Monday 20 August 2012

Leon The Professional - திரைவிமர்சனம்


[Leon The Professional - திரைவிமர்சனம் ]


நம்ம ஊரு Action King அர்ஜுன் நடிச்ச படம் " சூர்ய பார்வை" , Leon the Professional படத்தோட அக்மார்க் ஈயடிச்சான் காப்பி. Luc Besson இயக்கிய இத்திரைப்படத்தில் Jean Reno (Leon) , Gary Oldman (Stansfield) , Natalie Portman(Mathilda) மற்றும் பலர் நடித்துள்ளனர். IMDB டாப் 250 யில் 32 வது இடத்தை பிடித்துள்ளது.


Luc Besson  நிறைய ஆக்சன்  படங்கள் இயக்கிவுள்ளார். அதில் சில பிரபலமான படைப்புகள் Transporter 2, Taken 1 & 2 , The fifth element , Subway, Etc.  நம்ப படத்தோட ஹீரோ Jean Reno நிறைய படங்கள் நடித்திருக்கிறார். அவர் நடித்த சில ஹிட் படங்கள் Pink Panther 1 & 2 , Godzilla , Da vinci code, Wasabi(நம்ம ஜக்குபாயோட original) , etc… 


 படத்தின் ஹைலைட் Natalie Portman-ன் நடிப்பு  என்றே சொல்லலாம். படத்தின் குட்டி நாயகி Natalie Portman மிக பிரபலமான நடிகை. ஏராளமான வெற்றி படங்களை தந்திருப்பவர். இவர் நடித்த V for Vendetta படத்திற்காக உண்மையிலே மொட்டை அடித்தவர். அந்த படத்திற்கு ஆஸ்கார் தான் மிஸ் ஆயிடுச்சு. ஆனால் Black Swan படத்திற்கு வாங்கிவிட்டார். இவர் நடித்த சில முக்கிய படங்கள் Heat, No Strings Attached , Closer, Thor etc. 


 படத்தின் ஹைலைட் ஒரு 12 வயது சிறுமிக்கு 40 வயது ஆசாமிக்கும் உள்ள ரிலேஷன்ஷிப். கேட்கவே சற்று அருவெறுப்பாக இருக்கு இல்ல? ஆனால் படத்தில் இதை மிக அழகாக காண்பித்து இருப்பார்கள்.

 
படத்தின் கதை என்ன என்பதை பார்க்கலாம் . டோனி என்பவனுடைய அடியாளாக வேலை செய்கிறான் லியான். 12 வயது சிறுமியான  மதில்டா தன் 4 வயது சகோதரன் மற்றும் வேறு திருமணம் செய்துகொண்ட தந்தை, அவர் மனையுடன் அடுக்குமாடி குடிஇருப்பில் வசித்து வருகிறாள். அவள் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கிறான் லியான். தன் குட்டி தம்பியை தவிர அந்த வீட்டில் யாரையும் அவளுக்கு பிடிக்காது. 


ஸ்டான் என்னும் DEA ஏஜென்ட் , போதை பொருட்களை மறைத்து வைக்க மதில்டாவின் தந்தையை  பயன்படுத்தி அவன் வீட்டில் போதை பொருட்களை ஒளித்துவைக்க  கொடுப்பது வழக்கம். ஆனால் அவன், யாருக்கும் தெரியாமல், அதிலிருந்து சிறிது சிறிதாக போதை பொருட்களை திருடுகிறான். இந்த உண்மை தெரியவர, ஸ்டான் தன் அடியாட்களை அனுப்பி மதில்டாவின் குடும்பத்தை கொலைசெய்ய சொல்கிறான்.


ஸ்டான் ஆட்கள் வீடிற்கு வரும் சமயத்தில் மதில்டா கடைக்கு சென்றிருப்பதால், அவளை தவிர அனைவரையும் கொன்று விடுகிறார்கள். அந்த சமயத்தில் வீடிற்கு வரும் மதில்டா, நிலைமையை உணர்ந்து, தன் வீடிற்கு செல்லாமல், லியான் வீட்டு கதவை தட்டுகிறாள். சற்று யோசிக்கும் லியான், அவளுக்கு அன்று இரவு மட்டும் அடைக்கலம் தருவதாக கூறுகிறான். அவளோ, தன் தம்பியை கொன்றவர்களை பழி வாங்கவேண்டும்  என்றும், வீட்டு வேலைகளை செய்வதாகவும், தனக்கும் துப்பாக்கி சுடுவதற்கும், அவனுக்கு தெரிந்த வித்தைகளை கற்றுகொடுக்குமாறு வேண்டுகிறாள். இதற்கிடையில், அவளின் போட்டோவை கொடுத்து அவளையும் கொலைசெய்ய சொல்கிறான் ஸ்டான்.


