Monday, 23 July 2012

Once Upon A Time In The West - திரைவிமர்சனம்


Once Upon  A Time In The West - திரைவிமர்சனம்  

Sergio Leone இயக்கிய இத்திரைப்படத்தில் Henry Fonda (Frank) , Charles Bronson (Harmonica), Jason Robards (Cheyenne), Claudia Cardinale  (Jill McBain)  மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இத்தாலி மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கபட்டாலும், அமெரிக்காவை விட ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றது. IMDB டாப் 250 யில் 22 வது இடத்தை பிடித்துள்ளது.


Western Movies என்றால் Sergio Leone னுக்கு அல்வா சாப்பிடுவது போல. இதுவும் ஒரு ஸ்டைலிஷ் ஆன திரைப்படம். அவரது டச் ஐ முதல் காட்சியிலே பார்க்கலாம். இந்த திரைப்படத்திற்கும்   இசை Ennio Morricone. (இருவரை பற்றியும் Good, Bad &ugly-ல் நிறைய எழுதிவிட்டேன்). Jason Robards  இரண்டு ஆஸ்கார்  அவார்ட்ஸ் வென்றுள்ளார்(All the President's Men , Julia). 12 Angry Men பார்த்தவர்களுக்கு Hendry Fonda பற்றியும் அவர் நடிப்பு பற்றியும் நன்கு தெரியும்.

 
Frank என்ற ரோலுக்கு முதலில் Clint Eastwood ஐ கேட்டாலும், நெகடிவ் ரோல் என்பதால் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம், அதே போல் Henry Fonda அந்த சமயத்தில் பாசிடிவ் ரோல்  மற்றும் டாப் ஹீரோ வாக மட்டுமே நடித்துள்ளதால் , வில்லன் ரோலுக்கு  கதை சொல்ல வந்த இயக்குனரை அடிக்கவே வந்துவிட்டாராம். பிறகு, கதை மற்றும் அந்த கதாபாத்திரத்தை பற்றி எடுத்து சொல்லி, சம்மதிக்க வைத்தாரம் இயக்குனர். படம் முழுக்க இத்தாலி-ல் படமாகப்பட்டுள்ளது.


படத்தின் கதை என்ன என்று  பார்க்கலாம். Morton என்னும் ஒரு பெரிய ரயில்ரோடு தொழிலதிபருடன் கூட்டாளியாக உள்ளான் Frank.  Mcbain என்பவனுக்கு ஊருக்கு வெளியே ஸ்வீட்வாட்டர் என்று அழைக்கப்படும்  320 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது, சுற்று வட்டாரத்திலே அங்கு மட்டும் தான் குடிநீர் கிடைக்கும்   கிணறு உள்ளது. ஒரு மாதம் முன்னர் ஜில் என்பவளை Orleans என்னும் ஊரில் திருமணம் செய்துக்கொள்கிறான் Mcbain. அந்த இடத்தை தனக்கு விற்குமாறு Mcbain ஐ மிரட்ட Frank - அனுப்பிகிறான் Morton. புது மனைவி ஜில்(Jill) ரயிலில் வருவதால், அவளை அழைத்து வர தன் மகனை போகச்சொல்கிறான் Mcbain. அப்பொழுது அங்கு வரும் Frank அவனையும் அவன் மூன்று பிள்ளைகளையும் மிரட்டுவதற்கு பதிலாக சுட்டு கொன்றுவிடுகிறான்.


