Wednesday 25 July 2012

Pulp Fiction - திரைவிமர்சனம்


Pulp Fiction - திரைவிமர்சனம்


Quentin Tarantino இயக்கிய இந்த படத்தில் John Travolta (Vincent Vega ) , Samuel L. Jackson (Jules Winnfield ) , Bruce Willis(Butch Coolidge) , Uma Thurman(Mia Wallace) மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் சிறந்த திரைக்கதைக்காக (Quentin Tarantino )ஆஸ்கார் அவார்ட்ஸ் வென்றது மட்டுமல்ல  சிறந்த நடிகை(Uma Thurman), சிறந்த நடிகர்(John Travolta& Samuel L. Jackson) , சிறந்த இயக்குனர்(Quentin Tarantino), சிறந்த படம், சிறந்த Editing க்காக ஆஸ்கார்-க்கு  பரிந்துரைக்கப்பட்டது. IMDB டாப் 250 இல் 4 வது இடத்தை பிடித்துள்ளது. காரணம் இப்படம் ஒரு cult கிளாசிக் என்று அழைக்கப்படும் புதுமையான படம்.


இயக்குனரை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர் முழு நீள இயக்குனராக இயக்கிய திரைப்படங்கள் Reservoir Dogs , Pulp fiction, Kill Bill 1&2, Jackie Brown, Inglorious Bastards. அனைத்துமே சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.  இந்த படம் அனைவராலும் பாராட்டபட்டதற்கு  முக்கிய  காரணம் இந்த படத்தின் திரைக்கதை என்று சொல்லலாம். படம் முதல் காட்சியில் ஆரம்பித்து  நகர்ந்து கொண்டிருக்கும், நமக்கே தெரியாமல் படத்தின் கடைசி காட்சியை , படத்தின் முதல் காட்சியில் கொண்டு வந்து  முடித்திருப்பார் இயக்குனர். இந்த புதுமையான முயற்சிக்கு தான் இவ்வளவு வரவேற்ப்பு.


திரைக்கதை அமைத்திருக்கும் படியே கதையை பார்ப்போம். நான்கு முக்கிய தடங்களில் கதை நகர்கிறது. ஒன்று இரு திருடர்கள், இரண்டு வின்சென்ட் &ஜூல்ஸ்,முன்று அவர்கள் தலைவனின்  மனைவி Mia மற்றும்  வின்சென்ட், நான்கு குத்துச்சண்டை வீரர் Butch. நேர்கோட்டில் பயணிக்காமல் Non- Linear ஆக இருக்கும் திரைக்கதை. இந்த திரைப்படத்தை பார்க்கும் போது sub-title லோடு பார்ப்பது  சிறந்தது. வசனம் புரிந்தால் படத்தை இன்னும் ரசித்து பார்க்கலாம். ஏனெனில் படத்தில் டயலாக் oriented humor அதிகம்.


முதல் காட்சியில் இரு திருடர்கள் ஒரு ஹோட்டலில் அமர்ந்து  கொள்ளை அடிப்பதை பற்றி பேசிகொண்டிருகிறார்கள். ஹோட்டலுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், அவர்களிடம் இருந்து (purse)பர்சை அடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்பதாலும் ஹோட்டலில் கொள்ளை அடிக்க முடிவு செய்து , துப்பாக்கி முனையில் அங்கிருப்பவர்களை மிரட்டுகிறார்கள். இத்தோடு இந்த காட்சி கட்.


இரண்டாவது காட்சியில் வின்சென்ட் மற்றும் ஜூல்ஸ், தன் முதலாளியிடம் ( Marsellus) இருந்து திருடப்பட்ட ஒரு பெட்டியை தேடி காரில்  செல்கின்றனர். ஒரு வீட்டிற்க்குள் செல்லும் அவர்கள் அந்த ரூம்-இல் இருக்கும் இரண்டு பேரை சுட்டு தள்ளுகின்றனர். கொலை செய்ய போகிறார்கள் என்று அவர்கள் பேசும் டயலாக் வைத்து யூகிக்கவே முடியாது. இத்தோடு இந்த காட்சி கட்.

 
வெளியுருக்கு செல்வதால் தன் மனையை வெளியே அழைத்து செல்லுமாறு கூறுகிறான் Marsellus. வின்சென்ட்-க்கு போதை பழக்கம் உள்ளதால் Heavy Dose Heroine- வாங்கி அவன் சட்டையில் வைத்து கொண்டு Mia வை சந்திக்க அவள் வீடிற்கு செல்கிறான். Mia-விற்கும் போதை பழக்கம் உள்ளது . Mia-வும் அவனும் வெளியே சென்று விட்டு வீடிற்கு திரும்பும் பொது தவறுதலாக  அவள் வின்சென்ட் சட்டையில் இருந்த Heroine-ஐ பயன்படுத்துகிறாள். அதனால் , மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து  இறக்கும் தருவாயில் உள்ள அவளை வின்சென்ட் எப்படி காப்பாற்றுகிறான்?....


