Monday, 16 July 2012

Hotel Rwanda - திரைவிமர்சனம்


இந்த திரைப்படம் ருவாண்டா(Rwanda) -வில் 1994-ஆம் ஆண்டு உண்மையாகவே நடந்த ரத்த சரித்திரம்(இனப்படுகொலை). ஹிட்லர் காலத்தில் யூதர்கள் (Jews)-க்கு எதிரான இன படுகொலைகளுக்கு பின்னர் ருவாண்டா இனப்படுகொலை சம்பவத்தில் இறந்தவர்கள் தான் அதிகம். சுமார் 10 லட்சதிற்கும் மேலானவர்கள் படுகொலை செய்யபட்டார்கள்.
Paul Rusesabagina  என்ற 4star ஹோட்டலின் மேனேஜர் தைரியம் மற்றும் சாதுர்யத்தால் 1268 டூட்சி இனமக்களின் உயிர்களை காப்பாற்றினார்.
இந்த இனப்படுகொலையின் போது பத்து லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். குறிப்பாக (தான்சானியா, உகாண்டா மற்றும் காங்கோ).
இந்த சம்பவம் நடக்கும் போது ஐநா சபை மற்றும் உலக நாடுகள் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்(அண்மையில் இலங்கையில் நடந்ததது போல்).
இந்த திரைப்படத்தை பார்பதற்க்கு முன்னால் ருவாண்டா-வில் நடந்த  இன படுகொலைகளுக்கு காரணம் என்ன என்ற முன்னோட்டத்தை பார்ப்போம்.
ஆப்பிரிகா -வில் உள்ள ஒரு சிறிய நாடு தான் ருவாண்டா, அங்கு டூட்சி (tutsi) மற்றும் (Hutu) ஹூட்டு என்று இரு பிரிவினர் இருந்தனர். டூட்சி  இனத்தவர் ஆடு, மாடுகளுக்கு சொந்தகாரர்கள் என்றும் மற்றவர்களை ஹூட்டு என்றும் அழைக்கப்பட்டனர். முதலாம் உலக போரில் ஜெர்மனி ருவாண்டா-வை கைப்பற்றிய போது, டூட்சி இன மக்கள் பார்பதற்கு ஹூட்டு மக்களை விட கொஞ்சம் வெள்ளையாகவும், உயரமாகவும் இருப்பதாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 2-ஆம் உலகப்போரின் போது, பெல்ஜியம் ருவாண்டாவை கைப்பற்றிய பொது டூட்சி மற்றும் ஹூட்டு இனத்தவர்ககை நிரந்தரமாக பிரித்துவிட்டது. அவர்களுக்கு ID கார்டு-ஐ வழங்கி அவர்களுக்குள் பிரிவை உண்டாகிவிட்டது.
டூட்சி  இன மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக (10%), ஹூட்டு(90%) இருந்தாலும், பெல்ஜியம் அதிகாரத்தை டூட்சி  இன மக்களுக்கு கொடுத்தது. ருவாண்டா பெல்ஜியத்திடம் இருந்து 1959 ஆம் ஆண்டு விடுதலைபெற்ற போது பெல்ஜியம் அதிகாரத்தை ஹூட்டுவிடம் கொடுத்து விட்டது. இது அதிக மக்கள் தொகையில் உள்ள ஹூட்டு இன மக்களை மிகவும் கோபப்படுத்தியது.
1973 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட (Habyarimana) ஹூட்டு இனத்தை சேர்ந்த ஜனாதிபதி,டூட்சி  இன மக்களை அரசாங்கத்தில் சேர்த்து  கொள்ளவில்லை, இருப்பினும் 1993 ஆம் ஆண்டு அவர் டூட்சி  இன மக்களை சேர்த்து கொண்டார். இது ஹூட்டு இன மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 1994-யில் அவர் விமானத்தில் வரும் போது அவர் படுகொலை செய்யப்பட்டார். யார் அந்த கொலைக்கு பொறுப்பு என்று தெரியவில்லை. இருப்பினும் ஹூட்டு லாபம் அடைத்தனர். 24 மணி நேரத்திற்குள் ஹூட்டு போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கைப்பற்றினர். இந்த ருவாண்டா இனவெறி படுகொலைகள் சுமார் 100 நாட்கள் நடந்தது. இதற்கு அந்த நாட்டு ரேடியோ மற்றும் செய்திதாள்கள் உடந்தையாக இருந்தனர்.
ஹூட்டு போராட்டக்காரர்கள்(Interahamwe- இதற்கு ஒன்றாக செயல்படுபவர்கள் என்று அர்த்தம்) , அந்த நாட்டு பிரதமரையும் விட்டுவைக்க வில்லை. அவரை பாதுகாத்த 10 பெல்ஜியம் நாட்டு வீரர்களை  கொன்று விட்டனர். இதனால் பெல்ஜியம் நாடு அவர்கள் நாட்டு படைகளை திரும்பி அழைத்து கொண்டது. ஹூட்டு இனவெறியர்கள் , ID கார்டு ஐ பார்த்து, அனைத்து டூட்சி  இன மக்களை கொன்றனர். அவர்கள் ஆலயங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், போன்ற எந்த இடத்தையும் விட்டுவைக்கவில்லை. 
