Wednesday 5 September 2012

There Will Be Blood - திரை விமர்சனம்


Paul Thomas Anderson இயக்கிய இத்திரைப்படத்தில் Daniel Day-Lewis (Daniel Plainview), Paul Dano( Eli Sunday) மற்றும் பலர் நடித்துள்ளனர்.  Upton Sinclair's எழுதிய ஆயில்(Oil 1927) என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. 8 ஆஸ்கார் அவார்ட்ஸ்-க்கு பரிந்துரைக்கப்பட்டு சிறந்த நடிகர் (Daniel Day-Lewis) மற்றும் சிறந்த ஒளிப்பதிவிற்காக (Robert Elswit) 2 ஆஸ்கார் அவார்ட்ஸ் வாங்கியது. IMDB டாப் 250- யில் 177-வது இடத்தை பிடித்துள்ளது.


நம்ம படத்தோட ஹீரோ 4 முறை சிறந்த நடிகருக்காக ஆஸ்கார் அவார்ட்ஸ்க்கு பரிந்துரைக்கப்பட்டு 2 முறை( There will be Blood & My Left Foot) வென்றுள்ளார். மிகவும் திறமை வாய்ந்த நடிகர். இவரோட புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரா இந்த திரைப்படத்தில்  டேனியல் என்ற  ரோலில் நடித்துள்ளார் என்று  நம்பவே முடியவில்லை. இவர் நடிச்ச சில  பிரபலமான படங்கள் Gangs of New York , In the Name of the Father , The Last of the Mohicans etc.. (கடைசியாக சொன்ன இரண்டு படங்களில் இவரது நடிப்புக்கு நான் ரசிகன்). டேனியல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்த படமே எடுத்திருக்க மாட்டேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் இயக்குனர். டேனியல் நடிப்பு நம்மை அப்படியே கதைக்களத்திற்குள் புகுத்தி விடும்.அட்டகாசமான நடிப்பினால் நம்மை கட்டிப்போட்டுவிடுவார் டேனியல்.


படத்தில் கதை என்று பெரிதாக ஒன்று கிடையாது. புயல் எப்படி அடிக்கும்? நமக்கெல்லாம் தெரியும் தானே நண்பர்களேபுயலுக்கு முன்னும் அமைதி பின்னும் அமைதி...அது போல தான் இந்த படமும்...அமைதியாக, சுகமான காற்றை போல ஆரம்பித்து சூரவளியாக முடியும். இந்தப்படத்தை பார்ப்பவர்கள் இது தான் முடிவு என்று சொல்லவே முடியாது. கதாப்பாத்திரங்களின் செயல்கள் நம்மை அதிசயப்படுத்தும். படத்தின் முடிவை கணிக்கவே முடியாது.


ஆயில் வளங்களை தேடி அலையும் ஒரு மனிதன், தன் கனவு என்று நினைக்கும்  வேலையில் மற்றும் குறிக்கோளில்  எப்படி முன்னேறுகிறான் என்பது தான் படம். ஆனால் ஒன்றும் இல்லாத கதையை சுவாரசியமாக திரைக்கதையில் சொன்ன விதம் மிக மிக அருமை. 1900-களில் நடக்கும் கதையை, 2007-யில் செட் போட்டு எடுத்திருக்கும் விதம் நம்மை பிரமிப்பு அடையச்செய்யும். மிக நேர்த்தியான கலை, செட் என்றே சொல்லமுடியாத அளவிற்கும் மிக அற்புதமாக  இருக்கும். படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு  நம்மை 1900 - க்கே கூட்டிசென்றுவிடும்.

