Thursday 12 July 2012

12 Angry Men - திரை விமர்சனம்

12 Angry Men - திரை விமர்சனம்

இந்த படத்தில் Henry Fonda, Lee J. Cobb, Martin Balsam, E.G. Marshall நடித்துள்ளனர். இந்த படத்தை Sidney Lumet இயக்கிவுள்ளார். இந்த திரைப்படம் IMDB 250-ல் டாப் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. 3 Oscar Awards-க்கு (சிறந்த இயக்குனர், சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதை) பரிந்துரைக்கபட்டுள்ளது.  கதை மற்றும் திரைக்கதை எழுதிய Reginald Rose இந்த திரைப்படத்தை Henry Fonda உடன் இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் Sidney Lumet  6 Oscar Awards-க்கு பரிந்துரைக்கப்பட்டவர். இவருடைய  முக்கியமான  படைப்புகளில் சில Dog Day Afternoon  , Network, Before the Devil Knows You're Dead , The Verdict , The Deadly Affair etc…

Henry Fonda ஒரு நடிகர், தயாரிப்பாளர், soundtrack மற்றும் motion Pictures-ல் வல்லுநர். அவர் ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார் (சிறந்த நடிகர் மற்றும் சாதனையாளர்  விருது motion pictures). இவருடைய  முக்கியமான படைப்புகளில்  சில Once Upon a Time in the West , The Grapes of Wrath ,  The Deputy etc…

இந்த படத்தை பார்பதற்க்கு முக்கிய காரணங்கள் இந்த படத்தின் இயக்குனர் ,பின்னணி இசை, திரைக்கதை மற்றும்  Henry Fonda, Lee J. கோபப், E.G. மார்ஷல் ஆகியோரின் இயல்பான  நடிப்பு.
இந்த படத்தின் கதையை விட திரைக்கதைக்கு தான் அதிக மதிப்பெண். 


இனி கதைக்கு வருவோம்... 

ஒரு அமெரிக்க- ஸ்பானிஷ் வாலிபன் தன் அப்பாவை கொன்றதாக கேஸ் கோர்ட் க்கு வருகிறது. வாதம் அவனுக்கு எதிராக இருக்கிறது . அதற்கான காரணங்கள் அவன் கொலை செய்வதை அவன் எதிர் விட்டுப் பெண் பார்த்ததாக சாட்சி சொல்கிறாள்.

அவன் வீட்டு மேல் மாடியில் உள்ள ஒரு வயதான முதியவர் கொலை செய்த பொது அலறல் சத்தம் கேட்டதாகவும் சாட்சி சொல்கிறார் , அவன் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை அந்த வாலிபன் ஒரு கடையில் வாங்கியதாகவும் அது தான் அந்த மாடல் -இல் கடைசி கத்தி என்றும் கடை முதலாளி சாட்சி சொல்கிறார்.

இந்த காரணங்களின்  அடிப்படையில் அந்த வாலிபன் குற்றவாளி என்பது வாதம். 12 பேர் கொண்ட ஒரு குழு வாதம் மற்றும் சாட்சியம் அடிப்டையில் ஒருமித்த  கருத்துக்கு வரவேண்டும். அப்படி வந்தால் நீதிபதி அவர்கள் கருத்தின் அடிபடையில் தீர்ப்பை தருவார்.
இந்த முன்னோட்டதோடு  ஆரம்பிகிறது படம். அந்த 12 பேர் கொண்ட குழு ஒரு அறையில் சந்திகிறார்கள். படம் முழுவது அந்த அறையில் நடக்கும் பேச்சு வார்த்தை மட்டும் தான் . 12 பேர்-ல் 11 பேர் அந்த கேஸ் -ஐ பற்றி விவாதிக்க கூட விரும்ப வில்லை வந்த உடனேயே அந்த வாலிபன் தான் கொலை செய்தான் என்று கூறிவிட்டு தங்கள் வேலையை பார்க்க கிளம்புகிறார்கள்.

