Friday 15 March 2013

பரதேசி - திரைவிமர்சனம்

பாலாவின் ரசிகர்கள் தாராளமாக காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்..
பாலா எடுத்ததிலயே மிகச்சிறந்த படம் இதுதான். பாலாவிற்கு மற்றும் ஒரு மைல்கல், இந்த பரதேசி. என்னடா உலகத்திரைப்படங்கள் பற்றி எழுதுபவன், தமிழ் பட விமர்சனம் எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா? இந்த படம் நிச்சயமாக ஒரு உலகத்திரைப்படம் தான். பாலாவிற்கு மற்றுமொரு மணிமகுடம்.
 தமிழ் சினிமாவில் மகேந்திரன் விட்டு போன இடத்தை பாலாவால் மட்டுமே நிரப்ப முடியும். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மூன்று படங்களில் இந்த படம் கண்டிப்பாக இடம் பிடிக்கும்.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எனக்கு அந்த பாதிப்பு இன்னும் போகவில்லை.கண்டிப்பாக சில வாரங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த படத்தை மகா கலைஞன் பாலாவால் மட்டுமே செய்யமுடியும்.
 1939- ல் சாலூர் என்ற கிராமத்தில் துவங்கும் கதை அங்கு உள்ள மக்களின் எதார்த்தமான வாழ்க்கை, பழக்கவழக்கங்கள்  மற்றும் திருமணமுறை போன்றவற்றை சொல்லியவாரே அழகான நதி போல பிரயாணிக்கிறது. தண்டோரா  போடுபவனாக அதர்வா (ஒட்டு பொறுக்கி () ராசா) , வெகுளியான அதர்வாவை காதலிக்கும் வேதிகா(அங்கம்மா). பாலாவின் பாத்திரப்படைப்புகளை பற்றி சொல்லவே வேண்டாம், மிகவும் நேர்த்தியானவை. அதர்வாவின் பாட்டி தான்  படத்தில் சந்தானம், பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
 நாஞ்சில் நாடன் எழுதிய இடலாக்குடி ராசா சிறுகதையின் பாதிப்பு என்னை போலவே பாலாவிற்கும் அதிகம் உண்டு என நினைக்கிறேன். கல்லூரி செல்லும் நாட்களில் படித்த சிறுகதை அது, இந்நாள்  வரை அந்த கதை என் நெஞ்சை விட்டு அகலவில்லை.
ராசா வண்டிய விட்டுடுவேன்என்ற வரி படிக்கும் போது நம்மை அறியாமல் நம் கண்கள் குளமாவதை, கதையை படித்தவர்கள் அறிவார்கள். அதர்வாவின் கதாபாத்திரம் "இடலாக்குடி ராசாவை" பிரதிபலிப்பது போலவே இருக்கும். ராசா வண்டிய விட்டுடுவேன் என்ற அதே வரியை பாலா உபயோகப்படுத்தி இருக்கிறார்.
 ஊரில் வறட்சி காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லும் அதர்வாவை ஒரு கங்காணி சந்திக்கிறான். ஊர் மக்களிடம் தனக்கு சொந்தமாக ஒரு தேயிலை தோட்டம் உள்ளதாகவும், தோட்டத்தில் தேயிலை பறித்தல், தேயிலை மரங்களை கவாத்து செய்தல்  மற்றும் களை எடுத்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்றும் தக்க கூலி கொடுப்பதாகவும் சொல்கின்றான். மனைவி  மற்றும் பிள்ளைகளை உடன் அழைத்து வரலாம் என்றும் அவர்களுக்கும் கூலி கொடுப்பதாகவும் வருடம் ஒரு முறை விடுப்பு கொடுப்பதாகவும் மிக இனிமையாக பேசுகிறான். அவர்களிடம் வெத்து  பேப்பரில் கைநாட்டு வாங்கிக்கொண்டு அவர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்களை தேயிலை  தோட்டத்திற்கு அழைத்து செல்கிறான். ஊரில் உள்ள நிறைய மக்கள் அவனுடன் செல்கின்றனர். 48 நாட்கள் நடை பயணமாக மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக அந்த தேயிலை தோட்டத்திற்கு வந்து சேர்கின்றனர்.
 இதற்கிடையில் அதர்வாவுடன் நெருங்கி பழகியதால் அங்கம்மா கர்ப்பம்  அடைகிறாள். அது தெரிந்து அவளை அவளின் தாய் வீட்டை விட்டு அனுப்பி விடுவதால் அதர்வாவின் பாட்டியுடன் வந்துவிடுகிறாள். தேயிலை தோட்டத்தில் தன்ஷிகாவை(மரகதம்) சந்திக்கிறான் ராசா . அவளின் கணவன் 2 வயது பெண் குழந்தையுடன் அவளை தோட்டத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிடுவதால் தனியாக வசிக்கிறாள்.  தேயிலை தோட்டத்தை கண்காணிக்கும் ஆங்கிலேய பிரபு அங்கு உள்ள பெண்களை தவறாக நடத்துகிறான்.  கடுமையான வேலை காரணமாக நிறைய பேருக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. அதர்வாவிற்கு தன்  பாட்டியிடம்  இருந்து அங்கம்மா கர்ப்பமாக உள்ள செய்தி கடிதம் மூலமாக தெரிய வருகிறது.
விடுப்பு தருவதாக கூறி அனைவரையும் அழைத்து அவர்கள் சம்பள பணத்தை  பிடித்துக்கொண்டு மீண்டும் சில வருடங்கள் வேலை செய்ய சொல்லி ஏமாற்றுகிறான் அந்த கங்காணி. அங்கம்மாவை பார்க்க  துடிக்கும் ராசா காட்டை விட்டு தப்பி ஓட முயலும் போது  அடியாட்களிடம் மாட்டி கொள்கிறான். அதனால் அவன் மறுபடியும் தப்பி ஓடாதபடிக்கு அவனின் கால் நரம்பை துண்டித்து விடுகிறார்கள். அங்கம்மாவிற்கு ஒரு ஆண்  குழந்தை  பிறக்கிறது, சரியான மருத்துவ வசதி மற்றும் சுகாதாரம் இல்லாத காரணத்தால் விஷ காய்ச்சல் வந்து  நிறைய மக்கள் இறக்க நேரிடுகிறது. அந்த  காய்ச்சலில் மரகதமும் இறக்க நேரிடுகிறது. அந்த மக்களை விடுவித்தார்களா? ராசா தன்  மகனையும் மனைவியையும் சந்தித்தானா? முடிவை திரையில் கண்டு ரசியுங்கள் , ஆனால்  ப்படி ஒரு முடிவை பாலாவினால் மட்டும் தான் யோசிக்க முடியும் !!!
 படம் நெடுகிலும் சாட்டையடி வசனங்கள், சோகம் கலந்த நகைச்சுவை, நெஞ்சை அதிர வைக்கும் க்ளைமாக்ஸ், இப்படி படம் முழுவதும் பட்டாசு கிளப்பியிருக்கிறார் பாலா. இவர் தான் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர் என்று மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.

