Sunday 22 July 2012

Schindler’s List - திரைவிமர்சனம்

Schindler’s List - திரைவிமர்சனம்


இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களின் மீது ஹிட்லரின் தலைமையில் நாஜிப்படைகள் நிகழ்த்திய மிகப்பெரிய இனப்படுகொலையும், அதில் மனிதநேயமுள்ள ஜெர்மனியை சேர்ந்த ஒருவன் 1200 யூதர்களை எப்படி காப்பாற்றுகிறான் என்பதை பற்றி தான் இந்த படம் சொல்லுகிறது.
இது இரண்டாம் உலகப்போரின் போது 1200  யூத இன மக்களின் உயிரை காப்பாற்றிய ஆஸ்கர் ஷிண்ட்லெர் (Oskar Schindler)  என்பவரை பற்றிய உண்மை சம்பவம்.
இந்தப்படம் மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி மற்றும் ஒரே ஒரு தனி மனிதனால் கூட சமுகத்தில் அன்பையும் மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்பதினை பற்றியும், குற்றம் நடக்கும் போது கண்மூடி மறுதலிக்கும் நம்மை போன்ற சக மனிதர்களை பற்றிய உண்மையை விவரிக்கிறது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் ஒரு ஹீரோ அல்லது ஒரு ரோல் மாடல் உண்டு. உதாரணமாக, அசாதாரணமான செயல்கள் செய்தவர்கள், விளையாட்டு வீரர்கள், பேச்சாளர்கள், போராளிகள் இது போல ஒருவரை நாம் ஹீரோவாக ஏற்றுகொள்கிறோம் அல்லவா? அது போல ஆஸ்கர் ஷிண்ட்லெர் என்ற சாதாரண மனிதர், உலகெங்கும் உள்ள யூதர்களுக்கும் மற்றும் மனிதநேயம் பரவ போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் ஹீரோ.  அவர் 1200  யூதர்களை இரண்டாம் உலகப்போரின் போது எப்படி காப்பாற்றினார்? அதைப்பற்றி தான் இந்த திரைப்படம் கூறுகிறது
தாமஸ் கேநீல்லி(Thomas Keneally) என்பவர் எழுதிய “Schindler’s Ark”  என்ற நாவலை மையமாக வைத்து தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
இப்படம் 12 ஆஸ்கார் அவார்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 7 ஆஸ்கார்களை, சிறந்த இயக்குனர் - ஸ்டீபன் ஸ்பீல்பர்க்(Steven Spielberg), சிறந்த இசை –ஜான் வில்லியம்ஸ் (John Williams), சிறந்த ஒளிப்பதிவு – (Janusz Kaminski), சிறந்த படத்தொகுப்பு – (Michael Kahn), சிறந்த கதை – Steven Zaillian, சிறந்த கலை இயக்கம் – (Allan Starski, Ewa Braun) மற்றும் சிறந்த படத்திற்காக – (Steven Spielberg, Gerard R.Molen, Branco Lustig) அள்ளியது.

இந்தப்படத்தில் லியாம் நீசன்(Liam Neeson)  ஆஸ்கர் ஷிண்ட்லெர் ஆகவும்  , ரால்ப் பினெஸ்(Ralph Fiennes) அமோன் கோஎத் ஆகவும் , பென் கிங்க்ஸ்லி(Ben Kingsley)  இட்ஷாக் ஸ்டேர்ன் ஆகவும், நடிக்கவில்லை வாழ்ந்தே இருக்கிறார்கள். ஸ்டீபன் ஸ்பீல்பர்க்(Steven Spielberg) இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் IMDB Top 250 -ல் 7-வது இடத்தை பிடித்துள்ளது.
இது இரண்டாம் உலகப்போரின் போது(1939-1945) கிரகோவ் போலந்தில்(Krakow – Poland) நடந்த ஒரு உண்மை சம்பவம். இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனிய நாஜிப்படைகள் போலந்தை வெற்றிக்கொண்டு, அங்கு வசிக்கும் யூதர்களை சிறைப்பிடித்து கிரகொவிற்கு ஒரு ரயிலில் அடைத்து அனுப்புகிறார்கள்.

