Sunday 12 August 2012

The Magnificent Seven - திரைவிமர்சனம்


[The Magnificent Seven - திரைவிமர்சனம் ]


John Sturges இயக்கிய இத்திரைப்படத்தில் Eli Wallach (Calvera) , Yul Brynner (Chris Larabee Adams) , Charles Bronson (Bernardo O'Reilly) மற்றும் பலர் நடித்துள்ளனர். Akira Kurosawa  இயக்கிய Seven Samurai என்ற ஜப்பானிய மொழி படத்தின் ரீமேக் என்றாலும் ஒரிஜினல் படத்தை அடித்துக்கொள்ள முடியவில்லை என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் ஒரிஜினல் செவென் சமுராய் படத்தில் விவசாயிகளுக்கும் சமுரைகளுக்கும்  இடையே உள்ள ரிலேஷன்ஷிப்  மிக அற்புதமாக இருக்கும். இத்திரைப்படம் சிறந்த இசைக்காக  (Elmer Bernstein) ஆஸ்கார் அவார்ட்ஸ்க்கு பரிந்துரைக்கப்பட்டது.


John Sturges,  The Great Escape, Bad Day at Black Rock,The Eagle Has Landed போன்ற படங்களை இயக்கியுள்ளார். Eli Wallach  பற்றி என்ன சொல்வது? நடிப்புலகில் மிக பெரிய ஜாம்பவான். இவருடைய மாஸ்டர் பீஸ் என்றால் அது அவர் நடித்த " The Ugly" கேரக்டர் தான். Yul Bryner, The King and I என்ற படத்திற்கு ஒரு ஆஸ்கார் வாங்கியுள்ளார். இத்திரைப்படத்தை பார்க்க முக்கிய காரணங்கள் படத்தின் இசை, Eli Wallach மற்றும் Yul Brynner-ன் நடிப்பு.


சரி படத்தின் கதை என்ன என்பதைப் பார்போம். கல்வேரா ஒரு கொள்ளைகூட்டதின் தலைவன். அவனும் அவன் கூட்டமும் சேர்ந்து ஒரு Mexican கிராமத்தை  அடிக்கடி கொள்ளை அடிகின்றனர். அறுவடை  காலம் வரும் போது சரியான நேரத்திற்கு வந்து கொள்ளை அடிக்கும் அவர்கள், மறுபடியும் வருவதாக கூறிவிட்டு செல்கின்றனர். ஏழை கிராமம் என்பதால் அவர்களால் ஒன்றும்  செய்ய  இயலவில்லை.



அந்த ஊரின் இரண்டு விவசாயிகள் , கிராமத்தை காப்பாற்ற கௌபாய் வீரர்களை தேடி டவுனிற்கு செல்கின்றனர். அங்கு கிரிஸ்- ஐ பார்க்கும் அவர்கள், தங்கள் கிராமத்தின் கதையை சொல்லி தங்களை காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடி கேட்டு கொள்கின்றனர். சரி என்று சொல்லும் அவன், பெரிய கூட்டம் என்பதால், தனியாக  செல்ல முடியாது என்று தன்னுடன் சேர்ந்து கொள்ளையர்களை விரட்ட சில கௌபாய்களை தேடுகின்றான்.


மற்ற வீரர்களை தேடி பிடிக்கும் காட்சிகளில், ஒவ்வொரு கௌபாய்-க்கும் ஒரு சின்ன இன்றோ இருக்கும்.  அனைத்தும் அற்புதமான காட்சிகள்.அதில் சிக்கோ என்பவன், கிரிஸ் -இன் ரசிகன். ஆதலால் தன்னையும் சேர்த்து கொள்ளுமாறு கேட்கிறான். ஆனால் அவனுக்கு அனுபவம் இல்லை என்பதால் முடியாது என்று கூறிவிடுகிறான்.  ஆறு கௌபாய்களோடு கிராமத்திற்கு செல்கின்றனர். வழியில் அவர்களை பின்தொடர்கிறான் சிக்கோ. கிராமத்தை அடைந்த பின்னர், கிராமத்தார் யாருமே அவர்களை வரவேற்க வரவில்லை. காரணம் யாரை பார்த்தாலும் அவர்களுக்கு பயம். அப்பொழுது, அங்கு உள்ள ஆலயத்தின் மணியை அடித்து, அவர்கள் வந்திருக்கும் நோக்கத்தை சொல்கிறான் சிக்கோ. இவனையும் சேர்த்து இப்பொழுது ஏழு கௌபாய்கள்.


கிராம மக்கள் அவர்களை நம்பாமல் தங்கள் வீட்டு பெண்களை வெளியே ஒரு இரகசிய இடத்தில ஒளித்து வைக்கின்றனர். அவர்களுக்கு அந்த ஏழு பேரின் மீது நம்பிக்கை இல்லை. சிறிது சிறிதாக, அவர்களை நம்ப தொடங்கும் விவசாயிகளுக்கு துப்பாக்கி சுடுவதற்கும், அந்த கொள்ளை கூட்டம் வந்தால் எப்படி சமாளிக்கலாம் என்று திட்டம் தீட்டுவதற்கும் சொல்லிக்கொடுகிறார்கள்.