 அதில் Henry Fonda மட்டும் இது ஒருவரின் உயிர்,அது நமது கைகளில்   உள்ளது, நாம் சிறிது நேரம் உட்கார்ந்து தை பற்றி விவாதிக்கலாம் என்று சொல்கிறான். ஆனால் அவன் மேல் மற்றவர்கள் எரிச்சல் அடைகிறார்கள். இதில் விவாதிக்க ஒன்றுமே  இல்லை  என்றும் சொல்கிறார்கள். குழப்பதை தவிர்க்க Vote போடலாம் என்று முடிவு செய்கிறார்கள். 
அனைவரும் Guilty(கில்டி-குற்றம்) என்று வாக்கு அளிக்க ஹென்றி  மட்டும் Not Guilty( நாட் கில்டி - குற்றமற்றவன்) என்று வாக்கு அளிக்கிறான்.  அதற்கு அவன் கூறும் காரணம் அந்த வாலிபன் கொலை செய்தவனாகவே இருக்கலாம் அல்லது செய்யாதவனாகவே இருக்கலாம். அவன் உயிர் நமது கையில் உள்ளது. ஒரு உயிருக்காக நாம் சிறிது நேரம் இதை பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கும் வரலாம் என்பதே. இதை கேட்ட பின்னர் ஹென்றி-ன் உணர்வை மதித்து ஒருவர் மட்டும் நாட் கில்டி என்று வாக்கு அளிக்கிறார்.

ஹென்றி  தன் பேச்சு மற்றும் விவாத திறமையால் 5௦% நாட் கில்டி ஆகா மாற்றிவிடுகிறான். ஆனால் 1௦௦% ஒருமித்த கருத்தை நீதிபதியிடம் சொல்ல வேண்டும். ஹென்றி மீதி 5௦% நாட் கில்டி க மாற்றினானா  என்பது மீதி கதை.....
ஒரு கட்டத்தில் ஹென்றிக்கு எதிராக பேசும் நபர் அந்த வாலிபன் குற்றம் செய்யவில்லை என்று மனதில் நினைத்தாலும் அந்த நபரின் மனதில் இருக்கும் ஈகோ மற்றும் விட்டுகொடுக்க முடியாத மனநிலை அவனை ஒத்துபோக விடவில்லை.  இந்த இடத்தில் மனிதனின் உணர்வுகளை அழகாக சொல்லிருக்கிறார் இயக்குனர். கையில் அதிகாரம் இருந்தால்  சற்றும் சிந்திக்காமல் ஒரு மனிதனின் மனம் எப்படி எல்லாம் செயல்படும் என்பதை ஆணித்தரமாக  சொல்கிறது இப்படம்.

பின்னணி இசை பற்றி சொல்லியே ஆக வேண்டும். படம் ஆரம்பித்து 10 நிமிடங்களுக்குள் நீங்கள் படத்திற்குள்ளே சென்று விடுவீர்கள். படத்தில் மழை பெய்யும் காட்சியில் நிஜமாகவே என் வீட்டிற்கு வெளியே மழை பெய்ததது போல இருந்தது. படம் முடிந்தவுடன் மழை நின்றது போல தோன்றியது.

1957 -ல் வெளிவந்த இந்த திரைப்படம் 3 வாரத்திற்கும் குறைவான நாட்களிலே $350000 செலவில் எடுக்கப்பட்ட  படம்.

ஒரே ஒரு அறையில் மொத்த படத்தையும் எடுத்திருக்கும் இயக்குனர் - க்கு எவ்வளவு தன்னம்பிக்கை இருந்திருக்க வேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!!!! அதுவும் 1957!!!!! மிக புதிய முயற்சி அந்த காலத்தியே!!!!!!!!!

