Friday, 13 July 2012

பில்லா 2 - தோஹா கத்தார்( Doha Qatar)-ல் இருந்து…..


பில்லா 2 -  தோஹா கத்தார்( Doha Qatar)-ல் இருந்து…..

பில்லா 2 படத்திற்கு முன்னால் என்ன நடந்தது? தோஹா(Doha)- வில் போலீஸ் காட்டிய பில்லா படம்!!!!
தோஹா -வில் தமிழ் மற்றும் மலையாள படங்கள் ஒரே ஒரு திரையரங்கில் மட்டும் தான் வெளியாகும். ரஜினி, கமல், விஜய், அஜித். சூர்யா படங்கள் தமிழ்நாட்டில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பே கத்தார் தோஹா- வில் ரிலீஸ் ஆவது வழக்கம். 
பில்லா 2  படம் (12.7.2011) இரவு 10.30 மணிக்கு மற்றும் 11.15 மணிக்கும் திரையிடபோவதாக விளம்பரம் செய்யப்பட்டது. எப்படியாவது முதல் நாள் பார்த்து விட்டு திரைவிமர்சனம் எழுதிவிடலாம் என்று திரையரங்கிற்கு சென்றேன் என் மனைவியோடு.

6  மணிக்கு டிக்கெட் வாங்கிவிட்டால் கூட்டம் குறைவாக இருக்கும் என்று எண்ணி சென்றால் 7.30 மணிக்கு தான் கவுன்டரில் டிக்கெட் கொடுப்போம் என்று சொல்லிவிட்டார்கள். மறுபடியும் 7.30 மணிக்கு  சென்றோம் .  Super Star ரஜினி- யின் ந்திரன் படத்திற்கு பிறகு இவ்வளவு கூட்டத்தை தோஹா வில் கண்டதே இல்லை. மிகவும் நெரிசல். கூட்டம் அலைமோதியது .
இந்த திரையரங்கில் family -queue மற்றும் bachelor - queue என்று 2 queue இருக்கும். family டிக்கெட் என்று குடும்பமாக மனைவியுடன் வந்தால் மனைவி டிக்கெட் எடுத்துவிடலாம் . 10.30 மணிக்கு உள்ள ஷோவிற்கு டிக்கெட் தீர்ந்துவிட்டது என்று சொல்லிவிட்டதால் என்  மனைவி 11.15 ஷோவிற்கு 30 நிமிடங்கள்  பொறுமையாக queue- வில் நின்று  queue-வில் காத்திருந்து டிக்கெட் -ஐ வாங்கிவிட்டாள்.
டிக்கெட் கிடைத்து விட்டது என்று ஒரே சந்தோசம். அங்கு டிக்கெட்- காக மாலை 5 மணி முதலே இருந்த நீண்ட வரிசையில்  நின்று கொண்டிருந்த bachelors க்கு முன்னால் டிக்கெட் கிடைத்துவிட்டது  என்ற பெருமை கலந்த சந்தோஷம்.
8 தான் ஆகிறது என்று வீட்டிற்கு சென்று விட்டோம். 10.30 மணிக்கு திரையரங்கம் சென்றால், அரங்கத்தை மூடிவிட்டார்கள். விசாரித்தால்  இந்த டிக்கெட் -ஐ எடுத்து கொண்டு நாளை வருமாறு சொல்லிவிட்டார்கள். கூட்டத்தில் யாரோ glass பாட்டில்- ஐ எடுத்து தூக்கி விசியதால் குழப்பம் ஏற்பட்டு விட்டது. அப்புறம் என்ன அடுத்த வினாடியே போலீஸ் வந்து குவிந்து விட்டது .அதனால் ஷோ -வை ரத்து செய்துவிட்டார்கள்.  இந்தியாவில் தான் இப்படி என்றால் வெளிநாட்டிலும் இப்படி தான் நடக்கிறது. ( why  blood, same blood). 
நாளைக்கு யாரவது Billa 2 விமர்சனம் எழுதினால் படித்து விட்டு பிறகு திரையரங்கம் செல்லலாம் என்று முடிவு செய்துள்ளேன். தமிழ் படங்களுக்கு   விமர்சனம் செய்வதை விட்டு விட்டு ஹாலிவுட் படங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுது என்று என்னை நானே  நொந்து கொண்டேன். கடைசியில் படமும் பார்க்கவில்லை திரை விமர்சனமும் எழுதவில்லை.  வடை போச்சே!!!!!!

பில்லா 2 படத்தை பார்க்காமல் பில்லா 2 வை வெளியிட இருந்த  திரையரங்கை பார்த்தோம்!!.