நியாயமாரேஎன்று அதர்வா தேயிலை தோட்டத்து கங்காணியிடம் கதறும் காட்சி, அய்யோ நம் நெஞ்சில் இடியயே இறக்கியிருப்பார்  பாலா, அவரால்  மட்டுமே இப்படி ஒரு காட்சியை வைக்கமுடியும். 
இந்த படத்தை பார்த்த பிறகு நாம் டீ குடிக்கும் போதெல்லாம், இதற்காக தேயிலை தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் மற்றும் கஷ்டங்கள் நமது கண் முன் ஒருமுறை வந்து போவது உறுதி.
இனிமேல் என்னால் டீயே குடிக்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.
ஆங்கிலேயர் நமது இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், தேயிலை தோட்டத்து அடிமை தொழிலாளர்கள்  அனுபவித்த கொடுமைகளுக்கு ஆங்கிலயேர்கள் மட்டும் காரணமில்லை, காட்டி மற்றும் கூட்டி கொடுத்த வேலையை செய்ததது நமது இன மக்களும் தான் என  கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் பாலா. இது ஒரு உண்மையான கலைஞனிடம்  வந்து இருக்கும் உண்மையான திரைப்படம்.
 அதர்வா, வேதிகா மற்றும் தன்ஷிகா ஆகியோரின் நடிப்பு, என்ன சொல்றது? அவர்கள்  கதாப்பத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள், பிரமாதம்.
தேசிய விருது குழுவினர் அனைத்து விருதகளையும்  இந்த வருடத்திற்கு இப்போதே எடுத்து வைத்துக்கொள்ளலாம், பரதேசி படக்குழுவினருக்காக. 