ஆஸ்கர் ஷிண்ட்லெர் ஜெர்மனியை சேர்ந்த தொழிலதிபர், அடிமை தொழிலாளர்கள் மிகக்குறைந்த விலைக்கு போலந்தில் உள்ள கிரகொவில் கிடைப்பார்கள் என்று அங்கு வருகிறான்.  தனக்கு  நாஜிப்படை தளபதிகளிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி யூத மக்களை தனது எனாமல் தொழிற்சாலைக்கு வேலையாட்களாக அழைத்துச்செல்கிறான்.

இதுப்போல் வேலையாட்களாக பயன்படுத்த முடியாத யூதர்களை நாஜிப்படைகள் சித்ரவதை கூடங்களில் வைத்து கொன்று விடும்.   போலந்து போர்க்கைதிகளை வேலைக்கு அமர்த்தினால் அதிக கூலி கொடுக்கவேண்டும், அதனால் யூதர்களை வேலையாட்களாக தேர்ந்தெடுக்கிறான் ஆஸ்கர் ஷிண்ட்லெர். அவர்களுக்கு மிகச்சொற்பமான கூலி கொடுத்தால் போதும், அதுவும் கூட SS எனடப்படுகிற நாஜிப்படையின் ஒரு முக்கியமான பிரிவில் உள்ள படைத்தளபதியிடம் கொடுத்தால் போதும்.
அப்படி தேர்ந்தெடுக்கப்படும் யூத தொழிலாளர்களுக்கு நீல நிற அட்டை வழங்கப்படும். அப்படி கொடுக்கப்பட்டால் நாஜிப்படையினருக்கு தேவையான மிக அத்தியாவிசியமான உற்பத்தி பொருட்கள் செய்பவர்கள் என்று அர்த்தம்.   அவர்களை நாஜிக்கள் கொல்லமாட்டார்கள்
நாஜித்தலைமை  தங்கள் படை வீரர்களுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள் செய்து தரும்படி ஆஸ்கர் ஷிண்ட்லெர்க்கு உத்தரவு போடுகின்றது, ஆனால் ஆஸ்கர் ஷிண்ட்லெர் யூத தொழிலாளிகளை பெறுவதற்காக நாசி உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தன்னிடம் உள்ள பாதி பணத்தை இழந்துவிடுகிறான். பாத்திரங்கள் செய்யும் இயந்திரங்கள் வாங்க அவனிடம் போதுமான பணமில்லை. அதனால் அவனிடம் வேலை செய்யும் யூதர்களிடம் ஒரு ஒப்பந்தம் போடுகிறான், யூதர்கள் தன்னிடம் உள்ள பணத்தை தொழில்சாலைக்கு கொடுத்தால் அதில் வரும் லாபத்தில் ஒரு பங்கு தருவதாக சொல்கிறான்.
சிறிது காலத்தில் தொழிற்சாலை மிக லாபகரமாக  இயங்குகிறது. அந்த தொழிற்சாலையில் உள்ள யூதர்களின் தலைவன் இட்ஷாக் ஸ்டேர்ன், ஆஸ்கர் ஷிண்ட்லெர் கொடுக்கும் லாபப்பணத்தை வைத்து மற்ற சித்ரவதை கூடங்களில் இருக்கும் சில யூதர்களை லஞ்சம் கொடுத்து மீட்டு தொழிற்சாலையில் சேர்த்து நீல அட்டை வாங்கிக்கொடுக்கிறான்.
அந்தச்சமயத்தில் நாஜிப்படையின் உயர் அதிகாரி அமோன் கோயேத் கிரக்கொவிற்கு ஒரு புதிய தொழிலாளர்களுக்காக கூடம் துவங்குவதற்கு வருகிறான். மிகக்கொடூரமான உள்ளம் படைத்த அவனுக்கு காலையில் எழுந்தவுடன், அவன் தங்கி இருக்கும் மாடியில் இருந்து துப்பாக்கியை எடுத்து கண்ணில் தெரியும் யூதர்களை சுடுவது தான் வழக்கம். இது தான் அவனது பொழுதுப்போக்கு. பின்பு ஒரு நாள் சித்ரவதை கூடத்தில் இருக்கும் யூதர்கள் அனைவரையும் சுட்டுக்கொல்ல உத்தரவு இடுகிறான். இதனால் ஆயிரக்கணக்கான யூதர்கள் பரிதாபமாக மாண்டுப்போகிறார்கள்.
