Friday, 27 July 2012

The Shining - திரை விமர்சனம்


The Shining - திரை விமர்சனம்


ஒரு ஹாரர் த்ரில்லர் வகை படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்தப்படம். ஒரு ஹாரர் த்ரில்லர் வகை திரைப்படத்தை ஒருமுறை பார்க்கலாம், இரண்டாவது முறை பார்க்கும் போது சஸ்பென்ஸ் உடைந்ததால் போர் அடிக்கத்துவங்கும், ஆனால் இந்தப்படத்தை நீங்கள் எத்தனை முறை பார்த்தாலும் கொஞ்சம் கூட போர் அடிக்காத, பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் இந்தப்படம். திரைக்கதையில் ஸ்டான்லி க்யுப்ரிக் (Stanley Kubrick) பல முடிச்சுகளை போட்டு இருப்பார், அதை இரண்டாவது முறை பார்க்கும் போது தான், நாம் படம் பார்க்கும் போது பல முடிச்சுகளை தவற விட்டது தெரியும். ஹாரர் த்ரில்லர் வகை படங்களில் இது தான் மாஸ்டர் பீஸ். இந்த வகை படங்களில் இதுபோல ஒரு படம் இதுவரை வந்ததில்லை என நிச்சயமாக கூறலாம்.
ஹாலிவுட்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஸ்டான்லி க்யுப்ரிக்(Stanley Kubrick)இப்படத்தை இயக்கியுள்ளார். இவரை பற்றி சொல்லவேண்டுமானால் இந்த பதிவு போதாது. இவர் எடுத்தது மொத்தம் 13  படங்கள் தான், அதில் The Killing, Full Metal Jacket, Paths of Glory, Spartacus, Dr.Strangelove, 2001: A Space Odyssey, A Clockwork Orange, Barry Lyndon என அத்தனை படங்களும் IMDB Top 250- ல் உள்ளவை. அத்தனையும் ஒவ்வொரு வகையில் மாஸ்டர் பீஸ்கள். இயக்குனர்களில் இவர் ஒரு ஜீனியஸ். இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson) நடிப்புலகின் முடிசூடா மன்னர்களில் ஒருவர். இவரது நடிப்பின் மிகப்பெரிய ரசிகன் நான். நடிகர்களுக்கு ஸ்க்ரீன் பிரசன்ஸ் மிகவும் முக்கியம், அதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. பத்து பேர் இருக்கும் ஒரு காட்சியில் கூட இவர் மட்டும் தனியாக தெரிவார். 12  முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு முறை வென்றவர். 
மனுஷன் இந்தப்படத்தில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். எல்லாருக்கும் Batman  படங்களில் வரும் Joker கேரக்டர் ரொம்ப பிடிக்கும், அதிலும் The  Dark  Knight படத்தில் ஜோக்கராக நடித்த Heath  Leadger - ஐ மிகவும் பிடிக்கும். ஆனால் என்னை பொறுத்தவரையில் Tim  Burton  இயக்கிய Batman  படத்தில் ஜோக்கராக நடித்திருக்கும் ஜாக் நிக்கல்சன் நடிப்புதான் அட்டகாசம்.
 இந்தப்படத்தில் ஜாக் நிக்கல்சன் (Jack Torrence)ஆகவும், Shelley Duvall அவரது மனைவி  Wendy Torrence-ஆகவும், Danny Lloyd  அவர்களது 6 வயது மகன் Danny Torrence-ஆகவும் நடித்துள்ளனர். Stephen King  எழுதிய The Shining-1977 என்ற நாவலை தழுவி தான் இந்தத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