அதேசமயம் பல வருடங்களாக Frank ஐ தேடும் Harmonica அவனை சந்திப்பதற்காக அந்த ஊருக்கு ரயிலில் வருகிறான். Harmonica வை  கொல்வதற்காக Frank – ன் 3 அடியாட்கள் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர். அவர்களை சுட்டு வீழ்த்துகிறான் Harmonica. ( படத்தில் இது தான் முதல் காட்சி). ரயில் நிலையத்தில் தன் கணவனை தேடும் ஜில், அவர் இல்லை என்பதால், ஒரு குதிரை வண்டியில் ஸ்வீட் வாட்டர்க்கு புறப்படுகிறாள். வழியில் இளைப்பாற  ஒரு பாரில் நிறுத்துகிறான் குதிரைக்காரன். அங்கே போலீஸ் இடம் இருந்து தப்பித்து இரு கைகளில் விலங்குடன் வரும் Cheyenne-க்கு தன் பிஸ்டலை  கொடுக்கிறான் Harmonica. அங்கே  ஜில் -லை பார்க்கும் Cheyenne அவளை கண்டவுடன் மனதிற்குள் காதல் கொள்கிறான். தன் பயணத்தை தொடரும் ஜில் , வீட்டிற்க்கு சென்றதும், அனைவரும் இறந்துக்கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறாள். ஸ்வீட் வாட்டர் முழுவது இப்பொழுது அவளுக்கு மட்டுமே சொந்தமாகிறது.


அவள் வீட்டிற்க்கு வரும் Cheyenne, கொலைகளை  தான் செய்யவில்லை என்றும் அதற்கு காரணமான  Frank-ஐ அவள் சார்பாக அழிப்பதாக கூறிவிட்டு செல்கிறான். மறுபடியும் தன் சொந்த ஊருக்கே செல்லலாம் என்று கிளம்பும் பொது அங்கு வரும் Harmonica, Frank-ன் இரண்டு அடியாட்களிடம் இருந்து அவளை காப்பாற்றுகிறான்.பின்னர் Frank- ஐ தேடி  செல்லும் போது, அவனிடம் மாட்டி கொள்கிறான். ஒரு கால் ஊனமுற்றவன் என்பதாலும், காசு ஆசை காரணத்தினாலும் Frank morton-னுக்கு எதிராக திரும்புகிறான்.தானே நேராக சென்று ஜில்-லை கொல்வதாக சொல்லி , அவளை தேடி செல்கிறான் Frank. அப்பொழுது அங்கு மறைந்து  இருக்கும் Cheyenne, Hormonica வை காப்பாற்றுகிறான். இருவரும் தப்பித்து செல்கின்றனர். Harmonica, தான் Mcbain வீட்டில் ஒரு டாகுமென்ட் ஐ பார்த்ததாகவும், அந்த டாகுமென்ட் பற்றிய முழு விவரத்தையும்  கூறுகிறான்.


ஜில் லை கொன்றுவிடுவதாக மிரட்டி, அனைத்து சொத்துகளையும் ஏலத்தில் விடுமாறு வற்ப்புறுத்தும் Frank, தன் அடியாட்களை வைத்து யாரையும் ஏலத்தில் எடுக்க விடாமல் செய்கிறான். அத்தோடு அவனே மிக மிக குறைவான விலைக்கு அந்த இடத்தை  ஏலத்தில் எடுக்க முயற்சிக்கிறான்.  அப்பொழுது அங்கு வரும் Harmonica, அந்த இடத்தை 5000 டாலர்ஸ்க்கு ஏலத்தில் எடுக்கிறான். தன்னிடம் பணம் இல்லை என்பதாலும், Cheyenne தலைக்கு போலீஸ் 5000 டாலர்ஸ் அறிவித்துள்ளதாலும், அவனை ஒப்படைத்து இடத்தை வாங்குகிறான். 

எதற்க்காக  அனைவரும் அந்த இடத்திற்கு இவ்வளவு போட்டி போடுகிறார்கள்? அந்த இடத்தில் அப்படி என்ன தான் உள்ளது? Frank- ஐ தேடி Harmonica எதற்காக அந்த ஊருக்கு வருகிறான்?  இது தான் மீதிக்கதை.