குத்துச்சண்டை வீரரான Butch , நடக்க இருக்கும் மேட்ச்-இல் தோற்க்க ஒப்புக்கொண்டு Marsellus -இடம் பணம் வாங்கி கொள்கிறான். அவனிடன் தன் அப்பாவின் கைக்கடிகாரம்  ஒன்று உள்ளது (அந்த கைக்கடிகாரத்தை நேசிச்பதர்க்கு ஒரு சின்ன Flashback உள்ளது). குத்துச்.சண்டையில்  தோற்பதற்கு பதிலாக எதிராளியை அடித்தே கொன்று விட்டு அங்கிருந்து தப்பித்து தன் காதலிடம் வருகிறான் . இருவரும் மறுநாள் காலை  ஊரை விட்டு தப்பித்து செல்ல இருகின்றனர். அடுத்த நாள் காலையில் அவன் பெட்டியில்  அந்த கைக்கடிகாரத்தை காணவில்லை காரணம் அவன் காதலி கடிகாரத்தை அவன் வீட்டிலே மறந்து வைத்துவிடுகிறாள் . வீட்டிற்கு சென்று கைக்கடிகாரத்தை எடுத்து வந்தவுடன் ஊரை விட்டு செல்லலாம் என்று கூறி வீட்டிற்கு செல்கிறான். எடுத்து கொண்டு வரும் வழியில் Marsellus பார்த்து விடுகிறான். அவனிடம் மாட்டிகொண்டானா ? ஊரை விட்டு தப்பித்து சென்றானா? ...


இப்பொழுது, முதலில் பார்த்த இரண்டாவது காட்சி வருகிறது. வின்சென்ட்-டும், ஜூல்ஸ்-ம், எத்தனை பேரை கொன்று, பெட்டியை எடுத்துவந்தார்கள். அவர்கள் பெட்டியை கொண்டுபோய் தன் முதலாளியிடம் எப்படி சேர்கிறார்கள். வழியில் என்ன நேர்கிறது? எப்படி முதல் காட்சி கடைசி காட்சியில் முடிகிறது என்பது மீதி உள்ள intelligent ஆன திரைக்கதை..


படத்தில் ஜூல்ஸ்-இன் டயலாக்  டெலிவரி அற்புதமாக இருக்கும். கொலை செய்ய உள்ள ஆளிடம் இருந்தே அவன் Burger மற்றும் Sprite ஐ சாப்பிட்டு விட்டு அவனை சுடும் காட்சியில்  மிகவும் கூலாக நடித்திருப்பார். படத்தின் இயக்குனர் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.


வின்சென்ட் போதை பழக்கம் உள்ளவன் என்பதால், ஒரு வித மயக்கத்தில் இருப்பான். Mia-வை காப்பாற்ற அவன் கார் ஒட்டி செல்லும் காட்சி மற்றும் இருவரும் டான்ஸ் ஆடும் கட்சிகள் ரசிக்கும் படியாக இருக்கும். அதில் நன்றாக டான்ஸ் ஆடும் ஜோடிக்கு ஒரு Trophy பரிசு என்று அறிவித்திருப்பார்கள். டான்ஸ் ஆடி முடிந்தபின் வீடு திரும்பும் பொது அவர்கள் கையில் Trophy இருக்கும். பிறகு வேறொரு காட்சியில் கைக்கடிகாரத்தை எடுக்க Butch வீட்டிற்கு செல்லும் போது பக்கத்து வீட்டில் இருந்து Trophy காணவில்லை என்று ஒரு விளம்பரம் ஒளிபரப்பாகும். ஆகவே இருவரும் டான்ஸ் ஆடி Trophy ஐ வெல்லவில்லை ஆனால் திருடிவந்திருப்பார்கள்.


$8,000,000 செலவில் எடுக்கப்பட்ட இந்தத்திரைப்படம் $213,928,760 வசூல் செய்து லாபம் பெற்றுள்ளது. படம் பாருங்கள். நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும்.