துப்பாக்கி  குண்டு வாங்க காசு எல்லை என்பதால், கத்தியை பயன்படுத்தி மக்களையும்  அடுத்த டூட்சி  தலைமுறையே  இருக்ககூடாது  என்பதற்காக சிறு குழந்தைகளையும் , பெண்களையும் துன்புறித்தி கொன்றனர். கடைசியாக  டூட்சி இனத்தை சேர்ந்த பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்கள் RPF(Rwandan Patriotic Front) சிறுது சிறிதாக நாட்டை மீட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த திரைப்படம் இனப்படுகொலையின் போது நடந்த ஒரு உண்மை சம்பவம். Terry George இயக்கிய  இத்திரைப்படத்தில் Don Cheadle(Paul Rusesabagina),Sophie Okonedo (Tatiana), Nick Nolte (Colonel Oliver) மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம்  டாப் 250 ல்  - 136 வது இடத்தையும், 3 ஆஸ்கார் அவார்ட்ஸ்-க்கு பரிந்துரைக்கப்பட்டது (சிறந்த நடிகர், நடிகை மற்றும் திரைக்கதை). (ஒரு வேளை அமெரிக்காவையும், ஐநா சபையையும் விமர்சித்ததிற்காக ஆஸ்கார் கொடுக்கவில்லையோ என்னோவோ??).
ருவாண்டா- வில் உள்ள ஒரு ஹோட்டலில் 1268 பேருக்கு மேல் உள்ள டூட்சி  இனத்தை சேர்ந்தவர்களை  போராட்டகாரர்களிடம் இருந்து  Paul Rusesabagina என்ற 4star ஹோட்டலின் மேனேஜர் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை.
பால் Milles Collines என்ற 4 ஸ்டார் ஹோட்டலில் மேனேஜர் ஆக உள்ளான். அவன் ஹூட்டு என்ற போதிலும் அவன் மனைவி டூட்சி  இனத்தை சேர்ந்தவள். அவன் வீட்டு அக்கம்பக்கத்தினர் , மனைவியின் தம்பி மற்றும் அவனின் 2 குழந்தைகள் உட்பட எல்லோருமே டூட்சி  இனம் தான். அவன் வேலை செய்வது ஸ்டார் ஹோட்டல் என்பதால் அதிகமான ஐரோப்பியர்கள் தங்கியிருப்பார்கள். இந்நிலையில் அந்த ஊரில் ஜனாதிபதி இறந்து விட்டதால் கலவரம் மூள்கிறது. அந்த ஊரில் உள்ள அனைத்து டூட்சி  இன மக்களையும் கொல்கின்றனர் போராட்டகாரர்கள் .அவன் வீட்டில் உள்ள அக்கம் பக்கத்தினர் அவன் ஹூட்டு என்பதால் அவன் வீட்டில் தஞ்சம் அடைகின்றார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு தப்பித்து அவன் வேலை செய்யும் ஹோட்டலுக்கு செல்கிறான் பால்.
ஐநா சபையை சேர்ந்த கர்னல் ஆலிவர், மற்ற இடத்தில் இருக்கும் டூட்சி  மக்களை காப்பாற்றி ஹோட்டலுக்கு அழைத்து வருகின்றான். எப்படியாவது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவிக்கு வருவார்கள் என்றும் அது வரையிலும் இந்த ஹோட்டல் தான் பாதுகாப்பான இடம் என்றும் சொல்கிறார் அவர்.  ஆனால் அதற்கு எதிர்மறையாக அந்த நாடுகள் உதவிக்கு வரவில்லை.  அந்த ஊரில் உள்ள  தங்கள் நாட்டு மக்களை மட்டும் அழைத்து வர ஆட்களை அனுப்புகிறது. காரணம் இந்த மக்கள் கருப்பு இன ஆப்பிரிக்கர்கள். அவர்களால் அந்த நாடுகளுக்கு எந்த ஆதாயமும் இல்லை.பேருக்கு ஐநா சபை யின் 15 வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்கு சுடுவதற்கு அதிகாரம் கிடையாது.
எல்லா வெளிநாட்டு மக்களும் சென்ற பின்னர் , போராட்டகாரர்கள் விடுதிக்குள் நுழைகிறார்கள்.அவன் என்ன செய்தான்? 100 நாட்களில் எப்படி 1268 மக்களை காப்பற்றினான்? யார் அவனுக்கு உதவியது? அந்த ஹோட்டலை விட்டு எப்படி தப்பி சென்றனர் ? திரைப்படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

