The Green
Mile -திரைவிமர்சனம்
Frank Darabont இயக்கிய இத்திரைப்படத்தில் Tom Hanks (Paul Edgecomb), Michael Clarke
Duncan (John Coffey) மற்றும் பலர் நடித்துள்ளனர். IMDB டாப் 250-ல் 136-வது இடத்தையும், 4 ஆஸ்கார் அவார்ட்ஸ் –க்கும்(சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த சவுன்ட் , சிறந்த திரைக்கதை ) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Stephen King எழுதிய “ The Green
Mile-1996” என்ற சீரியல் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.
இயக்குனர் Frank Darabont ,4 ஆஸ்கார் அவார்ட்ஸ்-க்கு
பரிந்த்துரைக்கப்பட்டவர். இவரது மற்ற முக்கிய படைப்புகள் The Shawshank Redemption , The Walking Dead,
The Mist etc ஆகும். Tom Hanks ,2 ஆஸ்கார் அவார்ட்ஸ் (Forrest
Gump ,
Philadelphia
) வென்றுள்ளார்.
அவரது மற்ற புழைபெற்ற சில படங்கள் Cast Away, Saving Private
Ryan , Big, The Da Vinci Code
etc.
ஜெயில் - லில் நடக்கும் கதை என்றாலும், போர் அடிக்காத திரைப்படத்தை தந்ததற்கு
இயக்குனரை பாராட்டலாம். இந்த படத்தை
பார்க்க முக்கிய காரணங்கள் டோம் ஹான்க்ஸ்(பால் ) மற்றும் மைகேல் கிளார்க்(ஜான் ) -
இன்
அருமையான
நடிப்பு, மென்மையான
திரைக்கதை மற்றும் பின்னணி இசை.
அதிகாரம் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் நடந்துக்கொள்ளலாம் என்று
எண்ணும் Percy, குற்றம் புரிந்த தண்டனைக்கைதி
என்றாலும் கடுமையாக நடக்காமல் அவர்களும் மனிதர்கள் என்று நினைக்கும் பால் ஆகிய இரு வேறு கதாப்பாதிரம் சொல்லும் ஒரே
உண்மை மனிதநேயம்.மனிதனின் உடலுக்கும் மனதிற்கும் ஒரு
சம்பந்தமும் கிடையாது என்பதற்கு ஜான் கதாப்பாத்திரம் ஒரு எடுத்துக்காட்டு. அவன்
பார்க்க அழகாக இல்லை என்றாலும் அவன் மனது மிக அழகு.
முதியோர் இல்லத்தில் வசிக்கும் 108 வயதான பால்(Paul), டாப் ஹாட் என்ற திரைப்படத்தை பார்த்து கண்ணீர்
விடுகிறார். அவர் அழுவதற்கான காரணம் என்ன என்று தன் தோழியிடம் சொல்லும் 1935-ல் நடக்கும் பிளாஷ் பேக்குடன் ஆரம்பிகிறது திரைக்கதை.
பால் ஜெயில் அதிகாரியாக உள்ள
பிளாக் கிரீன் மையில் என்று அழைக்கப்படுகிறது. காரணம் தூக்கு தண்டனை
கைதிகள்,
தண்டனை
நிறைவேற்ற கடைசியாக நடந்து செல்லும் மைல் , கிரீன் மைல் ஆகும். அந்த பிளாக்கில் உள்ள அணைத்து கார்ட்ஸ்- சும் குற்றம் புரிந்த தூக்கு தண்டனை கைதிகள் என்று கொடுமை
படுத்தாமல் அமைதியாக நடந்துக்கொள்கிறார்கள் , பேர்சி -யை தவிர. யாருக்கும் அவனின்
திமிரும், ஆணவமும்
பிடிக்கவில்லை.
ஜான்(John) என்பவன் இரண்டு சிறு குழந்தைகளை
கற்பழித்து கொலை செய்தததாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை கைதியாக
அந்த பிளாக்-க்கு வருகிறான். அவன் கருப்பு இனத்தை சேர்ந்தவனும் மற்றும் உருவத்தில் மிக பெரியவனாக உள்ளான் (
குண்டா உயரமாக ). அவன் பார்க்க பிரம்மாண்டமாக இருந்தாலும் அப்பாவியாக, சிறு குழந்தையை போல இருட்டை கண்டால்
பயப்படுகிறான்.