Harmonica வை காப்பாற்றும் காட்சியில், Cheyenne ரயில் மேலே இருந்து தன் பூட்ஸ் ஐ கழற்றி, அதனுள் பிஸ்டல் லை வைத்து பூட்ஸ் ஐ கீழே இறக்கி சுடுவான். இந்த காட்சி அற்புதமாக இருந்தது.  
ஒரு ஹீரோ வை வில்லனாக காண்பிக்கும் போது, audience ஏற்று கொள்வார்களா என்று இயக்குனர்கள் யோசிப்பார்கள். அதுவும், Henry Fonda, வின் முதல் காட்சி ஒரு குடும்பத்தை சுட்டு தள்ளுவது. பின்னர் ஒரு சிறுவனை சுட்டவுடன் அவருக்கு Close up ... இயக்குனருக்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும் ?
ஒரு தரமான ஸ்டைலிஷ் ஆன வெஸ்டேர்ன் கவ்பாய் மூவி. நீங்கள் ரசித்து பார்க்க கூடிய அற்புதமான திரைப்படம்.
31 comments:

 1. ஆஹா இது அருமையான படம் ஆச்சே..இருங்க படிச்சுட்டு கமெண்டு போடுறேன்..

  ReplyDelete
 2. முதலில்..தொடர்ந்து கிளாசிக் படங்களை நல்ல அறிமுகத்தோடு விமர்சனம் செய்து வரும் தங்களுக்கு என் பாராட்டுக்கள்..
  இந்த படம் செர்ஜியோ லியோன் படங்களின் வரிசையில் ஒரு முறை பார்த்தேன்..சிறந்த வெஸ்டெர்ன் ஸ்டைலிஷான கௌபாய் படங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக சொல்லலாம்..
  தங்களது விமர்சன பாணி ரொம்பவும் நல்லாருக்கு..தொடருங்கள்..நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் குமரன் அவர்களே...
   நீங்கள் சொல்வது சரியே...
   ஸ்டைலிஷ் அனா நல்ல திரைப்படம்..
   மிக்க நன்றி நண்பா...

   Delete
 3. வெஸ்டர்ன் படங்களிலேயே...மிகச்சிறப்பான படம் என விமர்சகர்களால் கொண்டாடப்படும் படம் இது.

  தொடர்ந்து நல்ல படங்களை எழுதி வருவதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது உண்மையே... நல்ல திரைப்படம்..
   மிக்க நன்றி நண்பா...

   Delete
 4. Hi Friend,
  One of the best western genre movie.
  Very nice review.
  Keep on writing classic movies.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா..
   தொடர்ந்து படியுங்கள்

   Delete
 5. Ennanga ippadi classic padangalaga ezhuthi thalluringa.
  Ellamae super.
  Ithu pondra padangalai arimugappaduthiatharku mikka nanri.
  Thodarnthu nalla padangalai Mattum ezhuthingal.

  ReplyDelete
 6. வருகைக்கு நன்றி நண்பா..
  நிச்சயமாக எழுதுகிறேன்.
  தொடர்ந்து படியுங்கள்.

  ReplyDelete
 7. படம் பார்த்து விட்டேன் நண்பரே,
  மிகவும் அற்புதமான படம்
  விமர்சனம் அருமை.

  ReplyDelete
 8. உங்கள் விமர்சனம் என்னை படம் பார்க்க தூண்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி அண்ணா,
   கண்டிப்பாக பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

   Delete
 9. முதலில் என் தளத்திற்கு வந்து, கருத்து சொன்னதற்கு நன்றி நண்பரே...
  நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள். தொடருங்கள். நன்றி.
  Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன்.....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி அண்ணா,
   நானும் உங்களை பின்தொடர்கிறேன்.

   Delete
 10. நண்பரே உங்கள் விமர்சனம் படிக்கும் போதே படம் பார்த்த உணர்வு வருகிறது! வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே, அற்புதமான படம்.
   நிச்சயம் பாருங்கள்.

   Delete
 11. விமர்சனம் நன்று.
  நல்ல வெஸ்டர்ன் படம் என்று கேள்வி பட்டதுண்டு.....இன்னும் பார்கவில்லை....எப்படியும் இந்த வாரத்தில் பார்த்து விடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே, அற்புதமான படம்.
   நிச்சயம் பாருங்கள்.