76 comments:

  1. அதீத சோக உணர்வில் இருக்கிறீர்கள் போல

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பரே.
      இன்னும் அந்த படத்தின் பாதிப்பு போகவில்லை.
      தமிழ் சினிமாவின் மைல்கல் இந்தப்படம்.

      Delete
  2. உங்கள் விமர்சனம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே,
      கண்டிப்பாக படத்தை ஒரு தடவை பார்க்கவும்.

      Delete
  3. படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்... அவ்வளவு நல்லாவா இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. நண்பா, இது தான் படம்...
      இது மட்டும் தான் படம்...

      Delete
  4. Glad Bala came up with a great movie!

    ReplyDelete
    Replies
    1. thanks for your comment nanbaa..
      Master Piece from Bala..
      This ll b one of the best movie in Tamil.

      Delete
  5. படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு படம் பார்த்தீங்கன்னு தெரியும்ல? மச்சான் நடிப்பு எப்படி? அத பத்தி சொல்லவே இல்லை?
      Sakthi.

      Delete
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.
      படம் பாருங்கள்.
      இது மறக்க முடியாத படமாக அமையும்.

      Delete
    3. அதர்வாவின் நடிப்பு மிக மிக அருமை..
      ஒவ்வொவொரு காட்சியிலும் அவர் உழைப்பிற்கும், நடிப்பிற்கும் தேசிய விருது நிச்சயம்.

      Delete
  6. indru mudhal show engal ooril parka pogiran........ thanglin padhiviku nandri.....

    ReplyDelete
    Replies
    1. Thanks nanbaa...
      Kindly share it after seeing the movie..

      Delete
  7. படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்...!!!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பரே.
      இன்னும் அந்த படத்தின் பாதிப்பு போகவில்லை.
      தமிழ் சினிமாவின் மைல்கல் இந்தப்படம்.

      Delete
  8. ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவு எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள் நண்பா..
    பாலாவோட உழைப்பு வீண் போக வில்லை என்று தெரிகிறது. நான் நாளைக்கு போறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜ், உங்கள் தொடர்ச்சியான ஆதரவிற்கு..
      கண்டிப்பாக பார்த்துவிட்டு பதிவு ஒன்று போடுங்கள்..
      முடிவு நெஞ்சில் இடி விழுந்தது போல இருக்கும்..

      Delete
  9. பார்க்கத் தூண்டும் நல்ல விமர்சனம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
      படம் பாருங்கள்.
      இது மறக்க முடியாத படமாக அமையும்.

      Delete
  10. இதுவரை நான் படித்த இரண்டு விமர்சனங்களுமே படத்தை பார்க்கத்தூண்டுகிறது. நாள் பாலாவின் மிகபெரிய ரசிகன் அல்ல, ஆனால் பாலாவின் பாத்திரப்படைப்புகள் மிகவும் நேர்த்தியாக இருக்கும். பரதேசி பார்க்கவேண்டிய படம் போல் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. பாலா போன்றவர்கள் இன்னும் இருப்பதால் நாம் நிச்சயமாக நம்பலாம் நண்பா...

      Delete
  11. thangal vimarsanathirku nandri.. ipove paarkanum pola iruku.. ipodhavathu tamil cinemavai india cinema angikarikirathanu paarpom..

    ReplyDelete
    Replies
    1. படம் பாருங்கள் நண்பரே,
      உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. "சரிதான், இன்னொரு அழுகாச்சி காவியமா?"
    எத்தனை ஆண்டுகள்தான் அழுகாச்சி காவியங்களாக எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
    மக்களின் தன்முனைப்பை தூண்டும் வகையில், மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கத் தூண்டும் வகையில், மாற்றுச் சிந்தனையை வளர்க்கும் முறையில் ஏன் இவரெல்லாம் படம் எடுக்கக் கூடாது.

    ReplyDelete
    Replies
    1. படம் பாருங்கள் நண்பரே,
      உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
      எந்த வித compromise இல்லாமல் தான் எடுத்திருக்கிறார்

      Delete
  14. தோகா,

    விம்ர்சன்ம் நல்லா இருக்கு.

    ஒரு கலைப்படைப்பு என்னும் வகையில் பாலா சிறப்பாக படத்தினை கொடுத்திருக்கலாம், ஆனால் இதில் இருக்கும் சமூக உண்மையை கண்டிப்பாக சொல்லியிருக்க மாட்டார்,அதை சொன்னால் என்னவாகும்னு அவருக்கு தெரியும்,மேலும் சொல்ல விரும்பவும் மாட்டார்.