26 comments:

  1. எனக்கு மிகவும் பிடித்த படம் இது....ரொம்ப அருமையாக படத்தை பற்றி விவரித்து உள்ளீர்கள்...
    படம் மெல்ல ஆரம்பித்து வேகம் எடுக்கும்....நமக்கு நாவல் படிப்பது போன்ற உணர்வை தரும்....
    Quentin நோலன் அளவுக்கு இல்லை என்றாலும் non-linear ஆக நன்றாக படம் எடுப்பார்....
    IMDB Top #4 லிஸ்டில் உள்ளது இந்த படம்..

    ReplyDelete
    Replies
    1. Hi bro...download pannunum..plz send link

      Delete
  2. மிக சரியாக சொன்னீங்க பாஸ்...

    ReplyDelete
  3. க்வெண்டின் ஷ்பெசாலிட்டியே அவர் நான்-லீனியர் திரைக்கதை தான்...அதிலும் இந்தப் படத்தில் புகுந்து விளையாடியிருப்பார். சாதாரணமாக இரு லவ்வர்ஸ் பேசிக்கொள்வது போல வசனம் அமைக்க ஆரம்பித்து பின்னர் கஃபேயைக் கொள்ளையடிப்பது போல கதை திசை திரும்புவது என முதலாவது சீனே அட்டகாசமான ஆரம்பமாக இருக்கும்.

    நல்ல டாப் படங்களா அறிமுகப்படுத்திறீங்க. வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பா..
      ஒவ்வொரு முறை படம் பார்க்கும் போது ஒரு புது விஷயம் நன் கண்ணில் தெரியும்..

      Delete
  4. matchan, padam nallarukko illayo un vimarsanam super!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  5. Super padathukku, super vimarasan.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பா..
      தொடர்ந்து படியுங்கள்

      Delete
  6. விமர்சனம் = படம் பார்க்கும் ஆவலை தூண்டுதே!

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம் பார்த்து விடுங்க நண்பா....

      Delete
  7. நிறைய பேர் இந்த படத்தைப்பற்றி சொல்லி விட்டார்கள். இன்னும் பார்க்கும் வாய்ப்பு அமையப்பெறவில்லை. கண்டிப்பாக பார்க்கிறேன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். மிஸ் பண்ணாதீங்க

      Delete
  8. அழகான விமர்சனம்..அருமையான படம்..தொடருங்கள் நண்பா...நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...

      Delete
  9. Trophy விஷயம் இதுவரை எனக்கு தெரியாது, இப்போ தான் அதை பற்றி தெரியும்......இப்போ அந்த காட்சிய நினைச்சா சம காமெடியா இருக்கு.
    விமர்சனம் கலக்கல்.

    ReplyDelete
    Replies
    1. சில விஷயங்களை கூர்ந்து கவனித்தால் தான் கண்ணில் படும்.. சூப்பர் சீன் நண்பா...

      Delete
  10. இந்த படம் சில முறை பார்க்க ஆரம்பித்து நிறுத்தி விட்டேன்.பதிவர் ராஜ் படம் கொஞ்ச நேரம் போனால் அருமையாய் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.உங்கள் விமர்சனம் அருமை.நன்றாக விவரித்து எழுதுகிறீர்கள்.அடிக்கடி எழுதுங்கள்.முடிந்தால் அதிக நாட்கள் கேப் விடாமல்
    எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க.. நல்ல படம்..
      நன்றி நண்பா...

      Delete
  11. Chance ay illainga,
    Nalla ezhuthuringa..
    Thodarnthu ezhuthunga,
    Ungalal than naan Intha mathiri padangalai parkiraen,
    Thank you.

    ReplyDelete
  12. மிக்க நன்றி நண்பா..
    தொடர்ந்து படியுங்கள்...

    ReplyDelete
  13. லீனியர், ஹொரிஸோண்டல் அப்டீன்னு நெறைய சொல்றாங்க நண்பா! எனக்கு படம் பாக்க மட்டும் தான் தெரியும், நீங்க சொல்றத வச்சு பாத்தா இது கிடத்தட்ட "வன்டேஜ் பொயிண்ட்" மாதியான ஒரு படமா?

    ReplyDelete
  14. vantage point ய் விட இது நல்லப்படம்.
    கண்டிப்பாக பாருங்கள்.

    ReplyDelete
  15. Romba nalla padangalai patri eluthuringa.
    Thinamum oru padaththai engalukku arimugappaduthungal.

    ReplyDelete
    Replies
    1. kandippaga ezhuthukiraen.
      ungal varugaikku nandri.

      Delete
  16. மிகவும் அருமையான ஒரு படம். அருமையான விமர்சனம். வாழ்த்துக்கள் நண்பா.. உங்கள் பணி தொடரட்டும்..

    ReplyDelete