[Leon The Professional - திரைவிமர்சனம் ]
நம்ம ஊரு Action
King
அர்ஜுன் நடிச்ச படம் " சூர்ய பார்வை" , Leon the Professional படத்தோட அக்மார்க் ஈயடிச்சான் காப்பி. Luc Besson இயக்கிய இத்திரைப்படத்தில் Jean Reno (Leon) , Gary Oldman (Stansfield) , Natalie Portman(Mathilda) மற்றும் பலர் நடித்துள்ளனர். IMDB டாப் 250 யில் 32 வது
இடத்தை பிடித்துள்ளது.
Luc Besson நிறைய ஆக்சன் படங்கள் இயக்கிவுள்ளார். அதில் சில
பிரபலமான படைப்புகள்
Transporter 2, Taken 1 & 2 , The fifth element , Subway, Etc. நம்ப படத்தோட ஹீரோ Jean Reno நிறைய படங்கள் நடித்திருக்கிறார். அவர் நடித்த சில ஹிட் படங்கள் Pink Panther 1 & 2 , Godzilla , Da
vinci code, Wasabi(நம்ம ஜக்குபாயோட original) , etc…
படத்தின் ஹைலைட் Natalie
Portman-ன்
நடிப்பு என்றே சொல்லலாம். படத்தின் குட்டி நாயகி Natalie Portman மிக பிரபலமான நடிகை. ஏராளமான வெற்றி
படங்களை தந்திருப்பவர். இவர் நடித்த V for Vendetta படத்திற்காக உண்மையிலே மொட்டை
அடித்தவர். அந்த படத்திற்கு ஆஸ்கார் தான் மிஸ் ஆயிடுச்சு. ஆனால்
Black Swan படத்திற்கு வாங்கிவிட்டார். இவர் நடித்த சில முக்கிய படங்கள் Heat, No Strings Attached , Closer, Thor
etc.
படத்தின் ஹைலைட் ஒரு 12
வயது
சிறுமிக்கு 40 வயது ஆசாமிக்கும் உள்ள ரிலேஷன்ஷிப். கேட்கவே
சற்று அருவெறுப்பாக இருக்கு இல்ல? ஆனால் படத்தில் இதை மிக அழகாக காண்பித்து இருப்பார்கள்.
படத்தின் கதை என்ன என்பதை பார்க்கலாம் . டோனி என்பவனுடைய அடியாளாக வேலை
செய்கிறான் லியான். 12 வயது சிறுமியான மதில்டா தன் 4 வயது சகோதரன் மற்றும் வேறு திருமணம்
செய்துகொண்ட தந்தை, அவர் மனையுடன் அடுக்குமாடி குடிஇருப்பில்
வசித்து வருகிறாள். அவள் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கிறான் லியான். தன் குட்டி தம்பியை தவிர அந்த வீட்டில்
யாரையும் அவளுக்கு பிடிக்காது.
ஸ்டான்
என்னும் DEA ஏஜென்ட் , போதை பொருட்களை மறைத்து வைக்க மதில்டாவின் தந்தையை பயன்படுத்தி அவன் வீட்டில்
போதை பொருட்களை ஒளித்துவைக்க கொடுப்பது வழக்கம். ஆனால் அவன், யாருக்கும் தெரியாமல், அதிலிருந்து சிறிது சிறிதாக போதை பொருட்களை
திருடுகிறான். இந்த உண்மை தெரியவர, ஸ்டான் தன் அடியாட்களை அனுப்பி மதில்டாவின்
குடும்பத்தை கொலைசெய்ய சொல்கிறான்.
ஸ்டான் ஆட்கள் வீடிற்கு வரும் சமயத்தில் மதில்டா கடைக்கு
சென்றிருப்பதால், அவளை தவிர அனைவரையும் கொன்று விடுகிறார்கள். அந்த சமயத்தில் வீடிற்கு
வரும் மதில்டா, நிலைமையை உணர்ந்து, தன் வீடிற்கு செல்லாமல், லியான் வீட்டு கதவை தட்டுகிறாள்.