இந்தக்கொடூரச்சம்பவத்தை பார்த்த ஆஸ்கர் ஷிண்ட்லரின் மனம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. பணம் மட்டும் தான் குறிக்கோளாக இருந்த ஆஸ்கர் ஷிண்ட்லெர் இதற்கு பிறகு தன்னால் முடிந்தவரை தனது தொழிற்சாலையில் யூதர்களை சேர்த்து அவர்களின் உயிரை காப்பாற்றவேண்டும் என்று நினைக்கிறான். அதனால் அமோன் கோயேத் உடன் நட்புக்கொள்கிறான், பின்பு அவன் அனுமதியுடன் கடுமையான வேலை செய்ய முடியாத பெண்கள், சிறு குழந்தைகளை தனது தொழிற்சாலையில் பணிக்கு சேர்க்கிறான். இப்பொழுது ஆஸ்கர் ஷிண்ட்லரின் குறிக்கோள் தன்னால் முடிந்த வரை சித்ரவதை கூடங்களில் இருக்கும் யூதர்களை காப்பாற்றி தொழிற்சாலையில் சேர்ப்பது தான்.
அமோன் கோயேத்திற்கு இந்த தருணத்தில் பெர்லினில் இருந்து ஒரு கட்டளை வருகிறது, அதில் அங்கு உள்ள யூதர்களை முற்றிலுமாக கொன்றுவிட்டு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பணியாட்களையும் கூட கொன்று விட்டு auzchwitz க்கு வரச்சொல்கிறது.
இதனை அறிந்த ஆஸ்கர் ஷிண்ட்லெர் மிகவும் கவலை கொள்கிறான். சட்ட விரோதமாக யூதர்களை பாதுகாத்து வைப்பது நாஜிக்களுக்கு தெரிந்தால் தனக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும், அவன் அமோன் கோயேத்திடம், அவனிடம் உள்ள யூத தொழிலாளர்களை தன்னுடைய பழைய ஊரான செக்கொச்லோவியாவுக்கு கூட்டிச்சென்று அங்கு உள்ள தனது தொழிற்சாலையில் பயன்படுதிகொள்வதாகக் கூறுகிறான். இதற்கு பல லட்சங்கள் பணமாக வேண்டும் என்று அமோன் கோயேத் சொல்கிறான், அதற்க்கு சம்மதிக்கும் ஆஸ்கர் ஷிண்ட்லெர் பணத்தை தருவதாக ஒத்துக்கொள்கிறான், ஆனால் தொழிலாளர்கள் அனைவரும் செக்கொச்லோவியா போகும் வரை நாஜிப்படைகள் பாதுகாப்பு தரவேண்டும் எனக்கூறுகிறான்.
தன்னிடம் உள்ள எல்லா பணத்தையும் கொடுத்து 1200 யூத தொழிலாளர்களை செக்கொச்லோவியா அழைத்து செல்ல அமோன் கோயேத்திடம் அனுமதி பெறுகிறான்.
1200 யூதர்களை ஆஸ்கர் ஷிண்ட்லெர் செக்கொச்லோவியா அழைத்து சென்றானா?
யூதர்களை பாதுகாத்த குற்றத்திற்காக அவனுக்கு தண்டனை கிடைத்ததா?
இரண்டாம் உலகப்போர் இந்த சூழ்நிலையில் முடிவுக்கு வந்ததா?
என்பதனை இந்த மிக அருமையான திரைப்படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்தப்படம் பார்த்த பாதிப்பு என்னை விட்டு இன்றும் அகலவில்லை. நிறைய கேள்விகளை இப்படம் என்னுள் எழுப்பியது. எதற்காக ஆஸ்கர் ஷிண்ட்லெர் இப்படி செய்தான் ? நாஜிக்களுக்கு யூதர்களை காப்பாற்றியது தெரிந்தால் தனக்கு மரண தண்டனை கிடைக்கும் அல்லது போர் முடிவுக்கு வந்தால் நேசநாடுகள் ஜெர்மனியை சேர்ந்த குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கும். தனக்கு சம்பந்தம் மற்றும் பிரயோஜனமில்லாத மக்களுக்காக தனது உயிரையும் உடமையும் கொடுத்த ஆஸ்கர் ஷிண்ட்லெர் போல் மன உறுதியும், தைரியமும், மனிதாபிமானமும் எனக்கு உண்டா?
சமீபத்தில் ஒரு கேள்வி பதில் பக்கத்தில் இதைப்படித்தேன்.