இருவரும் அந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு செல்கின்றனர். லியான் படிப்பறிவு இல்லாதவன் என்பதால், அவனுக்கு படிக்க கற்றுக்கொடுகிறாள் மதில்டா. தனக்கு தெரிந்த துப்பாக்கி சுடும் வித்தைகளை கற்றுக்கொடுகிறான் லியான். பின்னர், வீட்டில் ஒரு கடிதத்தை லியானுக்கு எழுதி வைத்து விட்டு,ஸ்டான்- ஐ கொலைசெய்ய, ஒரு சிறிய பையில், துப்பாக்கியை வைத்து, DEA ஆபீஸ்க்கு செல்கிறாள். ஸ்டானிடம் மாடிக்கொள்ளும் அவளிடம், லியான் தன் 2 அடியாட்களை கொலை செய்துவிட்டதாக  கூறிகிறான். அங்கு வரும் லியான் மதில்டாவை காப்பாற்றுகிறான்.மதில்டாவிர்க்கு லியான் ஐ மனதிற்குள் பிடித்துப்போக, அவள் லியானை காதலிப்பதாக  கூறுகிறாள். இருப்பினும், அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருக்கிறான் லியான்.



டோனியை மிரட்டி, லியான் இருக்கும் வீட்டை கண்டுபிடித்து அவனை கொலைசெய்ய ஆட்களுடன் செல்கிறான் ஸ்டான். அவன் லியான் மற்றும் மதில்டாவை கொலை செய்தானா? அவர்களை சுற்றிலும் சூழ்ந்த ஸ்டானின் ஆட்களிடம் இருந்து  தப்பித்தார்கள்? லியான் மதில்டாவை காபாற்றினானா? மதில்டா நினைத்தது போல ஸ்டானை பழிவாங்கினாளா? இது தான் இறுதி கிளைமாக்ஸ்.



நான் ரசித்த காட்சி, வீட்டை விட்டு செல்லும் அவர்கள் ஒரு ஹோட்டல் அபார்ட்மேட்டுக்கு செல்வார்கள். முதலில் மதில்டா தனக்கும் தன் தந்தை லியானுக்கும் ரூம் வேண்டும்  என்று ஹோட்டல் மேனேஜரிடம் சொல்வாள். சிறிது நாட்களுக்கு பின்பு அவரிடம் தான் பொய் சொன்னதாகவும், லியான் தந்தை இல்லை என்றும் தன் காதலர் என்பாள்.  பதறிப்போன மேனேஜர் இருவரை ஹோட்டலை விட்டு வெளியேற்றிடுவார்.


லியான் தன் நண்பன் என்று கூறி ஒரு பூந்தொட்டியில் ஒரு செடியை வளர்ப்பான். இறுதி காட்சியில் அந்த செடியை மண்ணில் நடுவாள் மதில்டா. இந்த காட்சி மிக அழகாக இருக்கும்.  
இந்த படம் நடிக்கும் பொது Natalie Portmanனுக்கு வயது 11 தான். ஆனலும் 11 வயது சிறுமிக்கு எப்படி புகை பிடிக்க கற்று கொடுத்தார்களோ தெரியவில்லை!!! விறுவிறுப்பான படம். நீங்கள் என்ஜாய் பண்ணி பார்க்கலாம்.


23 comments:

  1. இந்தப் படம் முழுக்க முழுக்க drug dealing கதைன்னு நினைச்சுட்டு பார்க்காம விட்டுட்டேன்.. நடாலி நடிச்சதே எனக்கு தெரியாது..
    சூரியப்பார்வை வேற எனக்கு புடிக்கும்.. கண்டிப்பா பார்த்துடுறேன்! பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பாருங்கள் நண்பா,
      Jean Reno, Gary Oldman, Natalie Portman ஆகியோரின் நடிப்பு மிகவும் அற்புதம்.