    எரியும் பனிக்காடு படித்தவர்களுக்கு புரியும், மேலும் ஒரு நாவலை அப்படியே எடுக்க முடியாது எனவும் சொல்லக்கூடும்,ஆனால் உண்மையை சொல்வதாக இருந்தால் வசனம் மூலமாவது காட்டியிருக்கலாம்,படம் பார்த்துவிட்டு தான் எப்படினு சொல்ல முடியும்,பார்த்துவிடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி வவ்வால் சார்,
      அனைத்து துரோகிகளையும் அவர் இந்த படத்தில் சாடியிருக்கிறார்.
      உண்மையான படைப்பு இந்த பரதேசி.
      நிச்சயம் பாருங்கள் வவ்வால்.

      Delete
  15. சிறப்பாக விமர்சனம்... பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
      படம் பாருங்கள் நண்பரே,
      உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

      Delete
  16. பகிர்வுக்கு நன்றி படத்தை பார்க்க ஆவலாக உள்ளது விரைவில் பார்ப்பேன்

    ReplyDelete
    Replies
    1. அருமையான படம் நண்பரே,
      பார்த்துவிட்டு கருத்தை பதிவு செய்யுங்கள்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  17. சுட சுட விமர்சனம் . இசை எப்படி இருக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. நம்ம தலைவர் இளையராஜா இல்லாததது குறை தான் நண்பரே.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ


      Delete
  18. Saravana Stores is modern version of the same.. so don't buy clothes from there anymore

    ReplyDelete
    Replies
    1. you are right nanbaa...
      thanks for your comment..

      Delete
  19. Marvellous writing.
    Keep it up.

    ReplyDelete
  20. மிகச் சிறந்த விமர்சனம். படித்ததும் அசந்து விட்டேன். உங்கள் கோணமே வேற, சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல..
      தங்கள் விமர்சனமும் மிக அருமை..

      Delete
  21. Sila padam appo parkum bodhu sila scene nalla irundhadhunala padame super nu thonum. Konjamnaal kalichu partha indha padathaya naama appo avlo parattinom nu namake thonum. Apdi dhan neenga indha padatha solringalonu enaku thonudhu. Naraya vimarsanam padichen. Padam ore izhuvai nu dhan nalla irukunnu sonnavangalum sonnanga. Ungaluku indha padathodasila scene ungala badhichadhunala indha padathoda kuraiya neenga solla virumbala nu theriyudhu.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
      அப்படியல்ல நண்பரே,
      நல்ல படைப்பை மனதார பாராட்டுவோமே,
      குறைகளை விட நிறைகளே அதிகமாக இருந்தது.

      Delete
  22. But do you know how we started to drink tea
    Let me share some interesting facts about 'History of Tea in India'. When British ruled India, they were desperate to find & stay in place of cool weather, which they found in hill station & migrated there. But what will they do without any income, so they found the climate is suitable to cultivate tea & started planting it & migrated lots of people to work in the field. Now the product 'tea' is ready, but there isn't any consumer to buy it, because we drank 'Neeragaram', curd milk.
    British started tea shops in towns & villages distributed tea freely for people to drink for many years. British waited patiently for years and turned our people to get addicted to tea. After years, people by default, just woke up & directly went to tea shop. Later they started to charge very less amount & today our day starts with Tea...

    ReplyDelete
    Replies
    1. Thanks for your comments nanbarae.
      What you said was 100% true. That was very informative.
      Thanks for sharing...
      Do visit regularly..

      Delete
  23. Recently I saw Django Unchained which deals with slavery & also won Oscar for screenplay & also nominated for best movie. But still i felt that movie was made to look stylish-western genre type with lots of action & Gun violence like most American movies but Paradesi is far more realistic and deserves many great awards.

    ReplyDelete
    Replies
    1. Django Unchained was Quetin's movie and may be that's the reason it had so much expectation... Addionally popular stars of Hollywood was in the movie. But Bala's paradesi movie carried no great stars yet the performance of the artist was awesome. And may be that was one of the reason the film was so realistic...