கேள்வி : கருணைக்கும் பரிதாபத்திற்கும் என்ன வித்தியாசம்?
பதில்   : சாலை ஓரத்தில் ஒரு சக மனிதன் விபத்தில் அடிப்பட்டு வீழ்ந்து கிடக்கும் போது "ஐயோ பாவம்? என்று சொல்லிவிட்டு தமது வேலையை பார்க்க    செல்வது - "பரிதாபப்படுவது"
அந்த மனிதனை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்ப்பது - "கருணை".

நம்மில் எத்தனை பேர் கருணை உள்ளவர்களாக இருக்கிறோம்?
இந்தப்படத்தில் இட்ஷாக் ஸ்டேர்ன் ஆகநடித்த பென் கிங்சிலீ ஒரு வசனம் கூறுவார். "ஆஸ்கர் ஷிண்ட்லெர் எங்களுடைய உயிரை மட்டும் காப்பற்றவில்லை, மனிதநேயத்தின் மேல் உள்ள எங்கள் நம்பிக்கையையும் கைப்பற்றினார்".
எவனொருவன் ஒரு மனித உயிரைக் காப்பற்றுகிறானோ அவன் மனித இனத்தையே காப்பாற்றுகிறான் என்ற ஒரு சொல் உண்டு.
ஒரு தனி மனிதனால் கூட சமூகத்தில் அன்பையும் , மாற்றத்தையும் மற்றும் மனிதநேயத்தை தழைக்கச்செய்ய முடியும் என்று காட்டிய ஆஸ்கர் ஷிண்ட்லெர் ஒரு மிகப்பெரிய ஹீரோ தான்.
போர், யுத்தம் போன்ற வார்த்தைகள் அகராதியில் இருந்து எப்போது நீங்கும்?  உலகெங்கும் சமாதனம், என்று வரும் அந்த நாள்?

நம் அனைவரின் மனதில் மனிதநேயம் மற்றும் அன்பு தழைத்தோங்க வேண்டும். ஆஸ்கர் ஷிண்ட்லெர் போல் நம் அனைவரிடம் மனிதநேயம் தழைத்தோங்கினால் நிச்சயமாக அந்த நாள் வந்தே தீரும்.
நிஜ ஆஸ்கர் ஷிண்ட்லெர்க்கு இன்றும் கூட அவரால் உயிர்ப்பிழைத்த யூதர்கள் அவரின் நினைவு நாளுக்கு கல்லறைக்கு சென்று மலரஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்தப்படம் பார்த்தே தீர வேண்டியப்படம்.


50 comments:

  1. பதிவைப் படித்ததும் படம் பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.
      கண்டிப்பாக படம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்.

      Delete
  2. Migavum arumayana varnananai.
    Viraivil padam paarkiraen.
    Neengal ezhuppia kaelvikal migavum unmai.
    Anbu Mattum than nilaithirukkum.
    Vazhthukkal. Write more.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..
      தொடர்ந்து படியுங்கள்....

      Delete
  3. Hi Friend,
    I was in tears after seeing the movie.
    Great movie. Everyone has to see this movie.
    Write about Battleship Potemkin, the Grapes of Wrath, Platoon, Full Metal Jacket.
    Awesome writing. Keep it up.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..
      நானும் நிறைய அழுதேன்....
      கண்டிப்பாக எழுதுகிறேன்
      தொடர்ந்து படியுங்கள் நண்பா..