      Delete
  2. அடக்கடவுளே, இது மாதிரி இன்னும் எத்தனை படம் மிஸ் பன்னனோ தெரியலையே,
    அறிமுகத்திற்கு நன்றி, கண்டிப்பாக பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. La Femme Nikita இந்த படம் தான் ஒரிஜினல் ஹாலிவூட்க்காக leon the professional என்று வன்முறையை சிறிது குறைத்து எடுத்தார் luc besson.
      இரண்டு படங்களையும் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

      Delete
  3. அட ... அந்த சின்னப் பொண்ணு நாடலி போர்ட்மேனா? இப்ப தான் நோட் பண்ணினேன். சீக்கிரம் பார்த்துடலாம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..
      கண்டிப்பாக பாருங்கள் நண்பா உங்களுக்கு பிடிக்கும்.

      Delete
  4. Natalie Portman-க்காகவே இந்தப் படத்தை கடந்த சில வருடங்களில் பத்து முறைக்கு மேல பாத்துட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஒரிஜினல் படமான La Femme Nikita பாருங்கள். அதுவும் இந்த இயக்குனர் இயக்கியதே.
      உங்கள் வலைத்தளம் மிகவும் அருமை.
      உங்கள் பெயர் என் உற்ற நண்பனின் பெயர்.ஒரு நிமிடம் மலரும் நினைவுகள் வந்து போனது.

      Delete
  5. படத்துடன் விமர்சனம் அருமை... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே உங்கள் தொடர்ச்சியான ஆதரவிற்கு..

      Delete
  6. பாஸ்..
    ரொம்பவே நல்ல படம். எனக்கு ரொம்பவே பிடித்த படம் கூட...படத்தை பத்தி ரொம்ப அழகா சொல்லி இருக்கேங்க...Jean Reno நம்ம ஹிந்தி நடிகர் நானா படேக்கர் மாதிரியே இருப்பார். நல்ல நல்ல படங்களா அறிமுகம் செய்கிறீர்கள்..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பரே,
      அவரின் நடிப்பு இந்த படத்தில் மிகவும் அற்புதம்,
      வசாபி, பிங்க் பந்தேர் போன்ற படங்களில் மாறுப்பட்ட நடிப்பை காட்டி இருப்பார்.



      Delete
  7. நான் இப்போதெல்லாம் படமே பார்ப்பதில்லை.ஆனால் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிடுகிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே..
      நல்ல படங்கள் வர தான் செய்கிறது. தேடி கண்டுப்பிடித்து பார்க்க தான் கடினம்!!!

      Delete
  8. நான் சூரிய பார்வை எப்பவோ பாத்துட்டேன், சூர்ய பார்வையை காப்பியடித்து வந்த இந்த படத்தை நான் வன்மையாக கண்டிப்பதோடு, வெள்ளைக்காரனுக்கு வக்காலத்து வாங்கும் டோஹா ஓனரையும் லைட்டாக கண்டிக்கிறேன். யாருப்பா அந்த "நட்ட எலி"?

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி....
      இந்த படத்தைப் பார்த்து தான் சூர்ய பார்வை படம் எடுத்தார்கள்!!!
      Why this kolaveri நண்பா...
      எனத்து காந்தி செத்துடாரானு கேக்கறீங்க????????????



      Delete
    2. என்ன ஐயா ! உமக்கு காமடி கூட புரிய மாட்டேங்குது! # நெஜமாலுமா ? காந்தி செத்துட்டாரா?

      Delete
    3. என்ன செய்வது கிஷோர், உங்கள் ப்ளாக்-ஐ படிக்க ஆரம்பித்ததிலிருந்து காமெடி என்றால் என்ன என்றே மறந்து விட்டது.

      சத்திய சோதனை..
      So Sad..
      சூரியன் -ன யாரும் சுட முடியாது, சூரியன் வெட்பம் தான் நமை சுடும்....

      Delete
  9. Nice Review!!! Keep on writing...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...

      Delete
  10. you could have mentioned about the music in this movie... sometimes the movie goes slow with the music but never let you down. when stan kills matilda's family one music bit will come, i dont know which one to concentrate. whether gary's psychotic acting or that music. execellent movie and acting by reno, portman and old man.

    - Jana.

    ReplyDelete
  11. You are right about the music.. Excellent piece of music in this film.

    ReplyDelete
  12. சம ஆக்சன் திரைப்படம்.....விமர்சன் நன்று.
    எல்லாமே நல்ல திரைப்படங்கள் மட்டும் தேர்வு செய்து எழுதறிங்க, நல்லது.

    ReplyDelete