 காலராடோ என்ற ஊரின் மலை உச்சியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய ஹோட்டலை பனி பொழியும் நாட்களில் பாதுகாப்பதற்காக தன் மனைவி மற்றும் மகனுடன் செல்கிறான் ஜாக் டோர்ரன்ஸ். பனிக்காலம் என்பதால் பனிப்பொழிவு அந்தப்பகுதியில் மிக அதிகமாக இருக்கும், அந்த சமயத்தில் ஹோட்டல் இயங்காது. அதனால் ஹோட்டலை பராமரிக்கும் பணிக்கு ஜாக் டோர்ரன்ஸ் அமர்த்தப்படுகிறான், அந்த சமயத்தில் அவன் குடும்பம் மட்டும் தான் அங்கு இருக்கும். எழுதுவதில் ஆர்வமுள்ள ஜாக் டோர்ரன்ஸ் இந்த தனிமை தனக்கு எழுதுவதற்கு உபயோகமாக இருக்கும் என்று நினைத்து இந்த வேலையை ஏற்றுக்கொள்கிறான். இந்த பணியில் சேரும் முன்பு அந்த ஹோட்டல் மேனேஜர் சில வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்ததாக ஜாக்கிடம் கூறுகிறான். அங்கு அவனைப்போல ஹோட்டலை பாதுகாப்பதற்கு வரும் ஒருவன் தனிமையின் காரணமாக பித்துப்பிடித்து தன் மனைவி மற்றும் இரு  பெண் குழந்தைகளையும் கொன்று, பின்பு தானும் தற்கொலை செய்து கொள்கிறான் என்று ஜாக்கிடம் சொல்கிறான். ஜாக் இந்த சம்பவத்தை பெரிதுப்படுத்தாமல்  பணியில் சேருகிறான்.
அவர்களது மகனுக்கு ESP (Extrasensory perception ) எனப்படும் சக்தி உண்டு, நடந்த சம்பவங்கள் மற்றும் நடக்கபோகும் சம்பவங்களை முன்கூட்டியே அறியும் மற்றும் பார்க்கும் திறன். இந்த அபூர்வ சக்தியை பற்றி அவனது பெற்றோருக்குக் கூட தெரியாது. அவன் நடக்கப்போகும் சில சம்பவங்களை பற்றி தன் அம்மாவிடம் சொல்லும்போது, அதை அவள் நம்பாமல் அவனுக்கு ஏதோ குறை என்று எண்ணுகிறாள்.
ஹோட்டலுக்கு வரும் ஜாக்கின் குடும்பத்திற்கு ஹோட்டலை சுற்றிக்காட்டுகிறார் அங்கு வேலை செய்யும் சமையல்காரர், அவருக்கும் ESP (Extrasensory perception ) எனப்படும் சக்தி உண்டு. டேனியிடமும் அந்த சக்தி இருப்பதை அறிந்து கொள்கிறார். அந்த ஹோட்டலில் ரூம் 237 -க்கு மட்டும் போக வேண்டாம் மற்றும் அந்த ஹோட்டலில் கெட்ட சக்தி இருக்கிறது  என்று எச்சரித்து விட்டு கிளம்புகிறார்.
 தனது மனைவி மற்றும் மகனுடன்  ஜாக் அங்கு தனியாக வசிக்க துவங்குகிறான் , ஜாக் தனது புத்தகம் எழுதும் வேலையில் மூழ்கிப்போகிறான். அவனது மனைவி சமையல் வேலைகளை கவனித்து வருகிறாள், மகன் டேனி தனியாக விளையாடிக்கொண்டு இருக்கிறான். டேனிக்கு அவனது மூன்று சக்கர வண்டியில் ஹோட்டல் முழுவதும் சுற்றுவது தான் வழக்கம்.  
 அந்த சமயத்தில் அந்த ஹோட்டலில் இறந்து போனதாக சொல்லப்படும் இரு பெண் குழந்தைகளின் உருவம் மற்றும் லிப்ட்-ல் இருந்து ரத்தம் ஆறு போல பாய்ந்து வருவது அடிக்கடி டேனிக்கு மட்டும் தெரிகிறது. அந்த ஹோட்டல் முழுவதும் அவன் மூன்று சக்கர வண்டியில் சுற்றுவதை மிக அழகாக ஒரு அதிர்வு கூட இல்லாமல் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்தப்படத்தில் உள்ள மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்று இது.
