Friday, 13 July 2012

Big Fish – திரைவிமர்சனம்


Big Fish – திரைவிமர்சனம்


 இந்த படத்தில் Ewan McGregor , Ed Bloom ( Young ) ஆகவும் Albert Finney ,   Ed Bloom     ( senior ) ஆகவும் Billy Crudup, Will Bloom ஆ கவும் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் Tim Burton  இயக்கிய  இந்த படம் ஆஸ்கார் அவார்ட்ஸ்க்கு (பெஸ்ட் மியூசிக் , ஒரிஜினல் ஸ்கோர்- Danny Elfman) பரிந்துரைக்கப்பட்டது. இந்த படம் Daniel Wallace ஏழுதிய “A novel of Mythic Proportions- 1998” என்ற novel - லை தழுவி எழுதப்பட்டதாகும்.

Tim Burton  , Corpse Bride என்ற  animation படத்திற்காகவும் Albert, Finney,Erin Brockovich, Under the Volcano ,The Dresser ,Murder on the Orient Express, Tom Jones படங்களுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் அவார்ட்ஸ்-க்கு பரிந்துகரைக்கபட்டுளார்கள்.
இந்த கதை narrative truth -(என்ன நடந்தது என்று சொல்லும் விதம்) and factual truth (உண்மையில் என்ன நடந்தது) - .க்குமான வித்தியாசம்.


ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு உதாரணம். இந்த படத்தை பார்ப்பதற்கு இன்னும் முக்கியமான காரணம் இந்த படத்தின் ஒளிப்பதிவு (Philippe Rousselot) மற்றும் பின்னணி இசை (Danny Elfman).

இந்த திரைப்படத்தை பார்த்த எனக்கு அந்த பாதிப்பு 1 வார காலம் இருந்தது. Best Ending movie ever and a best feel good movie இது.

“There are some fish that cannot be caught. It's not that they're faster or stronger than other fish. They're just touched by something extra. Call it luck. Call it grace. One such fish was "The Beast" – Big fish”


இப்படி ஆரம்பிக்கும் போதே நாம் படத்திற்குள்ளே போய்விடுகிறோம் .

Cancer
நோயால் பாதிக்கப்பட்டு மரணவாயிலில் இருக்கும் தன் தந்தையை பார்க்க அவன் மகனும் மருமகளும் வருகின்றனர். தந்தையை பார்த்த உடன் சிறு வயது நியாபகங்களை அசை போடும் மகன், தன் தந்தையை வெறுப்பதற்கு என்ன காரணம்எல்லா சிறுவர்களுக்கும் கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் மாயாஜால கதைகள், ராஜ கதைகள் போன்ற fantasy வேர்ல்ட் கதைகள் என்றல் மிக சுவாரசியமாக இருக்கும் அல்லவா? அதே போல் தான் அவனுக்கும். அவன் தந்தை சற்று வித்தியாசப்பட்டு தன் வழக்கையில் நடந்த சம்பவங்களை  மிகைபடுத்தி கற்பனைகலந்து சுவாரசியமாக தன் மகனிடம் சொல்கிறார். 

சிறியவயதில் தன் தந்தை சொல்லும் கதைகளை நம்பும் மகன்உண்மை எது பொய் எது என்று பிரித்து பார்க்க ஆரம்பிக்கும் வயதிலும் அதே கதைகளை சொல்லும் தந்தை, பொய் சொல்லுகிறார் என்ற முடிவிற்கு வந்துவிடுகிறான். இதற்கு காரணம் அவன் தந்தை வாழ்க்கையில் வரும் கதாபாத்திரங்கள் மிக அசாதாரமானவை. தன் தந்தை தன்னிடம்  உண்மையை சொல்லவே இல்லை, அவர் சொன்னதெல்லாம் பொய் என்று உறுதியாக நம்புகிறான்.