ரோமன் போலன்ஸ்கி-இன் Carnage படமும் இதே style- ல் ஒரு வீட்டிற்குள்ளே 4 பேர் மத்தியில் உள்ள உரையாடல் தான் முழு படமும்.

படம் Black and White மற்றும் வெளியான வருடமும் 1957 என்று நினைத்து பார்க்காமல் இருக்க வேண்டாம். பார்த்தே தீர வேண்டிய மிக அற்புதமான திரைப்படம் இந்த 12 Angry Men.






20 comments:

  1. அற்புதமான படம்.., உலகம் முழுவதும் மேலாண்மை வகுப்புகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள படமாகும் :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி.
      மிகவும் சரியாகச் சொன்னீர்கள் நண்பா!
      உங்கள் வலைபதிவில் உள்ள உலக சினிமாக்களின் விமர்சனங்கள் அருமை.

      Delete
  2. ஒரிஜினல் மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ----- http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/06/download-original-softwares.html

    ReplyDelete
  3. இது சூப்பர் படம் சார். நான் ரெண்டு தடவ பாத்துட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி.
      carnage படம் பாருங்க! அதுவும் நன்றாக இருக்கும்.
      உங்கள் Godfather விமர்சனம் சூப்பர்.

      Delete
  4. இன்னும் பார்க்கல நண்பா. சில படங்கள் பார்த்து முடிக்க இருக்கு. அது முடிந்ததும் இத வச்சுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்துவிட்டு கண்டிப்பாக உங்கள் கருத்தை சொல்லுங்கள் நண்பா.
      உங்கள் பதிவுகள் ரொம்ப நல்லா இருக்கு. உங்களின் எல்லா பதிவுகளும் படித்து இருக்கிறேன்.

      Delete
  5. Fantastic movie and right introducion to this movie

    ReplyDelete
    Replies
    1. நன்றி! தொடர்ந்து படியுங்கள்.

      Delete
  6. ரொம்ப நல்ல படம் இது...ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்தது...உங்க விமர்சனம் படத்தின் நினைவுகளை மீட்டு விட்டது... நன்றாக எழுதுகிறேர்கள்...
    தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஊக்கதிற்க்கு நன்றி.
      மிகவும் சந்தோஷமாக உள்ளது
      தொடர்ந்து படியுங்கள்.

      Delete
  7. பாஸ்...

    Pls remove Word verification...
    Steps to remove it..
    1) Go to Blogger -->Settings-->Posts and comments --> show word verification = No

    ReplyDelete
  8. நீங்கள் கூறியது போல செய்துவிட்டேன் நண்பா!!மிக்க நன்றி

    ReplyDelete
  9. மறக்க முடியாத படம்..இன்னும் சில முறைகளும் தாராளமாக பார்க்கும் அளவுக்கு திறமையாக எடுக்கப்பட்ட ரொம்ப ரேரான படைப்பு..பலரது விமர்சனம் படித்திருக்கிறேன்.நீங்களும் அழகா எழுதி இருக்கீங்க.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..
    உங்களுடைய வலைத்தளம் மிகவும் அருமை.
    உங்களின் carnage பற்றிய விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  11. நல்ல படம் நண்பா.. விமர்சனம் நல்லாருக்கு..

    ReplyDelete
  12. மிக்க நன்றி நண்பா!
    தொடர்ந்து வாசியுங்கள்.

    ReplyDelete
  13. விமர்சனம் நன்று.நல்ல ஒரு திரைப்படம்....நான் என்ஜாய் செய்து பார்த்த சில படங்களில் இதுவும் ஒன்று...என் கிட்ட யாருனா ஆங்கில படம் பார்கனம் என்று சொன்னால் ... முதலில் பரிந்துரைப்பது இந்த படத்தை தான்.

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி நண்பரே!!
    நீங்கள் கூறுவது 100% உண்மை..
    தொடர்ந்து படியுங்கள்

    ReplyDelete
  15. Tamil dubbing version kedaikuma

    ReplyDelete