சில நாட்களுக்கு  பிறகு ஜாக்கால் முன்பு போல எழுத முடியாமல், அமைதி, தூக்கம் இன்றி தவிக்கிறான், மனைவியிடமும் எரிந்து எரிந்து விழுகிறான். அவன் எழுதிகொண்டிருக்கும் போது, தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவளை எச்சரிக்கிறான். ஜாக் திடீர் தீடிரென்று தூக்கத்தில் கத்துகிறான் யாரிடமும் பேசாமல்  மனநிலை பாதிக்கப்பட்டவனை போல் ஆகிறான்.
பனிப்பொழிவு உச்சத்தை அடைகிறது, ஹோட்டலை விட்டு செல்ல முடியாதவாறு மிகக்கடுமையான பனிப்பொழிவு. தொலைதொடர்பு சாதனங்கள் வேலை செய்யாமல், அதனால் வெளி உலகத்துடனான தொடர்பு முற்றிலும் இல்லாமல் போகிறது.
டேனிக்கு
237 -ம் அறைக்கு சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் வலுக்கிறது. அப்போது விளையாடிகொண்டிருக்கும் டேனியை நோக்கி ஒரு பந்து 237 -ம் அறையில் இருந்து வருகிறது. திறந்திருக்கும் அந்த அறையில் தனது அம்மா உள்ளே இருக்கிறாள் என்று நினைத்து உள்ளே செல்கிறான். சமையலைறையில் வேலை செய்துக்கொண்டிருக்கும் ஜாக்கின் மனைவி ஒரு அலறல் சத்தம் கேட்டு ஜாக்கிடம் ஓடி வருகிறாள், அவனிடம் என்னவென்று விசாரிக்கிறாள், அதற்கு ஜாக், மனைவி மற்றும் மகனை கொலைசெய்வதாக கனவு கண்டேன் என்று கூறுகிறான். அந்த சமயத்தில் அங்கு வரும் டேனியின் கழுத்தில் யாரோ அறைந்த காயத்தை ஜாக்கின் மனைவி பார்க்கிறாள்.
 இருவரும் இங்கு இருக்க டேனியை அறைந்தது யார்? என்று யோசிக்காமல் அதை செய்தது ஜாக் தான் என்று சந்தேகம் கொள்கிறாள், அதனால் அவனிடம் கோபித்துகொண்டு அவளது அறைக்கு சென்று விடுகிறாள். அவன் எழுதும் இடத்திற்கு வரும் மனைவி அவன் எழுதியதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். "All work and no play make Jack a dull boy" என்று திரும்ப திரும்ப இதே வரிகளை ஜாக் ஆயிரக்கணக்கான பக்கங்களில் டைப் செய்து வைத்திருக்கிறான். 
எழுதுகிறேன் என்று கூறிவிட்டு, ஒரே ஒரு வரியை மட்டும் திரும்ப திரும்ப ஜாக் டைப் செய்வது ஏன் 
அவன் உண்மையில் மனநிலை பதிக்கப்பட்டுள்ளனா? அல்லது அந்த ஹோட்டலில் உள்ள அமானுஷ்ய சக்திகள் அவனை ஆட்டி படைக்கின்றனவா?
உண்மையில் டேனியை அறைந்தது யார்?
அந்த 237 -ம் அறையில் அப்படி என்னதான் உள்ளதுஇது போன்ற நிறைய புதிர்களுக்கான பதில்களை இந்த முதுகெலும்பை சில்லிட வைக்கும் படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
 ஹாரர், த்ரில்லர் வகை படங்கள் எப்பொழுதும் மனிதர்களையோ அல்லது பேய்களை மிகவும் அகோரமாக காட்டி பார்வையாளர்களை பயமுறுத்துவார்கள்.. ஆனால் இந்தப்படத்தில் அப்படி கிடையாது, காட்சி அமைப்பு மற்றும் ஜாக்கின் நடிப்பிலயே பார்வையாளர்களை பயமுறுத்தி விடுவார்கள். இந்தப்படத்தில் ஒளிப்பதிவு அட்டகாசம். ஒவ்வொரு காட்சியும் wallpaper  போல இருக்கும், மிக சிரத்தையாக எடுத்திருப்பார் இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்.