சிறுநீர் வியாதியால் (urinary infection) அவதிபடும் பாலை, பார்த்து இறக்கப்படும் ஜான், பாலை கிட்டவரும்படி அழைத்து அவனை தொடுகிறான்.
அப்பொழுது அவன் வியாதி அவனை விட்டு நீங்குகிறது.
பின்னர் , தன்
வாயின் வழியாக அந்த வியாதியை விடுகிறான். ( ஏதோ நிறைய தேனீக்கள் பறப்பது
போல உள்ளது). அவனுக்குள் இப்படி ஒரு அபூர்வ சக்தி இருப்பதை கண்டு வியக்கிறான் பால்.
எதிர் செல் -லில் இருக்கும் டெல் ( Del) , ஜிங்க்லஸ் என்னும் ஒரு எலி- ஐ வளர்த்து வருகிறான். ஒரு நாள் விளையாடிக்கொண்டிருக்கும் எலி ஐ காலால் நசுக்கி கொன்றுவிடுகிறான் பேர்சி. ஜான் அந்த எலி- ஐ எடுத்து தரச்சொல்லி,
அதற்க்கு மறுபடியும்
உயிர் தருகிறான். வைல்டு பில் (Wild Bill) என்னும் மற்றொரு கைதி அந்த பிளாக்-கிற்கு வருகிறான். ஜான்-னின் பக்கத்து செல்-லில் அடைக்கப்படும் அவன் மிகவும்
அடவடியாக அங்கிருக்கும் அணைத்து அதிகாரிகளுக்கும் தொல்லை கொடுக்கிறான். அவனை
சாமாளிப்பது அவர்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது.
பேர்சி க்கு மிகுந்த மேலிடத்து செல்வாக்கு இருப்பதால் , அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. தனக்கு அடுத்த கைதியின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அதிகாரம் தந்தால் வேலை ஐ விட்டு சென்று விடுவதாக கூறுகிறான். ஆதலால் அவனுக்கு அடுத்த தூக்கு தண்டனைக்கைதி டெல் -லின் தண்டனையை நிறைவேற்ற வாய்ப்பு அளிக்கபடுகிறது. electric சாரில் கரண்ட் வைத்து தண்டனை நிறைவேற்றுவது வழக்கம். அப்பொழுது , ஒரு sponge -ஐ தண்ணீரில் நனைத்து தலையில் வைத்தால் கரண்ட் விரைவில் பாயும், உயிரும் சீக்கிரம் பிரியும். வேண்டுமென்றே பேர்சி sponge- ஐ நனைக்காமல் , காய்ந்த sponge -ஐ வைப்பதால் டெல் துடிதுடித்து இறந்துப்போகிறான்.
இதற்கிடையில் பால் -லின் உயர் அதிகாரியின் மனைவிக்கு கான்செர் கட்டி இருப்பதால், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள். ஜான் அவளை காப்பாற்ற கூடும் என்று நம்பும் பால், மற்ற கார்ட்ஸ் -யின் உதவியுடன் அவனை யாருக்கும் தெரியாமல் அந்த அதிகாரியின் வீடிற்கு அழைத்து செல்கிறான். ஜான் அவளை குணமாக்கினானா? உண்மையில் யார் அந்த 2 குழந்தைகளை கொன்றது? பேர்சி இப்படி கொடூரமாக நடந்து கொண்டதற்கு தண்டனை என்ன? இந்த அணைத்து கேள்விகளுக்கும் ஒரே ஒரு ட்விஸ்ட்-இல் விடை உள்ளது. திரைப்படம் பாருங்கள்.
பேர்சி , டெல் -லின் தண்டனையை நிறைவேற்றும் காட்சி ( சுமார் 5 நிமிடங்கள்) மிகவும் கொடூரமானதாக இருந்தாலும் எதார்த்தமாக
இருந்தது. பேர்சி எவ்வளவு அரக்க குணம் கொண்டவன்
என்பதையும், மனிதனின் குற்றத்திற்கு தூக்கு தண்டனை தேவையா என்ற கேள்வியும்
மனதிற்குள் எழுகிறது.படத்தில் வரும் குட்டி எலி Roller- தூக்கி வீசினால் உருட்டி கொண்டு வந்து தரும். நீங்கள் இந்த எலி -யை பார்த்தல், நிஜ வாழ்கையில் எலிகளை வெறுக்கவே மாட்டீர்கள்.
