot.com/2012/07/12-angry-men.html

    ReplyDelete
  3. i bet you guys will cry when u watch the movie even an hard heart people will feel when you watch this movie

    ReplyDelete
  4. நல்ல இருக்கும் போல... கண்டிப்பாக பார்கிறேன்....

    ReplyDelete
  5. நிச்சயமா பாருங்க...

    ReplyDelete