உண்மையான Paul  Rusesabagina தற்போது அவர் மனைவி, குழந்தைகளுடன் பெல்ஜியம் நாட்டில் வசித்து வருகிறார்.
இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய மக்கள் சுமார் பத்து லட்சம் பேர்  உகாண்டா , காங்கோ போன்ற நாடுகளுக்கு அகதிகளாக சென்றுவிட்டனர். சொந்த நாட்டை விட்டு இப்படி உயிருக்கு பயந்து அகதிகளாக சென்ற அந்த மக்களை நினைக்கும் போது நம் இலங்கை மக்கள் நியாபகம் தான் வருகின்றது.

என்ன காரணங்களை உலக  நாடுகளும் ஐநா சபையும் கூறினாலும் 100 நாட்கள் நடந்த இந்த சம்பவத்தை அவர்கள் அடக்கி அப்பாவி மக்களின் உயிரை காப்பற்றி இருக்கவேண்டும்.

அமெரிக்காவின் அப்போதைய  ஜனாதிபதி கிளிண்டன்-க்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதே தெரியாது என்று கூறியுள்ளார். ஈராக் குவைத் நாட்டின் மீது படையெடுத்தபோது உடனடியாக தன் படைகளை அனுப்பி தடுத்த அமெரிக்கா ஏனோ(ஏனென்றால் ருவாண்டாவில் கச்சா எண்ணை இல்லையே, ஆதாயம் இல்லாமல் எப்படி அவர்கள் வருவார்கள்) ருவாண்டா மக்களை இனப்படுகொலையில் இருந்து மீட்க முன்வரவில்லை.

கருப்பாக பிறந்தால் என்ன பாவமா? இல்லை ஆப்பிரிக்கா மற்றும் ஏழை நாடுகளில் பிறந்தால் பாவமா?இது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.ஒன்று மட்டும் நிச்சயம், இது போன்ற இனப்படுகொலைகள் நடக்காமல் இருக்க மனிதநேயமும் அன்பும் நம்மிடம் நிறைய வளர வேண்டும்.
சற்று நீளமான பதிவாகி போனதற்கு மன்னிக்கவும்.

21 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. படம் பார்கிறேன் - பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே!
   கண்டிப்பாக படம் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

   Delete
 3. ப்ளீஸ் செக் யுவர் ஸ்பேம் பாக்ஸ்

  ReplyDelete
 4. //கருப்பாக பிறந்தால் என்ன பாவமா? இல்லை ஆப்பிரிக்கா மற்றும் ஏழை நாடுகளில் பிறந்தால் பாவமா?//

  //3 ஆஸ்கார் அவார்ட்ஸ்-க்கு பரிந்துரைக்கப்பட்டது (சிறந்த நடிகர், நடிகை மற்றும் திரைக்கதை). (ஒரு வேளை அமெரிக்காவையும், ஐநா சபையையும் விமர்சித்ததிற்காக ஆஸ்கார் கொடுக்கவில்லையோ என்னோவோ??).//

  நீங்கள் எழுப்பிய கேள்வி உலகெங்கும் எழுப்பப்பட வேண்டும்.
  எழுப்பப்படும் நாளே...உலகின் சுபிட்ச நாள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் நண்பரே!!
   அப்படி ஒரு நாள் என்று வருமோ ? காத்திருப்போம்!!!!!