      Delete
  24. நேற்று காலையிலேயே உங்கள் பதிவை வாசித்து விட்டுத் தான் படத்தையே பார்த்தேன். க்ளைமாக்ஸில் அநீதிக்கு எதிராக கொந்தளிப்பது தேயிலைக் காட்டை எரிப்பது போன்ற வழக்கமான காட்சிகளை வைத்து விடுவாரோ என அஞ்சிக் கொண்டிருந்தேன். ஆனால் பாலா அந்த கிளிஷேதனத்தை எல்லாம் உடைத்தெறிந்து விட்டார். நேரமையான படைப்பு.

    PlatonicWave
    http://platonicwave.blogspot.in/2013/03/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
      உண்மை தான் நண்பரே...
      உண்மையான கலைஞனின் உண்மை படைப்பு.
      உங்களது விமரசனமும் அட்டகாசம் நண்பரே..

      Delete
  25. பார்த்துட்டீங்க

    பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
      கண்டிப்பாக பாருங்கள் நண்பரே..

      Delete
  26. படம் இப்படித் தான் நிறைவடைய போகிறது என்று நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை... அந்த ஒரு நொடியை நினைக்கும் பொழுது என்னுள் என்னவெல்லாமோ உணர்வுகள் எழுகிறது...

    அருமையான விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
      இன்னும் அந்த படத்தின் பாதிப்பு என்னை விட்டு அகலவில்லை.

      Delete
  27. உங்களின் முதல் தமிழ் பட விமர்சனமே நல்ல படத்திற்காக அமைந்ததற்கு வாழ்த்துக்கள் . முழு கதையையும் சொன்னதை தவிர்த்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம் ...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
      இனி நீங்கள் குறிப்பிட்டது போல இல்லாமல் எழுதுகிறேன்.

      Delete
  28. "தேசிய விருது குழுவினர் அனைத்து விருதகளையும் இந்த வருடத்திற்கு இப்போதே எடுத்து வைத்துக்கொள்ளலாம், பரதேசி படக்குழுவினருக்காக." +1000000 சகா... மிக நேர்த்தியான ஒரு படைப்புக்கு மிக நேர்மையான விமர்சனம். பாலா மீண்டு(ம்) வந்திருக்கிறார்... இந்த மாதிரி ஒரு படத்தை இவரால் மட்டுமே எடுக்க முடியும் என ஒவ்வொரு காட்சியிலும் சொல்லலாம்... yes, to say.. Bala is Back :)

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பரே
      பாலாவின் மிகச்சிறந்த படைப்பு இது தான்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  29. நல்ல விமர்சனம் அருமை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  30. what s ur rating In a scale of 5

    ReplyDelete
    Replies
    1. 4.9 My Friend.
      Thanx for your visit and comment

      Delete
  31. இடலக்குடி ராசா கதையை படிக்கணும்.பாலா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனால் கதை பாலா பேர் வருது.டேனியல்,நாஞ்சில் பேரையல்லவா போட்டிருக்கணும். நான் கடவுளில் ஜெயமோகனின் நாவல் பாதி கதை. பிதாமகன் ஜெயகாந்தனின் சிறுகதை ஒட்டிய கதை. அதென்னமோ கதை-தன் பெயரை விட்டுக்கொடுக்க மனமில்லை பாலாவுக்கு..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
      இவன்தான் பாலா என்ற புத்தகத்தில் கூறியிருப்பார்.

      Delete
  32. உங்கள் விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  33. இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை காலைக் காட்சி பார்த்தேன்....
    பிற்பகல் 3 மணியில் இருந்து .... வெளியே சொல்லக்கூடாது வெற்றிகரமா செஞ்சி முடிச்சிட்டு சொல்ரேன்...
    பாலா ஒரு நல்ல விசயத்தை விதைத்து விட்டார் .. அது வளர வளர உங்களிடம் கூறுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
      உங்களுடைய அந்த கருத்து வெற்றிகரமாக வளர வாழ்த்துக்கள்

      Delete
  34. Ithu varai indiya thuraippada varalaarrill ithu thaann ithu mattum than nalla padam....

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பரே
      பாலாவின் மிகச்சிறந்த படைப்பு இது தான்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  35. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  36. பரதேசி நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் படம் போகிறது

    ReplyDelete
  37. பரதேசி ஒருமனதாக பாலா தான் uncompromised பார்வை தைரியம் மற்றும் அன்பு படத்தை-தயாரிப்பாளர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டை

    ReplyDelete
  38. அற்புதமான இறுதிகாட்சி

    ReplyDelete