      Delete
  4. மிக அருமையான பதிவு நண்பரே. உங்கள் தளத்துக்கு இன்றுதான் வருகிறேன். உங்களது திரைப்பட விமர்சனங்கள் அருமையாக உள்ளன. நான் ஆரம்பத்தில் எழுதிய good, bad ugly, மற்றும் schindler's list படங்களைப்பற்றி உங்களது விமர்சனங்களை தற்போது படித்தேன். வாழ்த்துகள் தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி நண்பரே.
      வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  5. ரொம்ப நாளா தள்ளிப் போய்க் கொண்டே இருக்கு. இன்னிக்கு நாளைக்குள்ள பார்த்துவிடுவேன். பார்த்துட்டு வந்து விமர்சனம் வாசிக்கிறேன். :) :)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக படம் பாருங்கள் நண்பா உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
      சரி உங்களின் Dark Knight Rises விமர்சனம் எங்கே??

      Delete
  6. மிகவும் அருமையான படம்.....இந்த படத்தின் பாதிப்பு என்னை விட்டு போக ஒரு வாரம் பிடித்தது....
    உங்கள் "கருணைக்கும் பரிதாபத்திற்கும்காண வித்தியாசம் 100/100 உண்மை...
    Steven Spielberg ஒரு யூதர்...யூதர்களின் வலியை மிகவும் தந்துருப்பமாக படம் பிடித்து இருப்பார்...
    உங்கள் விமர்சன ஸ்டைல் மிகவும் நன்றாக உள்ளது....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி ராஜ்,
      நீங்கள் சொன்னது மிகவும் சரி.
      இந்தப்படம் ரோமான்போலன்ஸ்கி இயக்க வேண்டிய படம்.
      அவரும் ஒரு யூதர் தான், ஏற்கனவே அனுபவித்த அந்த வலி மீண்டும் வேண்டாம் என்று விலகி விட்டார்.

      Delete
  7. Very good review. Great perspective.
    This incident is victory of humanity.
    Great writing.
    Spielberg at his best.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..
      உண்மை தான் நண்பா..
      தொடர்ந்து படியுங்கள்..

      Delete
  8. நல்ல அலசல் - நேரம் கிடைக்கையில் பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா...
      கண்டிப்பாக பாருங்கள்..

      Delete
  9. ஒரு நல்ல திரைப்படம், அதற்கு ஏற்ற ஒரு சிறந்த விமர்சனம்.

    ReplyDelete
  10. இப்படத்தைக் காலம் கடந்து பார்த்திருக்கிறீர்களா? அல்லது இப்போதான் விமர்சனம் எழுதுகிறீர்களா? தெரியாது.
    சிறப்பான விமர்சனம். ஸ்பீல்ஸ்பேர்க் யூதரான படியால் வலியைச் சிறப்பாக வெளிக் கொணர்ந்துள்ளார்.
    ஆனால் எத்தனை படம் வந்தாலும் போர் அழியாது, 2 வருடங்களுக்கு முன் ஒரே இரவில் 30ஆயிரம் தமிழர்கள் ஈழத்தில் கொன்று எரிக்கப்படார்கள். இன்றும் சிரியாவில் நடப்பது என்ன?
    உலகம் அழியும் வரை, உலகைச் சமநிலைப்படுத்தப் போர் இருந்தே ஆகும்போல் உள்ளது.
    நீங்கள் த பியானிஸ்ர்-The pianist (2002) படம் பார்க்கவேண்டும். Le Vieux fusil (1975) எனும் பிரெஞ்சுப் படத்தையும் பார்க்கவும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே..
      Schindler's List படம் 5 வருடங்களுக்கு முன்பே பார்த்து விட்டேன்...
      ப்ளாக் எழுத ஆரம்பித்து 2 வாரங்கள் தான் ஆகிறது. எனக்கு பிடித்த படங்களை வரிசையாக எழுதுகிறேன்..
      நீங்கள் சொல்வது சரியே.... என்றாவது உலகெங்கும் அன்பு மலர்ந்து அமைதி பூங்காவாக மாறும் என்று நம்புவோம்...
      Pianist பார்த்துவிட்டேன்... Le Vieux fusil (1975)படம் பற்றி தெரியாது.. கண்டிப்பாக பார்கிறேன் நண்பரே..
      இனி வரபோகும் பவிவுகளில் Downfall, Saving private Ryan , The life of others, Pianist பற்றி எழுத உள்ளேன் .
      தொடர்ந்து படியுங்கள்.....

      Delete
  11. Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பா..
      தொடர்ந்து படியுங்கள்...