   Delete
 5. ஆதங்கம் மனசுல இருந்தால் எவ்வளவு நீளமானாலும் எழுதிக் கொட்டிவிட வேண்டும் நண்பா! கொஞ்ச நாட்களுக்குள்ளேயே முன்னேறி உங்களுக்கென்றொரு தனிப்பாணியை எடுத்துக் கொண்டீர்கள்.. வாழ்த்துக்கள்!

  படம் கேள்விப்படிருக்கேன்.. ஆனால் பார்த்ததில்லை.. நேரம் கிடைக்கையில் பார்க்க முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
 6. மிக்க நன்றி நண்பா! உங்கள் கருத்துகள் சந்தோஷத்தை அளிக்கிறது.
  படம் பார்க்கும் போது, தோன்றிய மனதின் எண்ணங்கள் நிறைய கேள்விகளை எழுப்புகிறது!
  கண்டிப்பாக படம் பார்த்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நண்பா.

  ReplyDelete
 7. nice movie it was an real incident

  ReplyDelete
 8. சூப்பர் நண்பரே..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே...

   Delete
 9. பாஸ்,
  ரொம்ப ரொம்ப நல்லா எழுதி இருக்கேங்க...எனக்கு மிகவும் பிடித்த படம் இது...அருமையா வர்ணனை செஞ்சு இருக்கேங்க...இந்த ஸ்டைல் நல்லா இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே!
   மிக கொடுரமான சம்பவம்!

   Delete
 10. A Small suggestion..
  Pls try to add Labels to your posts... like சினிமா, உலக சினிமா, திரைவிமர்சனம்,
  Tamilmanam takes our posts based on labels.. if the label is சினிமா it will be shown in http://www.thiraimanam.com/
  If not our post will not be shown in Tamilmanam...
  Happy blogging.. :)

  ReplyDelete
 11. படம் பார்த்தேன். கண்ணீரை வரவழைத்தது. பதிவுக்கு நன்றி.

  செய்யது
  துபாய்

  ReplyDelete
 12. வருகைக்கு நன்றி நண்பரே.
  நீங்கள் சொல்வது 100% உண்மை.
  தொடர்ந்து படியுங்கள்!

  ReplyDelete
 13. ஆரம்பித்து சில நாட்களுக்குள்ளேயே நம்மள மாதிரி இன்னும் தடுமாறாம மிக அழகா ஒரு ஸ்டைலை பிடிச்சிட்டிங்க. நல்லாவும் எழுதுறீங்க. ஆனா இதே ஸ்பீடுல மாதா மாதம் பதிவு வந்துட்டே இருக்கணும். பார்க்க எடுத்து வைத்திருக்கும் படம். இன்னும் ஒரு மூட் வரவில்லை. சீக்கிரம் பார்த்துடறேன். நன்றி.

  ReplyDelete
 14. மிக்க நன்றி நண்பா..
  கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் ...
  நீங்கள் படம் பார்த்துவிட்டு கருத்தை சொல்லுங்க ..
  தொடர்ந்து படியுங்கள் நண்பா....

  ReplyDelete
 15. நல்ல படம். Paul இந்த படத்துல இறந்துடுவாறு ரைட்? பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது......
  உண்மையில் இறந்தவர்கள் இதற்கும் மேல்........
  இந்த படுகொலையின் பொது இறந்தவன்களோட சடலங்கள் எல்லாம் ஆறு வழியாக வந்து விக்டோரியா lake'ல் கலந்தது....அந்த நேரத்தில் அங்கு பிடிபட்ட பெரிய மீன்களின் வயிற்றில் Watch, Chain போன்றவை கூட கிடைச்சது என்றால் பார்த்துகோங்க......
  இப்போ அந்த நாடு நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கு. No Corruption Country'யும் கூட(மற்ற ஆப்ரிக்கன் நாடுகளை கம்பர் பண்ணும் பொது ரொம்ப கம்மி corruption தான்).

  ReplyDelete
 16. Paul இறக்க மாட்டாரு நண்பா...
  மிக மோசமான இனபடுகொலை சம்பவம்....
  Corruption பற்றி நீங்கள் கூரியது உண்மை தான் நண்பா..நல்ல முன்னேற்றம்..

  ReplyDelete