19 comments:

 1. இந்த மாதிரி பிரச்னை எல்லாம் இங்க நம்ம ஊருல சாதாரணமா நடக்கும்..கிட்ட தட்ட எல்லா பெரிய ஹீரோ படத்துக்கும் நடக்கும்...
  ஆனா என்ன, எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் படத்தை போட்டுருவாங்க...ஷோ கான்சல் பண்ண மாட்டாங்க...அங்க தோஹாவுல தியேட்டர்காரங்களுக்கு அனுபவம் பதலையோ...???
  //ஹாலிவுட் படங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுது என்று என்னை நானே நொந்து கொண்டேன். //
  பாஸ்,அப்படி எல்லாம் முடிவு பண்ணிறாதிங்க... எல்லாம் (தமிழ், ஹாலிவுட்) கலந்து கட்டி உங்களுக்கு தோணுறதை எழுதுங்க....படிக்க நாங்க இருக்கோம்....

  ReplyDelete
  Replies
  1. உங்கள் support க்கு மிகவும் நன்றி நண்பரே.
   இன்று படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுகிறேன்.
   உங்களுடைய Billa2 விமர்சனத்தையும் ஆவலோடு எதிர்பார்கிறேன்.

   Delete
 2. Nallathu mikavum suvarsiyamaka irukku

  ReplyDelete
 3. தங்களின் வருகைக்கு மிகவும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 4. இந்த அனுபவத்தை பில்ல 3 ஆகா எடுக்கலாம் போல இருக்கே..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

  ReplyDelete
 5. தங்களின் வருகைக்கு மிகவும் நன்றி நண்பரே...
  நல்ல வேளை ஷோ cancel ஆகிவிட்டது..
  நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்.
  அந்த bottle க்கு நன்றி.
  கிரேட் எஸ்கேப்.
  பில்லா 3 எடுத்தால் copyrights உங்களுக்கு தான் நண்பரே...

  ReplyDelete
 6. Hello Boss i was also in the Theatre. I took ticket and came to know that the show is cancelled

  Amarnath

  ReplyDelete
 7. வருகைக்கு நன்றி நண்பா!
  Same Blood!! Billa 2 Review பார்த்த பின்பு இன்றும் theatre க்கு போகவில்லை!
  தொடர்ந்து பதிவுகளை படியுங்கள்!!!

  ReplyDelete
 8. முன்னமே இந்த பிளாக் பக்கம் வந்தேன் நண்பா..கொஞ்ச நாளாகவே சரியா பிளாக்கிங் பக்கம் வருவதில்லை..அதான் உங்க பதிவுகள் எல்லாம் மிஸ் பண்ணிட்டேன்..அதற்கொரு சாரி.
  விமர்சனம் என்று நினைத்துக்கொண்டு வந்தேன்..டோஹாவில் நடந்ததை அழகா விவரித்தீர்கள்..படம் பார்த்துட்டு கண்டிப்பா சின்ன விமர்சனமாவது போடுங்க..நாங்க படிக்கிறோம்..
  நண்பர் ராஜ் விமர்சனம் படித்தேன்..நீங்களும் படிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன்..இல்லைனா படிங்க.நல்லா எழுதி இருக்காரு.
  நன்றி நண்பா..

  ReplyDelete
 9. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.
  நண்பர் ராஜ் அவர்களின் பில்லா 2 விமர்சனமும் படித்தேன்.
  மிகவும் அருமை. நடுநிலலையான பதிவு.
  கண்டிப்பாக படம் பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்.

  ReplyDelete
 10. பில்லா விமர்சனம் என்று நினைத்தேன்.. தமிழுக்கு விமர்சனம் எழுதாதீர்கள் (அதிகம்) நண்பா.. ஏகப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 11. இன்னும் பில்லா 2 படம் பார்க்கவில்லை.
  கண்டிப்பாக நண்பா. வேர்ல்ட் மூவீஸ் எழுத தான் எனக்கும் ஆசை.

  ReplyDelete
 12. அனுபவிச்சு பாருங்க... இல்லேன்னா பாத்துட்டு அனுபவிங்க :))

  ReplyDelete
 13. //தமிழ்நாட்டில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பே கத்தார் தோஹா- வில் ரிலீஸ் ஆவது வழக்கம்//

  கத்தார் மட்டுமல்ல துபாய், மஸ்கட், பக்ரைன்,, அப்படிதாங்கோ

  ReplyDelete
  Replies
  1. இனி Gulf நாட்டுகள் என்று மொத்தமாக குறிபிடுகிறேன் நண்பா!

   Delete
 14. தமிழ் கவிதைகள் மற்றும் உலகம் தோன்றியது முதல் இன்று வரை நடந்த வரலாற்று சுவடுகளை அறிந்திட நம்ப ப்ளாக் வாங்க http://tamilkavithais.blogspot.in/

  ReplyDelete
 15. வருகைக்கு நன்றி நண்பா!
  நிச்சியமாக.....

  ReplyDelete