அவ்வளவு அழகு அந்த எலி.
ஜான் -னின் தண்டனையை நிறைவேற்றும் போது, அவன் முகத்தில் கருப்பு துணி
போர்த்தபடுகிறது.
அனால் அவனோ எனக்கு இருட்டு என்றால் பயம். எனக்கு எந்த துணி வேண்டாம். துணி இல்லாமல் தண்டனையை நிறைவேற்றும்படி கேட்பான். இந்த அருமையான காட்சி-யை பார்த்துவிட்டு
உங்களால் ஜான் –னுக்காக கண்ணீர் விடாமல் இருக்கவே முடியாது. அதிசியங்களை நம்பாத
பால் அவன் வாழ்வில் அதிசயம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் நடக்கும் போது,
"மிராகள்ஸ்
டூ ஹப்பேன்" என்று நம்புகிறான்.
நீங்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய அருமையான திரைப்படம் இந்த கிரீன்
மைல். தயவு செய்து மிஸ் பண்ணிடாதீங்க.
Very nice review. I saw it 3 times.
ReplyDeleteTom's acting was fantastic...
Keep on writing more..
Why you are not writing more these days??
Write more about world movies..
Jeeva
Al Hilal
வருகைக்கு நன்றி நண்பா!
Deleteநிச்சயமாக தரமான படங்களை பற்றி எழுதுகிறேன்.
தொடர்ந்து படியுங்கள்
NICE REVIEW NANBAA.. The Shawshank Redemption எனக்கு மிக பிடித்த படம்.. KEEP IT UP..
ReplyDeleteநன்றி நண்பா
Deleteபார்த்து ரசித்த படம் தான் - மீண்டும் உங்களின் விமர்சனம் மூலம் ஞாபக படுத்தி விட்டீர்கள் - பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி நண்பரே.....
ReplyDeleteVery good review boss...nice flow... :)
ReplyDeleteநன்றி ராஜ்....
Deleteஉங்கள் Batman கட்டுரை சூப்பர்
Hi...
ReplyDeleteJust now I saw your blog and read all your pages, all r good. To kill a mocking bird and Hotel Rwanda were superb. Nice narrative.
Keep on writing.
One request,
Write about Pulp Fiction, The Shawshank Redemption, A fistful of Dollars, For a few dollars more, Once Upon a time in the west.
By the way I m also from Doha- Umm Slal.
Where you are from?
Very glad to know you are from Doha.
வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.
Deleteநீங்கள் குறிப்பிட்ட அந்த படங்களின் விமர்சனங்களை வேறு யாரவது எழுதி இருப்பார்கள் என்ற அச்சத்தில் தான் எழுதவில்லை..
தொடர்ந்து பதிவுகளை வாசியுங்கள்..
Doha - Al Musherib நண்பரே
i dont know if somebody has written or not??
Deletebut your narrative is suberb,
kindly write.
we will read; wow Musherib ah?
ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பா!
Deleteநிச்சயமாக எழுதுகிறேன்!
:)
அருமையான விமர்சனம்..டாம் ஹாங்க்ஸ் எனக்கு பிடித்தமான நடிகர்..அவர் நடிப்பில் பார்க்காது தள்ளி போய் கொண்டிருக்கிற சில படங்களில் இதுவும் ஒன்று..சில விமர்சனங்கள் படித்ததுண்டு..நீங்க கதையை ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.கண்டிப்பாக எப்படியும் பார்த்திடுவேன்.நன்றி நண்பா.
ReplyDeleteமிக்க நன்றி நண்பா...
ReplyDeleteநீங்கள் கண்டிப்பாக படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்
Nanbare,
ReplyDeleteVimarsanam migavum arumai,
Billa 2 vimarsanam engae??
Ungal vimarsanamae padam paarkka thoondukirathu.
sorry tamil type panna theriyavillai.
pls write about Life is beautiful movie.
வருகைக்கு மிக்க நன்றி நண்பா!