   Delete
 12. மிக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.. நான் இது வரை இந்த படத்தை பார்க்கவில்லை.. உங்கள் விமர்சனத்தை படித்த பின் , என் டேஸ்டுக்கேற்ற படம் என் தெரிகிறது... ம்ம்ம்.. பார்த்து விட வேண்டியதுதான்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி அண்ணா.
   கண்டிப்பாக பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

   Delete
 13. Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.
   நானும் உங்களை பின்தொடர்கிறேன்.

   Delete
 14. வெஸ்டர்ன் படங்கள் மேல் பெரிய இன்ட்ரஸ்ட் இருந்ததில்லை. அண்மையில் ராஜின் டாலர்ஸ் ட்ரைலாஜி வாசிச்சிட்டு தான் மூன்று படத்தையும் பார்த்தேன். அப்புறம் தான் ஒரு பிடிப்பு வந்து இந்தப் படத்தையும் டவுன்லோட் செய்து வைத்தேன். பார்த்துவிடுவோம். :)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே, அற்புதமான படம்.
   நிச்சயம் பாருங்கள்.

   Delete
 15. பல ஆண்டுகளுக்கு முன் பார்த்தபடம்.உங்கள் விமரிசனம் அதைக் கண்முன் கொண்டு வந்து விட்டது.நன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி அண்ணா.
   உங்கள் வலைத்தளம் மிகவும் அருமை, தொடர்ந்து படிக்கிறேன்.

   Delete
 16. நண்பரே....நான் இந்த படத்தை பார்க்க வைத்து உள்ளேன்.....அதனால் இந்த விமர்சனத்தை படிக்காமல் செல்கிறேன்.... :(

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி ராஜ்..
   அற்புதமான படம்.
   நிச்சயம் பாருங்கள்.

   Delete
 17. அடங் கொய்யாலே இந்த படத்துக்கு நான் விமர்சனம் எழுதி வச்சிருந்தேன் ! ( பேட் மேன் மாதிரி கிடையாது) நாளைக்கு போடலாம்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன் , இப்புடி கால வாரிட்டியேய்யா!

  ஐ.எம்.டி பி யில் வெஸ்டன் திரைப்படங்களிலி இது தான் முதலிடத்தில் இருக்கிறது. கதை என்னவோ சாதாரண ஒரு பழி வாங்கல் கதை தான், ஆனால் புழுதி படிய அந்த கதையை படமாக்கிய விதமும் திரைக்கதையும் செம! அதிலும் எனக்கு பிடித்தது ஆரம்ப காட்சி தான்! ரெயிலுக்காக காத்திருக்கும் அந்த கும்பல், அதில் ஈயோடு விளையாடும் ஒருவன், சந்தத்தோடு கேட்கும் காற்றாடியின் ஓசை, புழுதி என்று முதல் காட்சியே படத்தின் தரத்தை சொல்லிவிடுகிறது.

  அந்த ஏலத்தில் ஐயாயிரம் டாலருக்கு அந்த நிலத்தை எடுத்து , விலையாக cheynneஐ நம்ம ஹீரோ கொண்டுவரும் போது cheynneஇன் முகத்தை பாக்கணுமே! செமயான ஆக்டிங்!

  ஹும்.... இப்புடி எவளவோ எழுதி பதிவு வச்சிருந்தா , இங்க ஒருத்தன் நோகாம அதே படத்த பதிவா போட்டிருக்கான், ஆனாலும் உங்களோட விமர்சனம் சூப்பர்! இன்னும் சில வெஸ்டன் படங்கள் பாத்துப்புட்டு பதிவு போடலாம்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன் , அத எவன் போட போறானோ? கலக்குங்க பாஸ்!!

  ReplyDelete
  Replies
  1. Oh My கடவுளே!!!!!!
   நான் எழுதினா என்ன பாஸ்,
   நீங்க உங்க ஸ்டைல்-ல சூப்பர்-அ எழுதுங்க...
   உங்கள் விமர்சனம் ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு நண்பா...
   IMDB-ல் The Good, Bad& Ugly 6வது இடத்தில உள்ளது. அதுவும் Western movie தான் :)

   Delete
  2. விடு நண்பா! இன்னொரு விமர்சனத்தில பாத்துக்கலாம்!

   Delete