அப்பொழுது, கல்வேரா தன் மூன்று  உளவாளிகளை, கிராமத்தை நோட்டம் பார்க்க அனுப்புகிறான். ஆனால் அவர்களை கௌபாய்க்கள் கொன்று விடுகின்றனர். தன் கூடத்திற்கு உணவு இல்லை என்பதால், கிராமத்தை கொள்ளை அடிக்க வருகிறான் கல்வேரா. முன் ஏற்பாட்டுடன் இருக்கும் அவர்களை தாக்குகின்றனர் கிராம மக்களும், வீரர்களும். சில கொள்ளையர்கள் இறந்தாலும், கல்வேரா தப்பித்து சென்று விடுகிறான். அவனை தாக்கி விட்டதால், அவன் பயந்து பொய் திரும்ப வரமாட்டான் என்று நினைக்கும் கிராம மக்கள், சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால், சிக்கோ அவர்கள் கூட்டத்தில் ஒரு ஆளாக வேவு பார்த்து வந்து, அவர்கள் போகவில்லை என்றும் ஒரு பெரிய கூடமாக இருகிறார்கள் என்றும், அவர்களுக்கு உணவு இல்லை என்பதால் கிராமத்தை கொள்ளை அடிக்க எந்த நேரமும் வரலாம் என்று சொல்கிறான்.


பயந்து போகும் கிராம மக்கள், கல்வேராக்கு பணிந்து போகலாம் என்று ஒரு சிலரும், அவனை எதிர்த்து போராடலாம் என்று வேறு சிலரும் கூறுகின்றனர். ஆனால் அவர்களை தாக்கலாம் என்று கௌபாய்கள் அவர்களை தேடி கிராமத்திற்கு வெளியே செல்கின்றனர். ஆனால் அவர்களை காணவில்லை. கிராமத்திற்கு வரும் அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. கல்வேரா கிராமத்தில் உள்ள அனைவரையும் சிறை பிடித்து வைத்திருக்கிறான். இந்த மக்களுக்காக சண்டை போட இவர்கள் அருகதை அற்றவர்கள் என்றும் இந்த கிராமத்திற்குள் வர இவர்களில் சிலர் தான் உதவி புரிந்தார்கள் என்று சொல்கிறான் கல்வேரா. 


அதிர்ந்து போகும் அந்த ஏழு பேரும் என்ன செய்தார்கள்? கல்வேரா அவர்களை கொன்று விட்டானா? அந்த கிராமத்திற்காக  சண்டை போட வந்த அவர்களையே காட்டிகொடுத்த அந்த கிராமத்தினரை என்ன செய்தனர்? இது கிளைமாக்ஸ்.


அடிக்கடி ஒரே மாதரியான படம் பார்த்து போர் அடித்துவிட்டால் இதுபோன்ற வித்தியாசமான ஒரு western படம்  பார்க்கலாம்.

தாயகம் சென்றுவிட்டதால் இந்த நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்.
 





23 comments:

  1. பார்த்த படம் அதுவும் ரசித்து பார்த்த படம் - பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பா..

      Delete
  2. Where have you gone for few weeks,
    You are back with a bang. Nice review.
    Please write more.
    I am a huge fan of Eli Wallach.

    ReplyDelete
    Replies
    1. I was out for a vacation...
      Thanks a lot.. Sure will write more of Eli Wallach movies.
      Continue reading...

      Delete
  3. Romba nalla review.
    Appadiyae Original movie Seven Samurai Pathi ezhuthungalaen.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பா..
      கண்டிப்பா எழுதறேன்...

      Delete
  4. nanbaa..
    neengalum mathavangalai pola blog arambithu konja naalil ezhuthamal niruthi viduveerkal endru ninaithaen,
    but
    marubadiyum ezhutha arambithatharkku nandri..
    thodarungal..
    thayagathil anaivarum sugam thanae??

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா..
      அனைவரும் சுகம்

      Delete
  5. தாயகம் போயி வந்தாச்சா, நல்லது வந்ததும் வராததுமா புழுதி படிந்த ஒரு வெஸ்ரன் திரைப்பட விமர்சனம். ஏற்கனவே போட்ட டவுன் லோடு தான். பார்த்துடுறேன். மிக்க நன்றி விமர்சனத்துக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி ...
      இந்த படத்தை விட செவென் சமுராய் படம் பார்க்கலாம்...

      Delete
  6. இன்னும் கூட நீங்கள் நன்றாக எழுதலாம்,
    வர வர உங்களுக்கு எழுதுவதில் ஆர்வம் இல்லை போல் இருக்கிறது,
    ரொம்ப சுமாரான விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. மன்னித்து விடுங்கள்..
      அடுத்த பதிவை நன்றாக எழுத முயற்சிக்கிறேன்...

      Delete
  7. GBU படத்தில் வரும் "Eli Wallach" டுகோ கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
    The Magnificent Seven படத்தை பற்றி அருமையாக எழுதி உள்ளீர்கள், நீங்கள் சொல்லுவது போல் இந்த படம் அதன் ஒரிஜினல் அளவுக்கு இல்லை தான்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது 100% உண்மை ராஜ்..

      Delete
  8. நன்றி நண்பா...உங்கள் பதிவுகளில் உள்ள அனைத்து படங்களுமே நான் ரசித்து பார்த்தவை...இன்னும் The Magnificent Seven பார்க்கவில்லை. விரைவில் பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி நண்பா..
    கண்டிப்பா பாருங்க...

    ReplyDelete
  10. Arumayana vimarsanam,
    Pakirvukku nandri,
    Niraya ezhuthungalaen naanga padikkirom.

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி நண்பா..
    தொடர்ந்து படியுங்கள்..

    ReplyDelete
  12. உங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும், முகவரி கீழே இணைத்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_16.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே,
      அலுவல் காரணமாக சில நாட்கள் வலை பக்கம் வரவில்லை.
      பார்த்தேன் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
      மன்னிக்கவும்.

      Delete
  13. very nice review..
    thanks for sharing..

    ReplyDelete
  14. உங்கள் எழுத்து படம் பார்க்க துண்டுகிறது,
    பாதி படம் பார்த்து நிறுத்தி விட்டேன்... இன்னும் மிதி பாதியை பார்க்க வேண்டும்.

    ReplyDelete