இந்தப்படம் ஹாரர் மற்றும் த்ரில்லர் பட ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து,25 comments:

 1. Hi..
  The best review you have done so far. I read all ur articles and I visit ur blog Often..
  One of the best blogs I ve ever seen.
  Write more.. And introduce us more new classic films..
  Keep on writing.

  ReplyDelete
 2. @@ இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.@@
  இதுல நானும் ஒருத்தன்..இவரோட அனைத்து படங்களையும் டிவிடி-ல வச்சிருக்கேன்..எல்லாமே மாஸ்டர்பீஸ்கள்தான்..டவுட்டே இல்ல/

  @@ இவரது நடிப்பின் மிகப்பெரிய ரசிகன் நான் @@
  என்னையும் சேர்த்துக்குங்க நண்பா.

  @@ எப்பொழுதும் மனிதர்களையோ அல்லது பேய்களை மிகவும் அகோரமாக காட்டி பார்வையாளர்களை பயமுறுத்துவார்கள்.. ஆனால் இந்தப்படத்தில் அப்படி கிடையாது, காட்சி அமைப்பு மற்றும் ஜாக்கின் நடிப்பிலயே பார்வையாளர்களை பயமுறுத்தி விடுவார்கள். @@
  100 சதவீதம் உண்மைங்க..கேமரா, ஜேக் இவங்கல வச்சியே ஹாரர் படம் எடுக்க முடியுமுனா அது குப்ரிக்கால் மட்டுமே சாத்தியம்.

  இந்த படம் ரெண்டு முறை பார்த்தாச்சு நண்பா..பிரபலமான சினிமா பதிவர்கள் எழுத மறக்காத படமிது.
  ரொம்ப நாளாவே பதிவொன்று எழுதிட்டு வரேன்..இன்னொரு முறை பார்க்கனுமுனு சொல்லுவது உங்க விமர்சனம்..கதையை ரொம்ப சுருக்கமா அழகா எழுதுறீங்க..விமர்சனம் வழக்கம் போல சூப்பர்..மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.
   நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.

   Delete
 3. நண்பரே!
  உங்க பதிவு பத்தி சொல்ல தெரியல...நேற்றிலிருந்து நான் முட்டாளாயிட்டேன்.

  ஆனால் நேற்று வரை எனக்கு குப்ரிக்,நிக்கல்சன் எல்லோரையும் பிடிக்கும்.
  இன்று அப்படியில்லை.
  காரிகன்னு எனக்கு ஒரு ஞான குரு கிடைச்சிருக்காரு.
  அவர் சொல்றதுதான் எனக்கு உலகசினிமா.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் தெளியலியா பிரதர்?

   Delete
  2. மிக்க நன்றி,
   உங்களது ஞான குருவை எங்களுக்கும் அறிமுகப்படுத்துங்களேன்.

   Delete
 4. இந்தப்படத்தை பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் ஏதோ ஒன்று செய்யும். கண்டிப்பாக தவற விடக்கூடாத படம்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் நண்பரே, நானும் இந்தப்படத்தை ஐந்து முறைக்கு மேல் பார்த்துவிட்டேன்.
   எப்பொழுது பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போலவே தோன்றும்.

   Delete
 5. குப்ரிக் திரைப்படங்களிலே எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.

  //////ஹாரர், த்ரில்லர் வகை படங்கள் எப்பொழுதும் மனிதர்களையோ அல்லது பேய்களை மிகவும் அகோரமாக காட்டி பார்வையாளர்களை பயமுறுத்துவார்கள்.. ஆனால் இந்தப்படத்தில் அப்படி கிடையாது, காட்சி அமைப்பு மற்றும் ஜாக்கின் நடிப்பிலயே பார்வையாளர்களை பயமுறுத்தி விடுவார்கள்///////
  உண்மை தான், காட்சிகளையும் பின்னணி இசையையும் வைத்தே பார்வையாளரை பயமுறுத்தி இருப்பர் குப்ரிக்.

  நல்ல படம் , அதற்கேற்ற சிறந்த விமர்சனம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
   படம் முழுவதையும் ஜாக் தன் தோளில் சுமந்திருப்பார்.