சற்று யோசிக்கும் லியான், அவளுக்கு அன்று இரவு மட்டும் அடைக்கலம்
தருவதாக கூறுகிறான். அவளோ, தன் தம்பியை கொன்றவர்களை பழி
வாங்கவேண்டும் என்றும், வீட்டு வேலைகளை செய்வதாகவும், தனக்கும் துப்பாக்கி சுடுவதற்கும்,
அவனுக்கு
தெரிந்த வித்தைகளை கற்றுகொடுக்குமாறு வேண்டுகிறாள். இதற்கிடையில், அவளின் போட்டோவை கொடுத்து அவளையும்
கொலைசெய்ய சொல்கிறான் ஸ்டான்.
இருவரும் அந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு செல்கின்றனர். லியான் படிப்பறிவு
இல்லாதவன் என்பதால், அவனுக்கு படிக்க கற்றுக்கொடுகிறாள் மதில்டா. தனக்கு தெரிந்த துப்பாக்கி சுடும்
வித்தைகளை கற்றுக்கொடுகிறான் லியான். பின்னர், வீட்டில் ஒரு கடிதத்தை லியானுக்கு
எழுதி வைத்து விட்டு,ஸ்டான்- ஐ கொலைசெய்ய, ஒரு சிறிய பையில், துப்பாக்கியை வைத்து, DEA ஆபீஸ்க்கு செல்கிறாள். ஸ்டானிடம் மாடிக்கொள்ளும் அவளிடம், லியான் தன் 2 அடியாட்களை கொலை செய்துவிட்டதாக கூறிகிறான். அங்கு வரும் லியான் மதில்டாவை
காப்பாற்றுகிறான்.மதில்டாவிர்க்கு லியான் ஐ மனதிற்குள் பிடித்துப்போக, அவள் லியானை காதலிப்பதாக கூறுகிறாள். இருப்பினும், அதை பெரிதாக கண்டு கொள்ளாமல்
இருக்கிறான் லியான்.
டோனியை மிரட்டி, லியான் இருக்கும் வீட்டை கண்டுபிடித்து அவனை
கொலைசெய்ய ஆட்களுடன் செல்கிறான் ஸ்டான். அவன்
லியான் மற்றும் மதில்டாவை கொலை செய்தானா? அவர்களை சுற்றிலும் சூழ்ந்த ஸ்டானின்
ஆட்களிடம் இருந்து தப்பித்தார்கள்? லியான் மதில்டாவை
காபாற்றினானா?
மதில்டா நினைத்தது
போல ஸ்டானை பழிவாங்கினாளா? இது தான் இறுதி கிளைமாக்ஸ்.
நான் ரசித்த காட்சி,
வீட்டை விட்டு
செல்லும் அவர்கள் ஒரு ஹோட்டல் அபார்ட்மேட்டுக்கு செல்வார்கள். முதலில் மதில்டா தனக்கும்
தன் தந்தை லியானுக்கும் ரூம் வேண்டும் என்று ஹோட்டல் மேனேஜரிடம் சொல்வாள். சிறிது
நாட்களுக்கு பின்பு அவரிடம் தான் பொய் சொன்னதாகவும், லியான் தந்தை இல்லை என்றும் தன் காதலர் என்பாள். பதறிப்போன மேனேஜர் இருவரை ஹோட்டலை
விட்டு வெளியேற்றிடுவார்.
லியான் தன் நண்பன் என்று கூறி ஒரு பூந்தொட்டியில் ஒரு செடியை
வளர்ப்பான். இறுதி காட்சியில் அந்த செடியை மண்ணில்
நடுவாள் மதில்டா. இந்த காட்சி மிக அழகாக இருக்கும்.
இந்த படம் நடிக்கும் பொது Natalie Portmanனுக்கு வயது 11 தான். ஆனலும் 11 வயது சிறுமிக்கு எப்படி புகை பிடிக்க கற்று கொடுத்தார்களோ தெரியவில்லை!!! விறுவிறுப்பான படம். நீங்கள் என்ஜாய் பண்ணி பார்க்கலாம்.



