வறண்ட நிலப்பகுதில் வெள்ளி சுரங்கம் அமைக்க ஆசைபடும் டேனியல், தற்செயலாக தோண்டும் போது ஆயில் (crude) கிடைகிறது. வெள்ளி  தேடும் வேலையை விட்டுவிட்டு , ஆயில் எடுக்கும் வேலையை செய்கிறான் டேனியல். அதற்காக சில பணியாட்களை வேலைக்கு அமர்த்தி ஒரு சிறிய ஆயில் கம்பெனி ஆரம்பிக்கிறான். ஒரு நாள் ஆயில் பிரஷர் தாங்காமல் மேலே ஆயில் பீச்சி அடிக்க அதில் ஒருவன் இறந்துபோகிறான்.அவனின் கைக்குழந்தையை தன் குழந்தையாக வளர்கிறான் டேனியல். அந்த சிறிய கம்பெனி தந்த லாபத்தால், இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி அடைகிறான். அவன் கம்பெனிக்கு பார்ட்னராக   தன் வளர்ப்பு மகனை சேர்த்துகொள்கிறான்.


சில வருடங்களுக்கு பின்னர், எலை சண்டே என்பவன், கலிபோர்னியாவில் உள்ள  தன் நிலத்தில் ஆயில் உள்ளதாகவும், அந்த இடத்தை விற்க தயாராக உள்ளதாகவும், இடத்தை பார்க்க அழைக்கிறான். எலை சண்டேவிற்கு அவனை போலவே ஒரு சகோதரன் உண்டு, இரட்டை பிள்ளைகள் , (அவன் பெயரும் எலை சண்டே தான்), இந்த வறண்ட இடத்திலல் உள்ள ஒரு சிறிய சர்ச்-ல் பாஸ்டர் ஆக பணிபுரிகிறான். சர்ச்காக $ 5000 தந்தால் மட்டுமே இடத்தை தருவதாக  கூறுகிறான், இருப்பினும் அவனின் தந்தையை பழைய விலைக்கே  சமாதிக்க வைத்து இடத்தை வாங்கிவிடுகிறான் டேனியல். ஆயில் எக்ஸ்ப்ளோர் செய்யும்  போது , பிரஷர் தாங்காமல் ஆயில் பீச்சி அடிக்க அவன் மகனுக்கு காது கேட்காமல் போகிறது.

அந்த இடத்தை சுற்றி உள்ள மற்ற  இடங்களையும் வாங்க நினைக்கும்  டேனியல். அந்த இடத்தில் ரோடு, பள்ளி போன்ற வசதிகளை மக்களுக்கு செய்து தருவதாக கூறி மற்றவர்களிடம் இருந்து அனைத்து இடங்களையும் வாங்கி விடுகிறான் Bandy என்பவனின் இடத்தை தவிர, காரணம் இடத்தை விற்க விருப்பமில்லை.  இதற்கிடையில் டேனியலின் சகோதரன் என்று சொல்லிக்கொண்டு ஹென்றி என்பவன் அவனை பார்க்க வருகிறான். அவன் சொல்வது முன்னுக்கு பின் முரணாக இருந்தாலும் அவனிடம் ஒன்றும் கேட்காமல் அவனை சேர்த்துகொள்கிறான்.  அவனின் வளர்ச்சியை பார்க்கும் standard ஆயில் கம்பெனி அவனின் கம்பெனியை  வாங்க நினைக்கிறது. ஆனால் அவனோ, Union Oil உடன் இணைந்து பூமியின் கீழ் Pipelineஅமைத்து, கலிபோர்னியா கோஸ்ட்க்கு ஆயில் ஏற்றுமதி செய்ய திட்டமிடுகிறான்.


ஒரு நாள் ஹென்றியை அழைத்து கொண்டு குதிரையில் மலைபக்கம் செல்லும் டேனியல் Bandyக்கு சொந்தாமான இடத்தில் வந்து இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருகிறார்கள். அங்கே ஹென்றியை தன் சகோதரன் இல்லை என்று ஹென்றி வாயால் சொல்லவைக்கும் டேனியல் அவனை கொன்று அங்கே புதைத்துவிடுகிறான். அசதியில் அங்கே உறங்கியும் விடுகிறான். அங்கு வரும் Bandy நடந்தவற்றை அறிந்துகொண்டு, இந்த விஷயத்தை வெளியே சொல்லகூடாது என்றால் சர்ச்க்கு வந்து பாவமன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொல்கிறான். வேறுவழி இல்லாமல் Bandy உடன் சர்ச்க்கு செல்லும் டேனியலை  கன்னத்தில் அறைந்து அசிங்கபடுத்துகிறான் சர்ச் பாஸ்டர் எலை.இதற்கு டேனியல் எப்படி எலையை பழிவாங்கினான்? அவன் விரும்பியபடி Pipeline அமைத்தானா? தன் வளர்ப்பு மகனுக்கு , அவன் உண்மையான தந்தை இல்லை என்பது தெரிந்ததா? அவன் விரும்பியபடி ஆயில் பிசினஸ்சில் தனித்து நின்று வெற்றி அடைந்தானா? இவை அனைத்திற்கு படத்தை பாருங்கள்.