   Delete
 6. படம் பார்த்து பயம் வருதோ இல்லையோ! உங்களோட எழுத்தை படிக்கும் போது பயம் வருது! கண்டிப்பா பாக்கவே மாட்டேன்! அப்புறம் இரவில எங்கூட "உச்சா " போக நீங்களா வருவீங்க? # தி ரைற் " படம் பாத்து நான் பட்டதே போதும்! அப்புறம் வரட்டுமா!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா.
   படம் பாருங்கள். பேய் எல்லாம் வராது.
   காட்சியமைப்பு தான் நம்மை பயமுறுத்தும்.

   Delete
 7. தல.. நீங்க நாளுக்கொரு விமர்சனம் போடுறீங்க போல.. சில பதிவுகள் மிஸ்ஸாயிட்டுது. படிச்சுடுறேன்..

  ஷைனிங் படம் நிறைய வாட்டி கேள்விப்பட்டு, ஸ்டில்ஸ் கொஞ்சம் பார்த்துட்டு, ட்ரைலர் கூட பார்த்துட்டு படத்தை மடடும் பார்க்காம விட்டுட்டேன்... தப்புத்தப்புத்தப்பு.. கண்டிப்பா(இது நிஜமாவே கண்டிப்பாதான்) பார்த்துடுறேன்!


  //அந்த சமயத்தில் அந்த ஹோட்டலில் இறந்து போனதாக சொல்லப்படும் இரு பெண் குழந்தைகளின் உருவம் //
  இந்த ஒரே கலர் சட்டை போட்டுக்கிட்டு ஏதாவது கொரிடோர்ல நிக்குற பெண் பிள்ளைகளை எத்தனையோ பேய்படத்துல யூஸ் பண்ணிக்கிட்டு வர்றாங்க. ஒருவேளை இந்தப் படம் தான் அதுக்கெல்லாம் trendsetterஆ இருக்குமோ!!!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
   நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே.
   நிறைய பேய் படங்களில் இந்த சீனை சுட்டு இருப்பார்கள்.

   Delete
 8. nalla padam.....arimukaththukku nanri....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

   Delete
 9. விமர்சனம் அருமை நண்பா.ஆனால் இறுதி காட்சியில் காட்டப்படும் hedge வடிவ தோட்டம் பார்பவர்களை அசரடிக்கும் .அது பற்றி குறிப்பிடவில்லையே.இருந்தாலும் அருமையான பதிவு.தொடருங்கள்.நீங்கள் விமர்சிக்க தேர்ந்தெடுக்கும் படங்கள் master பீஸ்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.
   அதைப்பற்றி எழுதலாம் என்றும் தான் இருந்தேன்,சஸ்பென்ஸ் உடைந்து போகும் என்று தான் எழுதவில்லை.

   Delete
 10. ஹாரர், த்ரில்லர் வகை படங்கள் எப்பொழுதும் மனிதர்களையோ அல்லது பேய்களை மிகவும் அகோரமாக காட்டி பார்வையாளர்களை பயமுறுத்துவார்கள்.. ஆனால் இந்தப்படத்தில் அப்படி கிடையாது, காட்சி அமைப்பு மற்றும் ஜாக்கின் நடிப்பிலயே பார்வையாளர்களை பயமுறுத்தி விடுவார்கள். "

  படத்தின் எசன்சை நச் என சொல்லி விட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...
   சரி தான்... படத்தின் highlight ஜாக்கின் நடிப்பு...

   Delete
 11. உங்கள் தள வடிவமைப்பு போல இதுவரையில் எந்த வலைதளத்திலும் கண்டது இல்லை. நான் அதிகம் படங்கள் பார்ப்பதில்லை. மிக அற்புதமான எழுத்து நடை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...
   சில படங்கள் மிக அருமையாக இருக்கும். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்...

   Delete
 12. இப்படத்தை நேற்றுதான் பதிவிறக்கினேன்.தனிமையில் பார்த்துவிட்டு தொடர்புக்கு வருகிரேன்.நன்றி

  ReplyDelete