      Delete
  12. ஏற்கனவே ரெண்டு முறை பார்த்துட்டேன் நண்பரே..இன்னொரு முறை பார்க்க தூண்டும் விமர்சனம்.
    மறக்க முடியாத காவிய படைப்பாக சொல்லலாம்...ஸ்பீல்பெர்க்கின் கலையுலக வாழ்வில் இணையற்ற படம்..
    நீண்ட நாட்களாக எழுத வேண்டுமென்று நினைத்த படத்தை ரொம்பவும் சிறப்பான வடிவத்தில் விமர்சனமாக கொடுத்திருக்கீங்க.வாழ்த்துக்கள்.நன்றி.

    ReplyDelete
  13. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...
    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்... இந்தப்படம் ரோமான்போலன்ஸ்கி இயக்க வேண்டிய படம்.அவரும் ஒரு யூதர் தான், ஏற்கனவே அனுபவித்த அந்த வலி மீண்டும் வேண்டாம் என்று விலகி விட்டார்..

    ReplyDelete
  14. சூப்பர் நண்பா நான் எதிர் பார்த்த படமொன்றை பற்றி எழுதி விட்டீர்கள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா

      Delete
  15. அருமையான படத்துக்கு அழகான விமர்சனம் நண்பா.. என்னை வெகுவாக பாதித்த கறுப்பவெள்ளைப் படங்களில் இதுவும்ஒன்று..
    தொடர்ந்தும் தரமான கிளாசிக்கல் படங்களைப்பத்தி எழுதுங்க.. ஏதாவது படம் மிஸ் பண்ணியிருந்தா அது பற்றி அறிய உதவியாய் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா
      கண்டிப்பா எழுதறேன்...

      Delete
  16. 1. இந்த படம் ஜுராசிக் பார்க் வெளிவந்து ஸ்பீல்பெர்க் எடுத்த படம்.
    2. தன்னால் இவ்வளவு யூதர்கள் காப்பாற்றப்பட்டதை அறிந்து கடைசியில் சில வசனங்கள் பேசுவார். 'இந்த கார் எனக்கு எதற்கு. இதை வைத்து இன்னும் 2 பேரை காப்பாற்றியிருக்கலாமே' என்பார். அட்டகாசமான காட்சி இது.
    3. படம் கருப்பு வெள்ளை என்றாலும், ஒரு காட்சியில் ஒரு சிறுமியின் உடை நிறம் மட்டும் சிகப்பில் இருக்கும் (Red Genia). அதற்கு காரணம், அந்த குழந்தை என்ன ஆனது என்பதை அந்த ஆடையின் மூலம் காட்சிப்படுத்தியிருப்பார்.
    4. துப்பாக்கியை டெஸ்ட் செய்ய ஒரு யூதனின் தலையில் சுட்டு டெஸ்ட் செய்யும் போது அந்த துப்பாக்கி வேலை செய்யாமல் போக, யூதனுக்கு அதிர்ஷ்டம் இருக்கே என்று கைதுப்பாக்கியை திருப்பி த்அலையில் அடித்தே கொல்லும் காட்சி, கலங்க்க வைப்பது.

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாக சொன்னீங்க....
      காட்சிகளை பற்றி நிறைய எழுதிட்ட சுவாரசியம் குறைஞ்சிடும்னு தான் எழுதலா நண்பா..

      Delete
  17. நல்ல திரைப்படம்.....அதற்கு சரியான உணர்வு பூர்வமான நல்ல விமர்சனம்.......தொடருங்கள் வாழ்த்துக்கள்.....நன்றி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...

      Delete
  18. பதிவு போட ரொம்ப சிரத்தை எடுத்திருக்கீங்க. படத்தை பார்க்கனுமா என்று நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறதே, என்ன செய்ய? நன்றி.

    ReplyDelete
  19. கண்டிப்பா பாருங்க..
    உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்..