ReplyDeleteBilla 2 படம் இன்னும் பார்க்கவில்லை நண்பா..
நிச்சயமாக இந்த படத்தை பாருங்கள்.. நல்ல படம்..
நீங்கள் type பண்ணதை கூகிள் -translate-அ type பண்ண , அதான் தமிழ்!!
கண்டிப்பாக எழுதுறேன் நண்பா
தொடர்ந்து படியுங்கள் ...
http://www.google.com/transliterate/tamil/
"காஸ்ட் எவேயும்", "சேவிங் பிரைவேட் ராயனும்" நான் பலதடவை பார்த்த படங்கள். உங்கள் பதிவு தரமாக இருக்கிறது, டவுன்லோட் போட்டுட வேண்டியது தான்
ReplyDeleteகண்டிப்பாக பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் நண்பா.
Deleteநம்பி பார்க்கலாம்.....
இந்த படம் என்னை நிறைய பாதித்த படம். சில நாட்கள் தூங்க விடாமல் செய்தது. படத்தில் மொத்தம் 3 மரணங்கள் காட்டப்படும். முதலாவது நமக்கு டெமோ. இரண்டாவது எப்படி செய்யக்கூடாது என்று. மூன்றாவது காஃபியினுடையது, இது அவுட் ஆஃப் ஃபோகஸில் காட்டப்படும்.
ReplyDeleteஆறு வருடங்களுக்கு முன் பார்த்த படத்தினை பற்றி என்னை அசை போடவைத்துவிட்டீர்கள்...நான் எழுதியது...
http://jeeno.blogspot.com/2006/08/green-mile-1999.html
Wild Bill Wharton: You love your sister? You make any noise, you know what happens. I'm gonna kill her instead of you. Understand?
John Coffey: He kill them wi' their love. Wi' their love fo' each other. That's how it is, every day, all over the world.
சரியாக சொன்னீர்கள் .....
Deleteஉங்கள் விமர்சனம் படித்தேன்..
மிகவும் detailed ஆகா இருந்தது...
என்னை விடவும் நன்றாக எழுதி இருக்கீர்கள் நண்பா..
நல்ல விமர்சனம் .. மேலும் நிறைய விமர்சனங்களுக்கு காத்திருப்போம் :)
ReplyDeleteவருகைக்கு நன்றி ரகு....
Deleteநிச்சயமாக ..
தொடர்ந்து வாசியுங்கள்
நான் ப்ளாக் ஆரம்பித்த காலத்தில் விமர்சனம் எழுதிய படம். உங்க விமர்சனத்தை வாசித்துவிட்டு மீண்டும் என் விமர்சனத்தைப் படித்துப் பார்த்தேன். இப்போ புரியுது எவ்வளவு மொக்கையா எழுதியிருக்கோம்னு (இப்ப மட்டும் ஒன்னும் கிழிச்சுடல) எனக்கு டாம் ஹாங்க்ஸின் படங்களில் ஃபேவரைட் ஒன்று. அதிலும் அந்த இந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்தது.
ReplyDelete//I think about all of us. Walking our own Green Mile, each in our own time.//
http://hollywoodrasigan.blogspot.com/2012/01/green-mile-1999.html
வருகைக்கு நன்றி நண்பா..
Deleteநான் உங்களுடைய ரசிகன்.. உங்களின் விமர்சனம் படித்துவிட்டு நிறைய படங்கள் பார்த்து இருகிறேன்..
நீங்கள் உங்கள் பாணியில் அருமையாக எழுதி இருக்கீங்க..
கதை யை கொஞ்சம் தெளிவாக எளிமையாக சொன்னால் விமர்சனம் பார்த்துவிட்டு படம் பார்பவர்களுக்கு சற்று எளிதாக இருக்கும் என்று நீளமாக எழுதியுள்ளேன்...
விமர்சனம் நன்று. பார்த்த படம் தான், ஆனால் உங்கள் எழுத்து படத்தை மறுபடியும் பார்க்க தூண்டுகிறது.
ReplyDeleteமிக்க நன்றி நண்பா...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மிக்க நன்றி நண்பரே,
Deleteகண்டிப்பாக சென்று பார்கிறேன்.
nice post
ReplyDeleteThanks a lot Friend.
Delete