தன் ஆயில் பிசினஸ்சில் வேறு யாரையும் பார்ட்னராக வைத்து கொள்ளாமால் தன் வளர்ப்பு மகனையே சேர்த்துக்கொள்ளும் டேனியல், தான் சம்பாதிக்கும் சொத்துகளை தானே ஆள வேண்டும் என்ற எண்ணம் தெரிகிறது. ஆனால் பின்னர் மற்றொரு  காட்சியில், பிசினஸ் பேசுவதற்காக தன் மகனை அழைத்து  செல்லும் போது , வாயை நாப்கின் வைத்து மறைத்துக்கொண்டு பேசுவான் டேனியல். காரணம் காது கேட்கவில்லை என்றாலும் உதட்டின் அசைவுகளை வைத்து தன் மகன் பிசினஸ் பேச்சுவார்த்தைகளை  புரிந்து கொள்வான் என்ற எண்ணத்தில். மொத்தத்தில் டேனியல் கேரக்டர் ஸ்கெட்ச் மிஸ்டரி ஆக இருக்கும்.

தன்னை தவிர யாரும் ஆயில் பிசினஸ்-ல் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக , யாருக்கும் தன் கம்பெனி பங்குகளை விற்காமல், pipeline அமைத்து ஆயில் எக்ஸ்போர்ட்  செய்ய நினைக்கும் டேனியலின் யோசனை, வறண்ட பூமியை யாருமே வாங்க மாட்டார்கள் என்று கூறி, மிக சொற்பமான விலைக்கு வாங்கி ஆயில் எக்ஸ்ப்ளோர் செய்து பல மடங்கு லாபம் சம்பாதிக்கும் மூளை மற்றும் தான் வளர்க்கும் மகன் சொந்த மகன்  இல்லை என்ற விஷயத்தை யாருக்குமே  சொல்லாமல் ரகசியமாகவே வைத்து  இறுதியில் தன் மகனிடம் அந்த உண்மையை கூறும் விதம், அனைத்து  காட்சிகளிலும் டேனியல் பெர்பெக்ட் பிசினஸ்மென் என்று நிரூபிக்கிறார்.


ஆயில் எக்ஸ்ப்ளோர் செய்யும் போது, சில சமயம் ஆயில், அடியில் உள்ள காஸ் பிரஷர் காரணமாக மிக வேகமாக பீச்சி அடிக்கும். அப்படி ஒரு காட்சியில், ஆயில் கிணறு தோண்டி கீழே உள்ள ஆயிலை மேல எடுக்கும்  போது ஆயில் 100 அடி உயரத்திற்கு அடிக்கும். இந்த காட்சியை பார்க்கும் போது மிக பிரமிப்பாக உள்ளது. ஒளிப்பதிவு  அபாரம்.

இந்த படத்தின் இறுதி காட்சியில் டேனியல் எலைஇடம் பேசும் பொது “I Drink your milkshake” என்ற டயலாக்-கை கூறுவான். அந்த காலகட்டத்தின்  ஆல்பர்ட் என்ற Mexican Senator, ஆயில் ட்ரிப்டிங் ஊழலில் லஞ்சம் வாங்கி மாட்டிகொண்ட நபர். Teapot dome என்று அழைக்கபடும் இந்த ஊழல் தான்
இந்த ஆயில் என்ற நாவலை எழுத inspiration ஆகா அமைந்ததாம்.