    ReplyDelete
  20. நான் இன்னும் இந்தபப்டம் பார்க்கலை, பார்க்கனும். படம் ஸ்லோ போல ;-0

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி அண்ணா.
      பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுங்கோ அண்ணா

      Delete
  21. இந்த படம் பார்த்த பின்பு இவர் வாழ்க்கை சரிதம் படிக்க தூண்டியது. குழந்தைகள் இல்லாத இவரை மனைவியும் பிரிந்து செல்கின்றார். தனக்கு என்று செல்வம் வைத்து செல்லவில்லையே என்று வறுமையில் மனைவி இவரிடம் கோபம் கொள்கின்றார். போருக்கு பின் ஜெர்மெனியர்களின் வெறுப்புக்கு உள்ளாக்கப்பட்ட இவர் வியாபாரத்தில் நஷ்டம் காண்கின்றார். இஸ்ரயேலுக்கு குடிபெயர்ந்த யூதர்கள் இவருக்கு குறிப்பிட்ட தொகையை வாழ்வாதரத்திற்க்கு என அனுப்புகின்றனர். ஜெர்மனியில் இறந்தாலும் இவர் விரும்பத்திற்க்கு இணங்க இவர் பூத உடலை இஸ்ராயேலில் அடக்கி இன்று வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி.
      நீங்கள் சொன்னது மிகவும் உண்மை,
      உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை.
      தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன்.

      Delete
  22. கருணைக்கும், பரிதாபத்துக்கும் இடையிலான வித்தியாசம் முற்றிலும் உண்மை! இப்போதே டவுலோடு போட்டு விடுகிறேன்! இது ஸ்பீல் பேர்க் படம் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும்! பத்திட்டு வர்ரேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே, அற்புதமான படம்.
      நிச்சயம் பாருங்கள்.

      Delete
  23. பதிவை படிக்கும் போது தான் இப்படி ஒரு நல்ல படத்தை நான் தவற விட்டிருக்கிறேன் என்பது புரிகிறத...

    பதிவுக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே, அற்புதமான படம்.
      நிச்சயம் பாருங்கள்.

      Delete
  24. ஆங்கிலப் படங்களின் விமர்சனங்களை தமிழ் மக்கள் தமிழில் அறிந்துகொள்ள ஒரு அறிய வலைபூ, மிகவும் அருமை. தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே
      மிக்க நன்றி நண்பரே,
      நிச்சயமாக எழுதுகிறேன்.

      Delete
  25. ஏற்கனவே பார்த்துவிட்டேன் .. இருந்தாலும் உங்கள் பதிவை படித்ததும் மீண்டும் பார்க்க ஆர்வம வருகிறது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பா..
      எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்..
      அருமையான படம்

      Delete
  26. நெறைய ஆட்கள் வைத்து ஷூட்டிங் நடத்திய பிரமாண்டமான படம்....Ben Kingsley முகபாவங்கள் சூப்பர் liam neeson பத்தி சொல்ல வேண்டாம் பிச்சி உதரிறுப்பர்...கடைசியில் ஒரு badge குடுத்து இன்னும் சிலரை மீடிருக்கலாம்...என்று கண்கலங்கும்போது...நீங்க சொல்றது போல Humanity ஒரு ரியல் லைப் படம் இதுதான்...முன்னாடியே பாத்துட்டேன் இருந்தாலும் உங்க linka கருந்தேள் commentsla பாத்தேன்...சூப்பரா எழுதுறிங்க தலைவா.....மீண்டும் ஒருமுறை படத்தை பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டிர்கள் !

    ReplyDelete
  27. நெறைய ஆட்கள் வைத்து ஷூட்டிங் நடத்திய பிரமாண்டமான படம்....Ben Kingsley முகபாவங்கள் சூப்பர் liam neeson பத்தி சொல்ல வேண்டாம் பிச்சி உதரிறுப்பர்...கடைசியில் ஒரு badge குடுத்து இன்னும் சிலரை மீடிருக்கலாம்...என்று கண்கலங்கும்போது...நீங்க சொல்றது போல Humanity ஒரு ரியல் லைப் படம் இதுதான்...முன்னாடியே பாத்துட்டேன் இருந்தாலும் உங்க linka கருந்தேள் commentsla பாத்தேன்...சூப்பரா எழுதுறிங்க தலைவா.....மீண்டும் ஒருமுறை படத்தை பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டிர்கள் !

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே.
      மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  28. Nalla vimarsanam ezhuthirukkinga, Thanks for your review, Its u r 50th COMMENT.

    ReplyDelete