மரணப்படுகையிலும் கூட தன் மருமகளுடன் தன் வாழ்க்கை  கதைக்களை முக்கியமாக தன மனைவியை எப்படி கல்யாணம் செய்துக்கொண்டார் என்பதை  பகிர்ந்து கொள்கிறார். வெறுப்படையும் மகன் தன் தந்தை ஏன் இவ்வாறு இந்த நிலையிலும்  நடந்து கொள்கிறார், அவர் கூறுவது உண்மையா? பொய்யா? என்று தன் அம்மாவிடம் கேட்கிறான். அவர் சொல்வது முற்றும் உண்மையும் அல்ல முற்றும் பொய்யும் அல்ல என்று பதில் கூறுகிறாள்.  தன் தந்தை சொன்ன கதைகளில் உண்மை உள்ளதா என்பதை கண்டறிய புறப்படுகிறான் மகன். கண்டுபிடித்தானா? உண்மையில் என்ன நடந்தது? தன் தந்தை இறப்பதற்குள் அவரை புரிந்து கொண்டானா? திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தன் தந்தை அவர் வாழ்ந்த டவுன்- இல் ஒரு ராட்ஷசன் வந்ததாகவும், அவன் ஊரில் வாழ்ந்த மக்களை பயமுறுத்தியதாகவும், அவனை இவர் வென்றதாகவும் ஒரு கதை சொல்லிருப்பார். அந்த ராட்ஷசன் பெயர் Matthew McGrory. Guinness Book of World Records -இல் நீளமான பாதங்களுக்காக இடன் பெற்றிருந்தார்.

போருக்கு செல்லும் பொது சந்திக்கும் ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகளை சந்திக்கும் காட்சி, அவர் மனைவியை சந்திக்கும் காட்சிகள் மற்றும் அவர் வீடு வாங்கியதன் பின்னணியில் உள்ள காரணங்களை கூறும் காட்சிகள்.

அவருடைய மரணம் பற்றி கண்ட காட்சிகள் அனைத்தும் அருமையானவை.The town of Spectre-ல் நடக்கும் காட்சிகள் மிக மிக மிக அழகானவை.

இந்த திரைப்படம்  நம்ம Steven Speilberg இயக்கத்தில்  Jack Nicholson  நடிக்க வேண்டிய  படம். கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு.
உங்கள் சிறுவயது  நினைவுகளை  நினைவுபடுத்தும் இந்த திரைப்படம் கண்டிப்பா Miss பண்ணகூடாத ஒரு "Masterpiece".

“A man tells his stories so many times that he becomes the stories. They live on after him.  And in that way, he becomes immortal”.






11 comments:

  1. இந்த மாதிரி Fantasy கதைகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. "Masterpiece" ன்னு வேற சொல்லிடேங்க..கண்டிப்பா பார்க்கிறேன்....Tim Burton பாண்டசி கதைகள் எடுப்பதில் பெரிய ஆளு தான்...

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே. உங்களுடைய billa2 விமர்சனம் மிகவும் அருமை.

      Delete
  2. எனக்கு மிகவும் பிடித்த படம் நண்பா.. ஃபேண்டஸிக்கே அர்த்தம் காட்டும் அளவு நேர்த்தியான படம்.. ரிலாக்சான மாலைப்பெழுதில் சோஃபாவில் சாய்ஞ்சுகிட்டு இந்தப் படத்தை பார்க்குற சுகமே தனி!!

    * சின்ன ரெக்கமென்டேஷன் - ஆங்கில வார்த்தைகள் அடிக்கடி இடம்பெறுவது ஃப்ளோவில் வாசித்துக்கொண்டுபோவதை கடினமாக்கும், நண்பா..

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.
    நீங்கள் சொன்ன திருத்தங்கள் இனி வரும் பதிவுகளில் இருக்காமல் பார்த்துக்கொள்கிறேன்.
    பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

    ReplyDelete
  4. one of the amazing movies i was fortunate to see. defintely nobody should miss it

    ReplyDelete
  5. தங்கள் வருகைக்கு நன்றி நண்பா!
    100% உண்மை.

    ReplyDelete
  6. இன்று தங்கள் தளம் கண்டேன்.. அருமையான பதிவுகள். இணைத்துக்கொண்டேன்.. தொடர்ந்து வாசிப்போம்..

    ReplyDelete
  7. வருகைக்கு மிக்க நன்றி நண்பா
    ப்ளாக் ஆரம்பித்து 4 நாட்கள் தான் ஆகிறது :)
    பதிவுகளை தொடர்ந்து படியுங்கள் நண்பரே.

    ReplyDelete
  8. when i started to watch this movie i never thought that it was an sentiment movie but it made me to sit and watch the full movie...this story every son should watch

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி நண்பா
    தொடர்ந்து வாசியுங்கள்

    ReplyDelete
  10. நல்ல விமர்சனம். ஒரு சில நல்ல திரைபடங்கள நான் இன்னும் பர்கள, அது இதுவும் ஒன்னு. படத்த கண்டிப்பா பார்க்கனம் தோணுது. நன்றி பாஸ்.....

    ReplyDelete