ஒரு சாதாரண கதையை எப்படி மிக சுவரசியமாக சொல்ல முடியும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம்.

26 comments:

  1. விமர்சனமே சுவாரஸ்யமாகத் தான் உள்ளது... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே

      Delete
  2. விமர்சனமும் எழுத்து நடையும் அருமை நண்பா... ஹோல்லோய்வூத் படம் எல்லாம் கதியோ சொல்லி பார் என்று யாரவது சொன்னால் மட்டுமே பார்பேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே...
      படம் பாருங்க. பிடிக்கும்

      Delete
  3. அருமையான விமர்சனம் நண்பரே..கதையை ரொம்ப நல்லா நரேட் பண்ணறீங்க.. :):)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா ...

      Delete
  4. very nice review. I saw this movie 3 times. Best directionand screenplay. by ls

    ReplyDelete
    Replies
    1. Thanks for your comments.. continue reading...

      Delete
  5. கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்! அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  7. So far I didn't saw this movie.. Thanks for fantastic review in TAMIL.
    your review creates curiosity to watch this film...

    ReplyDelete
  8. Thank you for visiting..... Def watch the movie..

    ReplyDelete
  9. அழகா கதை சொல்லி விமர்சனம் செய்றிங்க நண்பா கலக்கல் T.M 2

    ReplyDelete
  10. sir.....just read ur blog.....ur review are 'thaarumaaru' with timeless classic collections.....i want to read about pacino n de niro movies in ur blog.....coz am worship their acting....thank u sir.....

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot. Yeah they are classic actors.. Continue reading...

      Delete
  11. except 'To kill a mockingbird' i watched all movies tat in this blog....

    ReplyDelete
  12. இந்த படத்தை ஒரு சுவாரசியமான வெஸ்ட்ரன் ரசிகனாக பார்க்க முடியுமா? ஆம் என்றால் மட்டுமே டவுன்லோடு.. இல்லை என்றால் மவுன்ரோடு

    ReplyDelete
  13. ஸ்டைலிஷான படம்னு சொல்லமுடியாது. ஆனால் சுவாரசியமா இருக்கும்...

    ReplyDelete
  14. உண்மையிலே இந்தா படத்தை இது வரை ஐந்து முறை பார்க்க ஆரம்பித்து, ஒரு முடை குட முழுமையாக பார்த்தது இல்லை இருவது நிமிடதிற்குள் நிறுத்தி விடுவேன். அடுத்த முறை கண்டிப்பாக முழுவதும் பார்த்து விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் பாருங்க நண்பா... படம் ஆரம்பித்து முதல் 20 நிமிடங்கள் சற்று பொறுமையாகத்தான் செல்லும். பிறகு சுவாரசியமாக இருக்கும் நண்பா

      Delete
  15. நல்ல விமர்சனம் நண்பரே...கதை என்று பெரிதாக ஒன்றும் கிடையாது..ஹீரோ கேரக்டரை வடிவமைத்த விதமும், வெளிப்படுத்திய விதமுமே படத்தின் சிறப்பு.

    மேலும் அந்த ஆயில் பிரசருடன் பீச்சி அடிக்கும் காட்சியை எப்படி எடுத்தார்கள் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அந்த ஒரு காட்சிக்காவே என் கலெக்சனில் இந்தப் படம் உண்டு.(நான் ஆயில்&கேஸ் லைனில் இருப்பதாலோ என்னவோ, அந்தக் காட்சி மேல் அப்படி ஒரு ஈர்ப்பு).

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது 100% உண்மை நண்பா. படத்தில் ஹீரோவின் காதபாதிரம் மிக வித்தியாசமானது. நானும் ஆயில்&கேஸ் லைனில் தான் உள்ளேன் நண்பா. எனக்கும் அந்த காட்சி மிகவும் பிடிக்கும்.

      Delete
  16. உங்கள் விமர்சனத்தில் சிறு பிழை.சகோதரர்கள் பெயர் பால் சண்டே மற்றும் ஈலை சண்டே... இருவரின் பெயரும் ஒன்றல்ல..

    ReplyDelete